Thursday, May 30, 2013

ஜூன் 2, 2013

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். ஈசாக்கின் பலியும், பாஸ்கா செம்மறியும் நம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை பலியை முன்குறிப்பவையாக இருந்தன. கிறிஸ்துவின் சிலுவை பலியை எக்காலத்துக்கும் நிலைநிறுத்தும் அடையாளமாக, அவர் நமக்கு நற்கருணையை ஏற்படுத்தி தந்துள்ளார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து ஆயிரக் கணக்கானோரின் பசியாற்றிய இயேசு, நற்கருணை வழியாக தம்மையே நமக்கு உண வாக தருகிறார். கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் மறைந்திருக்கும் கிறிஸ் துவின் உடனிருப்பை முழுமையாக நம்பி, அவரைப் போன்று மற்றவர்களின் நலனுக்காக நம்மையே பகிர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.


முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், உன்னத கடவுளின் அர்ச்சகரான சாலேம் அரசர் மெல்கி செதேக்கு, ஆபிரகாமுக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்த நிகழ்வை எடுத் துரைக்கிறது. மெல்கிசேதேக்கு ஆபிரகாமின் வெற்றிக்காக கடவுளைப் போற்றுவதையும், ஆபிரகாம் தனது உடைமைகளில் இருந்து பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுப்ப தையும் காண்கிறோம். நித்திய தலைமைக் குருவாம் இயேசு தரும் வாழ்வளிக்கும் உண வையும் பானத்தையும் பெற தகுதி உள்ளவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு கவனமாக செவிடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நற்கருணை விருந்தாக மட்டு மின்றி கிறிஸ்துவின் பலியாகவும் இருக்கிறது என்பதை விளக்குகிறார். கிறிஸ்துவின்
கல்வாரி பலிக்கு அடையாளமாக நற்கருணை உள்ளதை புரிந்துகொள்ள நாம் அழைக்கப் படுகிறோம். இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவ ருடைய சாவை அவர் வரும்வரை நாம் அறிவிக்கிறோம் என பவுல் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குபெறும் நாம், அவரது மறையுடலின் உறுப்பு களாக ஒன்றித்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கும் இருப்பவராம் இறைவா,
  
ம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவா சத்தில் வளர்க்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மை யையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உத
விபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவாம் இறைவா,
   எம் நாட்டு தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க் கவும்
துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் அளிப்பவராம் இறைவா,
   உலகில் பல்வேறு அச்சுறுத்தல்களாலும், துன்புறுத்தல்களாலும் வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி நிற்கும் மக்களுக்கு, தேவையான ஆறுதலும் உதவியும்
கிடைக்குமாறு அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமாம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளர
உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 25, 2013

மே 26, 2013

மூவொரு இறைவன் பெருவிழா

முதல் வாசகம்: நீதிமொழிகள் 8:22-31
   இறைவனின் ஞானம் கூறுவது: "ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல் பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப் படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல் மண் துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். உலகத் தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்த போது, நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லை யைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச் சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்."
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5:1-5
   சகோதர சகோதரிகளே, நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடை யவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என் னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அதுமட்டும் அல்ல, துன்பங் களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது.

நற்செய்தி வாசகம்: யோவான் 16:12-15
  அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களிடம் சொல்ல வேண்டி யவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்ப தையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தை யுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 23, 2013

மே 26, 2013

மூவொரு இறைவன் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாகிய இறைவனின் இயல்புக்கு திருச்சபை இன்று விழா எடுக்கிறது. மனிதரை தமது சாயலாக படைத்த இறை வன், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று இறையாட்களாக மீட்பின் வரலாற்றில் தம்மை வெளிப்படுத்துகிறார். வாக்கான இறைமகனை நித்தியத்திற்கும் பிறப்பிக்கும் இறைத்தந்தை, இறைத்தந்தையின் நித்திய வாக்கான இறைமகன், இருவரிடமிருந்தும் புறப்படும் தூய ஆவி என மூன்று இறையாட்களுக்கும் திருச்சபை விளக்கம் அளிக்கிறது. தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார். மூவொரு இறைவனின் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் அவரது சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், உலகை படைத்தவராம் இறை ஞானத்தின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. தொடக்கத்தில், பூவுலகு உருவாகும் முன்னே, ஆண்டவர் ஞானத்தை நிலைநிறுத்தினார். கடல்களும், பொங்கி வழியும் ஊற்றுகளும் தோன்றும் முன்பும், மலைகளும், குன்றுகளும், பரந்தவெளிகளும் உண்டாகும் முன்பும் ஞானம் பிறந்த செய்தி நமக்கு வழங்கப்படுகிறது. படைப்புகள் அனைத்தின் சிற்பியாய் இறைவனின் ஞானம் இருந்ததை உணர நாம் அழைக்கப்படுகிறோம். எல்லாம் வல்லவரான மூவொரு இறை வனின் மேன்மையை உணர்ந்து, அவரது நம்பிக்கைக்கு உரியவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இயேசு கிறிஸ்துவின் வழியா கவே நாம் கடவுளோடு நல்லுறவு கொள்ளும் அருள் நிலையைப் பெற்றிருக்கிறோம் என எடுத்துரைக்கிறார். நாம் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால், கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்ற எதிர்நோக்குடன் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்ள அழைக்கப்படுகிறோம். தூய ஆவியாரின் வழியாக நம் உள்ளங் களில் பொழியப்பட்டுள்ள கடவுளின் அன்பை, பிறரோடு பகிர்ந்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அப்பா, தந்தையே இறைவா,
   திருச்சபையின் மக்களை வழிநடத்தும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உலக மக் களை ம்மிடம் ஈர்க்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ண தந்தையே இறைவா,
   இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்று மையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. வானக அரசரே இறைவா,
   உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த தங்கள் சொந்த விருப்பங் களி
ல் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேதுணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் மதம், இனம், மொழி, பண்பாடு என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையில் வளர
உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் மீதான விசுவா சத்தி
லும் அன்பிலும் வளரவும், உமக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவை யான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 18, 2013

