Friday, December 28, 2012

டிசம்பர் 30, 2012

திருக்குடும்பம் விழா

முதல் வாசகம்: 1 சாமுவேல் 1:20-22,24-28
   உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" என்று சொல்லி, அவர் அவனுக்குச் 'சாமுவேல்' என்று பெயரிட்டார். எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், "பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்" என்று சொன்னார். அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: "என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்." அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 3:1-2,21-24
   அன்பார்ந்தவர்களே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:41-52
   ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். 

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Friday, December 21, 2012

டிசம்பர் 23, 2012

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: மீக்கா 5:2-5
   ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத் தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும் போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சி யோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 10:5-10
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, "பலியையும் காணிக்கையை யும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதி லும், "நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளை யும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகி றார். பின்னர், "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின் னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:39-45
   அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென் றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சி யால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப் போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற் றவர்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, December 19, 2012

டிசம்பர் 23, 2012

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. கடவுளின் பெயரால் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் மீட்பரின் வருகையை எதிர்நோக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இயேசுவை வயிற்றில் சுமந்தவராய் சென்ற கன்னி மரியாவை சந்தித்த எலிசபெத்தும், யோவானும் அடைந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் அழைக்கப்படு கிறோம். வரவிருக்கும் நம் ஆண்டவரும் அமைதியின் அரசருமான இயேசுவை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்க தயாராவோம். நிகழவிருக்கும் கிறிஸ்து பிறப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டுமென்று, இந்த திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் சார்பாக இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் பெத் லகேமில் பிறப்பார் என்ற இறைவாக்கை எடுத்துரைக்கிறது. எஞ்சியிருக்கும் மக்களினத் தார் அனைவரும் ஆண்டவரின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்பது முன்னறிவிக்கப் படுகிறது. அப்போது மாட்சியோடும் வல்லமையோடும் கிறிஸ்து அரசாள்வார் என்பதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம். மேன்மை பொருந்திய ஆண்டவரின் அரசில், அமைதியை சுவைப்பவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், இறைத்தந்தையின் திருவுளம் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியதைக் குறித்து எடுத்துரைக்கிறார். தமது அன்பு கட்ட ளைகள் நிலைத்து நிற்பதற்காக, தமக்கு முன்னிருந்த கொடூரமான பழி வாங்கும் சட்டங் களை கிறிஸ்து நீக்கிவிட்டதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசுவின் தியாகப் பலியால் தூயவராக்கப்பட்டிருக்கும் நாம், அவரைப் பின்பற்றி பிறருக்காக நம்மை அர்ப் பணிப்பதில் மகிழ்ச்சி காண வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிறைவு தருபவராம் இறைவா, 
   அமைதியின் அரசராம் எங்கள் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியை யும் கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பேருவகை அளிப்பவராம் இறைவா,
   உ
ம் திருமகனின் பிறப்பு விழாவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உலக மக்கள் அனைவரும், தங்கள் மனமாற்றத்தின் வழியாக புதுவாழ்வு காணவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடையவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
   எம் நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், மக்களை நேரிய வழியில் நடத்த வும், மக்களிடையே தோன்றும் பிரிவினைகளை ஊக்குவிக்காமல் ஒற்றுமையை உரு வாக்கவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலம் நல்குபவராம் இறைவா,
   மனம் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் துன்புறுவோரும், வறுமை, கடன் சுமை உள்ளிட்ட உலகு சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளோரும் வேதனை நீங்கி புது வாழ்வு காண அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. பேரன்பின் ஊற்றாம் இறைவா,
   கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக தயாராகி வரும் எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரி கள், பங்கு மக்கள் அனைவரும் உமது பகிர்தலையும், உம் திருமகனின் தியாகத்தையும் உணர்ந்து தூய வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, December 14, 2012

டிசம்பர் 16, 2012

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: செப்பனியா 3:14-17
   மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருச லேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப் பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந் நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: "சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின் றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்."
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 4:4-7
   சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறு கிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவு ளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தை யும் பாதுகாக்கும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 3:10-18
   அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, "நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழி யாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார். வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, "போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர். அவர், "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்'' என்றார். படைவீரரும் அவரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அவர், "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்'' என்றார். அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப் பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர் கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கி றேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோது மையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, December 12, 2012

டிசம்பர் 16, 2012

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அண்மையில் உள்ளதை நினைத்து அகமகிழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள அனைத்தையுமே பிறரோடு பகிர்ந்து வாழ திருமுழுக்கு யோவான் நம்மைத் தூண்டுகிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.'' தூய ஆவி என்னும் நெருப்பால் நமக்கு திருமுழுக்குக் கொடுக்கும் வலிமைமிக்க ஆண்டவரின் வருகைக்காக நாம் காத்திருக் கிறோம். அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிக்கப்படும் பதராக இல்லாமல், அவருடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியால் ஆர்ப் பரித்து, ஆரவாரம் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் நம் நடுவில் இருப்ப தால், நாம் அச்சம் கொள்ளவோ, சோர்வடையவோ தேவையில்லை என்பதை தெளிவு படுத்துகிறது. இஸ்ரேலின் அரசராகிய ஆண்டவரின் அரவணைப்பில் வாழ்வோர் பேறு பெற்றோர். தம் அன்பினால் புத்துயிர் அளிக்கும் ஆண்டவரைக் குறித்து ஆடிப்பாடி மகிழ நாம் அழைக்கப்படுகிறோம். மீட்பு அளிக்கும் ஆண்டவரில் களிகூர்ந்து வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டவரில் இணைந்தவர்களாய் மகிழ்ந்திருக்க அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்துவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்யும் வகையில், நன்றியோடு கூடிய இறைவேண்டலில் நிலைத்திருக்க நம்மை அழைக்கிறார். நமது கனிந்த உள்ளத்தால், எல்லா மனிதருக்கும் கிறிஸ்துவை பறைசாற்ற உறுதி ஏற்போம். அறிவெல்லாம் கடந்த இறை அமைதியை நம் உள்ளத்தில் சுவைக்க வரம் கேட்டு, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மகிழ்ச்சி தருபவராம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது திருமக னின் அருளால் நிரப்பி, நிலை வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மில் மகிழ்ந் திருக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. கனிவு மிகுந்தவராம் இறைவா,
   
