Wednesday, May 30, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன், தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், வரலாற்றில் செயல்படுகின்ற இஸ்ரயேலின் ஆண்டவரே உண்மையான கடவுள் என்பதை எடுத்துரைக்கிறது. தமது உரிமைச்சொத்தாக இஸ்ரயேல் இனத்தை தேர்ந்தெடுத்து வழிநடத்திய கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து வாழு மாறு மோசே அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழும்போதுதான், உரிமைப்பேறு பெற்றவர்களாய் இருக்க முடியும் என்று எடுத்துரைக்கிறது. பிள்ளைகளுக் குரிய மனப்பான்மையினாலே நாம் கடவுளை 'அப்பா, தந்தையே!' என அழைக்கிறோம் என்று புனித பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அப்பா, தந்தையே இறைவா,
   உமது பிள்ளைகளாகிய இறைமக்களின் மேய்ப்பர்களாக விளங்கும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், மக்களை உமக்கு உகந்தவர்களாக உருவாக்கவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ண தந்தையே இறைவா,
   இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதி யிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. வானக அரசரே இறைவா,
   உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த எண்ணங்களிலும், தங் கள் சொந்த விருப்பங்களிலும் நாட்களை செலவிடும்
எம் நாட்டு மக்கள் அனைவரும், மறுவுலக வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடிதுணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் மதம், இனம், குலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளை கள் என்ற உணர்வோடு ஒற்றுமையில் வளரத் தூண்டுதல் அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் ஒன்றித்து வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அன்பிலும் ஒற்றுமையிலும் வளரவும், உமக்கு
விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, May 25, 2012

மே 27, 2012

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:1-11
   பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி யிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலி ருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண் டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கி னார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர் கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர். "பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசபொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரை யடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கி யிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 5:16-25
   சகோதர சகோதரிகளே, தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக் கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவ தில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர் களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடு வோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவ தில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணை யால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

நற்செய்தி வாசகம்: யோவான் 15:26-27,16:12-15
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங் களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்க முதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப் படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப் பார்' என்றேன்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, May 23, 2012

மே 27, 2012

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறை ஆவிக்குரியவர்களே,
   தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, தனது சீடர்களை பலப்படுத்தும் துணையாளராக  தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித் திருந்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது. தேற்றரவாளரான தூய ஆவியாரின் ஆற்றலால் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தூ தர்கள் கிறிஸ்துவின் நற்செதியைத் துணிவுடன் பறைசாற்றி திருச்சபையை நிறுவிய நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம்.மரணத்தை தூய ஆவியின் ஆற்றலைப் பெற்ற வர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்க மாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள், திருத்தூதர் பேதுருவின் தலைமையில் நற்செய்தியைப் பறைசாற்றுவதையும், அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைவதையும் இங்கு காண் கிறோம். தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம், ஆவிக்குரிய செயல்களில் ஆர்வமாக செயல்பட வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தூய ஆவியாரின் கனிகளைப் பற்றி பேசுகிறது. ஊனியல்பின் இச்சைகளை விலக்கி, தூய ஆவியின் கனிகளை விளைவிப்பவர்களே இயேசுவுக்கு உரியவர்கள் என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆவியானவரின் வழி காட்டுதல்படி வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆவியைப் பொழிபவராம் இறைவா,
   தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும்
ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புதுவாழ்வு அளிப்பவராம் இறைவா,
   இந்த உலகில் பணம், பதவி, சிற்றின்பம் போன்றவற்றில் சுகங்களைத் தேடி, அருள் வாழ்வில் நாட்டமின்றி வாழும் மக்கள் மீது உமது புதுப்பிக்கும் ஆவியைப் பொழிந்து, விண்ணகத்தை  வாழ்வை நாடித் தேடும் மனதை அவர்களுக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நீதியின் அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் செம்மையான பாதையில் எங் களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. பிரிந்ததை இணைப்பவராம் இறைவா,
   கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியா
ரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்டு, உலகமெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மில் செயலாற்றுபவராம் இறைவா,
   எம் பங்கு சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வரும், தூய ஆவியாரின் செயல்களை எங்கள் வாழ்வில் வெளிப்படுத்தி, கிறிஸ்துவில் இணைந்து வாழத் தேவையான
அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, May 18, 2012