மே 19, 2013

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:1-11
   பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி யிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலி ருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண் டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கி னார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர் கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர். "பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசபொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரை யடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கி யிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:8-17
   சகோதர சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்து வின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடி கொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டி ருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்க ளைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாக கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளை கள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர் களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்து வின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெறவேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

நற்செய்தி வாசகம்: யோவான் 14:15-16,23-26
  அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப் பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்ப தில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப் பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணை யாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்க ளுக்கு நினைவூட்டுவார்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 16, 2013

மே 19, 2013

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறை ஆவிக்குரியவர்களே,
   தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, தனது சீடர்களை பலப்படுத்தும் துணையாளராக  தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித் திருந்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது. தேற்றரவாளரான தூய ஆவியாரின் ஆற்றலால் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தூ தர்கள் கிறிஸ்துவின் நற்செதியைத் துணிவுடன் பறைசாற்றி திருச்சபையை நிறுவிய நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். திருத்தூதர்களைப் போன்று தூய ஆவியாரின் ஆற்றலைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக, இத்திருப்பலி யில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள், திருத்தூதர் பேதுருவின் தலைமையில் நற்செய்தியைப் பறைசாற்றுவதையும், அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைவதையும் இங்கு காண் கிறோம். தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம், ஆவிக்குரிய செயல்களில் ஆர்வமாக செயல்பட வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஊனியல்புக்கு ஏற்ப வாழாமல் கடவுளின் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டு வாழ அழைப்பு விடுக்கிறார். ஆண்டவரின் ஆவி நம்மில் இருந்தால், கிறிஸ்துவைப் போன்று நாமும் உயிர்பெற்று எழுவோம் என்ற நம்பிக்கை நமக்கு வழங்கப்படுகிறது. தூய ஆவியாரின் தூண்டுதலால், கடவுளை 'அப்பா, தந்தையே' என்று உரிமையோடு அழைக்கும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவன முடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆவியைப் பொழிபவராம் இறைவா,
   தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும்
ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புதுவாழ்வு அளிப்பவராம் இறைவா,
   இந்த உலகில் பணம், பதவி, சிற்றின்பம் போன்றவற்றில் சுகங்களைத் தேடி, அருள் வாழ்வில் நாட்டமின்றி வாழும் மக்கள் மீது உமது புதுப்பிக்கும் ஆவியைப் பொழிந்து, விண்ணகத்தை  வாழ்வை நாடித் தேடும் மனதை அவர்களுக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நீதியின் அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் செம்மையான பாதையில் எங் களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. பிரிந்ததை இணைப்பவராம் இறைவா,
   கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியா
ரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்டு, உலகமெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மில் செயலாற்றுபவராம் இறைவா,
   எம் பங்கு சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வரும், தூய ஆவியாரின் செயல்களை எங்கள் வாழ்வில் வெளிப்படுத்தி, கிறிஸ்துவில் இணைந்து வாழத் தேவையான
அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 11, 2013

மே 12, 2013

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1:1-11
   தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித் தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண் பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள். அதற்கு அவர், என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்க ளுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். இவற்றைச் சொன்ன பின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந் தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண் ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 1:17-23
   சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தி னார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங் கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
(அல்லது) எபிரேயர் 9:24-28,10:19-23
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மை யான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார் பாக கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய் திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற் றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலி யாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலி யாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்ப வர்களுக்கு மீட்பு அருளும்பொருட்டே தோன்றுவார். சகோதரர் சகோதரிகளே, இயேசு வின் உடலைக் கோவிலின் திரைச் சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒரு வர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச்செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். 