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், உமது அரசை விரும்பித் தேடவும், நீதி மற்றும் உண்மையின் வழியில் மக்களை வழிநடத்தவும் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புனிதத்தின் ஊற்றாம் இறைவா,
   எம் நாட்டு மக்களை தவறான வழியில் வழிநடத்தி, உமது நற்செய்தி பரவ தடையாக இருக்கும் உண்மைக்கு எதிரான அமைப்புகள் அழிந்தொழிய அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணம் அளிப்பவராம் இறைவா,
   உலகின் இன்பத்தை நாடி தீய நாட்டங்களுக்கும், தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங் களுக்கும் அடிமைகளாகி தவிப்போர், நிலையான மகிழ்ச்சி தருபவராம் உம்மை சரண டைய வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புத்துயிர் அருள்வராம் இறைவா,
   உமது அன்பின் அரவணைப்பை பெற்றவர்களாய் என்றும் மகிழ்ந்திருக்கும் வரத்தை எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: பாரூக்கு 5:1-9
   எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அரு ளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்துகொள்; என்றும் உள்ளவரின் மாட்சியை மணிமுடி யாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். 'நீதியில் ஊன்றிய அமைதி', 'இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி' என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவுகூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார். பகை வர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னை விட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படு வார்கள். கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்து வரும்பொருட்டு, உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப் படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3:4-6,8-11
   சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன் றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகி றேன். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக் கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தை யும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற் றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டு மென்றே இவ்வாறு செய்கிறேன்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 3:1-6
   திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயா வின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண் டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங் கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனை வரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, December 5, 2012

டிசம்பர் 9, 2012

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்துவின் வருகைக்காக தயாரிக்கும் நாம், இன்று திரு முழுக்கு யோவானின் அழைப்பை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் வகையில், மனம்மாற வேண்டுமென யோவான் நமக்கு அழைப்பு விடுக் கிறார். ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யும் வகையில், கோணலானவை அனைத்தும் நேராக்கப்பட வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் தூயவராக நிற்குமாறு, நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வாழ இன்றைய திரு வழிபாடு நம்மை அழைக்கிறது. ஆண்டவருக்காக நமது பாதையைச் செம்மையாக்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் கடவுளின் பிள்ளைகளாக வாழ்வோர் பெறும் மாட்சியின் பேரழகை பற்றி எடுத்துரைக்கிறது. ஆண்டவரிடம் இருந்து வரும் நீதியை நாம் ஆடையை அணிந்துகொள்ளும் பொழுது, அவரது மாட்சியை நாம் மணிமுடியாக சூடிக்கொள்ள முடியும் என்ற வாக்குறுதி இங்கு தரப்படுகிறது. ஆண்டவரின் பாதையில் நடப்போரின் பாதுகாப்புக்காக, குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் சமதளமாக்கப்படும் என்ற இறைவாக் கினை காண்கிறோம். கடவுளின் ஒளியில் அவரது இரக்கத்திலும், நீதியிலும் மகிழ்ச்சி யுள்ளவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத் துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவு ளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் வாழ வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டு கிறார். கிறிஸ்து இவ்வுலகிற்கு மீண்டும் வரும் நாள் வரை, நாம் கடவுளைப் பற்றிய அறி விலும், அன்பு மற்றும் நற்செயல்களுடன் கூடிய பண்பிலும் மேன்மேலும் வளர வேண்டு மென்று அறிவுறுத்துகிறார். நாம் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று, குற்றமற்றவர் களாக நேர்மையோடு வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவராம் இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக உமக்காக வழியை ஆயத்தம் செய்பவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறை வாகப் பொழிந்து, புனிதத்தில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி நிறைந்தவராம் இறைவா,
   
மக்களிடையே இரக்கமும், நீதியும், அன்புடன் கூடிய நற்செயல்களும் பெருக உழைக் கும் நல்ல மனதினை உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புனிதம் மிகுந்தவராம் இறைவா,
 
புனிதத்துக்கு எதிராக எம் நாட்டில் நிலவும் ஒழுக்க கேடுகளும், பொய்யான வழிபாடு களும் மறையும் வகையில் மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் நிறைந்தவராம் இறைவா,
   அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளால் பல்வேறு துன்பங் களுக்கு ஆளாகியிருக்கும் மக்கள் மீது பரிவு கொண்டு, அவர்களது வேதனை நீங்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மை மிகுந்தவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் நீதியின் செயல் களால் நிரப்பப்பெற்று, குற்றமற்றவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, December 1, 2012

டிசம்பர் 2, 2012

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 33:14-16
   இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டா ருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' - அதாவது 'ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 3:12-4:2
   சகோதர சகோதரிகளே, உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவது போல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்ற மின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! சகோதர சகோதரிகளே, நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களி டம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 21:25-28,34-36
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுல கில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வ தென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வரு வதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினா லும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்க ளைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக் கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3