மே 20, 2012

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1:1-11
   தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித் தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண் பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள். அதற்கு அவர், என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்க ளுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். இவற்றைச் சொன்ன பின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந் தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண் ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 4:1-13
   சகோதர சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூல மாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், 'அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. 'ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாக வும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப் படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனை பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப் பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 16:15-20
  அக்காலத்தில் இயேசு பதினொருவருக்குத் தோன்றி அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குண மடைவர்" என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, May 16, 2012

மே 20, 2012

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறைவனில் இனியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரை யும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின்  வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே, 
     திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசு வின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவி வரும்வரை சீடர்கள் எருசலே மிலேயே தங்கியிருக்குமாறு இயேசு பணிப்பதையும், இயேசு இரண்டாம் முறையாக மீண் டும் வருவார் என்பதை வானதூதர் முன்னுரைப்பதையும் இங்கு காண்கிறோம். இயேசு வின் இரண்டாம் வருகைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உயரே ஏறிச் சென்ற கிறிஸ்துவின் விருப்பத்துக்கு ஏற்பவே, நம் ஒவ்வொருவருக்கும் அருள் வழங்கப்பட்டுள்ளது என்று புனித பவுல் எடுத்துரைக் கிறார். திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு இணைந்து, அவரது பணியை செய் யும் மறையுடலின் உறுப்புகளாக வாழும் வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எல்லாம் வல்லவராம் இறைவா,
   உமது திருமகனின் உயிப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படை யில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு
, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,
   இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ  வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தலைசிறந்த அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்களும், தலைவர்களும் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் கொள்ளவும், எங்கள் நாட்டை உமது ஆட்சிக்கு உரியதா
க்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் நாயகராம் இறைவா,
   பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால்
உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவராம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் இணைந்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு ஒன்றித்து செயல்படும் உறுப்புகளாக வாழத் தேவையான அருளாதார நலன்களை கட்டளையிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, May 11, 2012

மே 13, 2012

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10:25-26,34-35,44-48
   அந்நாள்களில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். பேதுரு, 'எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்' என்று கூறி அவரை எழுப் பினார். அப்போது பேதுரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவ ருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" என்றார். பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீ தும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கை யுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசி, கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, நம்மைப்போல தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்? என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 4:7-10
   அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்த வர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள் ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

நற்செய்தி வாசகம்: யோவான் 15:9-17
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியது: "என் தந்தை என் மீது அன்பு கொண் டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங் கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்தி ருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத் திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். 'நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்' என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என் றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற் படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என் பதே என் கட்டளை."

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, May 9, 2012

மே 13, 2012

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனின் அன்பர்களே,
   இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அன்பில் நிலைத் திருக்க இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பதுபோல, இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் இணைந்திருந்து, ஒருவர் மற்ற வரை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
   இன்றைய முதல் வாசகம், கொர்னேலியுவுக்கு பேதுரு திருமுழுக்கு வழங்கிய நிகழ் வினை எடுத்துரைக்கிறது. யூதர்கள் மட்டுமே கடவுளின் அன்புக்கு உரியவர்கள், கிறிஸ்த வர்கள் ஆகும் தகுதிபெற்றவர்கள் என்று எண்ணப்பட்டச் சூழ்நிலையில், யூதரல்லாத பிற இனத்தவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்ததைக் காண்கிறோம். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவரது அருள் வரங்களைப் பெற்று மகிழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், கடவுளிடம் இருந்து வரும் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வாழ்வு பெறும் பொருட்டு, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பிய கடவுளின் செயலிலேயே அன்பின் தன்மை விளங்குகிறது என்று திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இறைவனிடமும் பிறரிடமும் நாம் செலுத்தும் அன்பால், பாவங்களை வெல்லும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. அன்பே உருவான இறைவா,
  
திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறன்பிலும் வளர, தேவை யான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ் மையுடன் மன்றாடுகிறோம்.
2. அன்பின் நிறைவே இறைவா,
   உமது அன்பை வெளிப்படுத்த, இந்த உலகில் தோன்றிய உம் திருமகன் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, அவர் வழியாக உம்மை அன்பு செய்யும் வரத்தை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை
த் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
3. அன்பின் அரசரான இறைவா,
   எங்கள் நாட்டு மக்களிடையே, உம்மைப் பற்றிய விழிப்புணர்வு பெருகவும், உமது அன்பின் அரசில் ஒன்றிணையும் ஆர்வம் வளரவும், அதன் வழியாக எம் நாட்டில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைவு காணவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

4. அன்பின் பிறப்பிடமே இறைவா,
   உலகில் அன்பின்மையால் உருவாகியுள்ள அனைத்து தீமைகளும் முடிவுக்கு வரவும், இறையன்பும் பிறரன்பும் மக்களிடையே வளர்ச்சி காணவும், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கவும் உதவ வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

5. அன்பு தந்தையே இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் அன்பும் ஒற்றுமையும் பெருகவும், அன்பு செயல்கள் வளரவும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, உமது அன்பில் நிலைத்திருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை
த் தாழ் மையுடன் மன்றாடுகிறோம்.

Friday, May 4, 2012

மே 6, 2012

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 9:26-31
   அந்நாள்களில் சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருச லேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார் கள். யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 3:18-24
   பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள் வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்ற வாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெ னில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற் றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம் மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

நற்செய்தி வாசகம்: யோவான் 10:11-18
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியது: "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தா லன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தா லன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது."

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, May 2, 2012

மே 6, 2012

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனில் இனியவர்களே,
   திராட்சைச் செடியாம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நமது வாழ்வு இறைவனோடு இணைந்ததாக இருக்க வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டு கிறது. திராட்சைச் செடியாகிய இயேசுவோடு இணைந்த கொடிகளாக இருந்து, பலன் தருமாறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இறைவனின் அழைப்பை உணர்ந்தவர்களாய், இறையன்பில் நிலைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இனியோரே,
   இன்றைய முதல் வாசகம், கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்த சவுல், இயேசுவோடு இணைந்தது பற்றிய செய்தியை நமக்கு தருகிறது. எருசலேம் கிறிஸ்தவர்கள் சவுலை ஏற்க மறுத்தபோது, பர்னபா அவருக்கு துணை நிற்கிறார். இயேசுவில் இணைந்து பலன் தந்த பவுலைப் போல, நாமும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழும்
வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியோரே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நமது அன்பை செயலில் வெளிப்படுத்த அழைப்பு விடுக்கிறது. குற்றமற்றவர்களாய் வாழும்போது, நாம் கடவுளின் திருமுன் உறுதியான நம்பிக்கையுடன் நிற்க முடியும் என்று
திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாய், மற்றவர்களை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வழிகாட்டுபவராம் இறைவா,
  
திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை மக்களை உமது அன்பில் இணைந்து வாழுமாறு வழிநடத்தும் அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. துணையாளராம் இறைவா,
   உமது அன்பைப் புறக்கணித்து, தங்கள் மன விருப்பங்களுக்கு ஏற்ப தன்னலத்தோடு வாழும் மக்கள் அனைவரும், உமது திருமகன் வழியாக உம்மில் நம்பிக்கைகொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. இணைப்பாளராம் இறைவா,
   எங்கள் நாட்டில் பெருகிவரும் லஞ்சம், ஊழல், வன்முறை, தீவிரவாதம் போன்றவை மறைந்து,
மக்கள் அனைவரும் அன்பினால் ஒன்றிணைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிப்பவராம் இறைவா,
   உலகில் தீய குணங்களாலும், தீயப் பழக்கங்களாலும், நோய்களாலும், மன அமைதி யின்றி வாழ்வோர் அனைவருக்கும் உமது அன்பினால் ஆறுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிழ்வளிப்பவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவுடன் இணைந்த திராட்சைக் கொடிகளாய் வாழ்ந்து, உமக்கு ஏற்ற வகையில் பல
ன்தர உமது அருள் வரங்களை எம்மில் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.