நற்செய்தி வாசகம்: லூக்கா 24:46-53
  அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்" என்றார். பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கி விட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 9, 2013

மே 12, 2013

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரை யும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனிடம் செல்கிறார். தூய ஆவியாரின் துணையோடு உலகெங்கும் நற்செய்தியை பறைசாற்றி, கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியை பிறருக்கு அறிவிக்க இயேசு நம்மை அழைக்கிறார். ஆண்டவருக்கு சான்று பகரும் வகை யில் மனந்திரும்பிய புதுவாழ்வு வாழ, இத்திருப்பலியில் நாம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
     திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசு வின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடையும் முன், இறைத்தந்தையின் வாக்குறுதியாகிய தூய ஆவியாரின் வருகைக்காக காத்திருக்குமாறு சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். உலகின் கடையெல்லை வரைக்கும் இயேசுவுக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு உலகின் முடிவில் மீண்டும் வருவார் என்ற முன் னறிவிப்பு வானதூதர்கள் வழியாக வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் வல்லமையாகிய தூய ஆவியாரின் வருகைக்கு நம்மைத் தயார் செய்யும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
  புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இடம்பெறும் இன்றைய இரண்டாம் வாசகம், நம்மில் செயலாற்றும் இறை வல்லமையின் மேன்மையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்த இயேசு, அனைத்துக்கும் மேலான மாட்சியைப் பெற்றிருப்பதை புனித பவுல் எடுத்துரைக்கிறார். தலையாகிய கிறிஸ்துவுக்கு பணிந்து அவரது உடலாக வாழ திருச் சபையின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வழியாக கடவுள் அளிக்கும் உரிமைப்பேற்றை நிறைவாகப் பெற வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.
மாற்று வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
  எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் இருந்து இடம்பெறும் இன்றைய இரண்டாம் வாசகம், மக்களுக்காக பரிந்து பேசும் தலைமைக் குருவாக இயேசுவை சுட்டிக்காட்டு கிறது. நமது பாவங்களைப் போக்கும் பொருட்டு, கிறிஸ்து தம்மையே ஒரு நிலையான பலியாக செலுத்தினார் என்பதை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது. இறைத்தந்தை யின் திருவுளத்தை நிறைவேற்றி விண்ணகத்திற்குள் நுழைந்திருக்கும் இயேசு, நமக்கு மீட்பு வழங்க மீண்டும் ஒருமுறை தோன்றுவார் என்ற நம்பிக்கை தரப்படுகிறது. நேரிய உள்ளத்தோடும், உறுதியான நம்பிக்கையோடும் ஆண்டவரைப் பின்பற்ற வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம். 

இறைமக்கள் மன்றாட்டு:
1. எல்லாம் வல்லவராம் இறைவா,
   உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படை யில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு
, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,
   இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ  வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தலைசிறந்த அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்களும், தலைவர்களும் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் கொள்ளவும், எங்கள் நாட்டை உமது ஆட்சிக்கு உரியதா
க்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் நாயகராம் இறைவா,
   பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம் மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால்
உலகெங்கும் நற்செய்தியைப் பறை
சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவராம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் இணைந்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு ஒன்றித்து செயல்படும் உறுப்புகளாக வாழத் தேவையான அருளாதார நலன்களை கட்டளையிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, May 4, 2013

மே 5, 2013

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 15:1-2,22-29
   அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது'' என்று சகோதரர் சகோ தரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், "திருத்தூ தரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். இன்றியமையாத வற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்'' என்று எழுதியிருந்தார்கள்.

இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 21:10-14,22-23
   தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங் கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந் தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட் டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந் தன. நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிர வனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட் டியே அதன் விளக்கு.

நற்செய்தி வாசகம்: யோவான் 14:23-29
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண் டாம்; மருள வேண்டாம். 'நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னை விடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழும் முன்பே, சொல்லிவிட்டேன்."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, May 2, 2013

மே 5, 2013

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அமைதியை கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு வின் மீது அன்பு கொண்டு, அவர் சொல்வதைக் கடைப்பிடித்து வாழவும், அதன் வழியாக இறைத்தந்தையின் அன்பைப் பெறவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் மீது கொள்ளும் அன்பின் ஆற்றலால் வழங்கப்படும் அமைதியை சுவைக்க இயேசு நம்மை அழைக்கிறார். தூய ஆவியாரின் வழிகாட்டுதலால், உலகம் தரும் அமைதிக்கு மேலாக கிறிஸ்து அருளும் அமைதியை வாழ்வில் உணரும் வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், திருச்சபையின் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமு றைகள் பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கிறது. யூதரல்லாத பிற இனத்து கிறிஸ்தவர்கள் மீட்படைய விருத்தசேதனம் தேவையா என்பது குறித்த சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என திருத்தூதர்கள் முடிவு செய்கிறார்கள். சிலை களுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, பரத்தைமை ஆகியவற்றை தவிர்க்குமாறு, தூய ஆவியாரின் தூண்டுதலால் திருத்தூதர்கள் அறிவுறுத் துவதைக் காண்கிறோம். தூய ஆவியாரின் செயலால் இயங்கும் திருச்சபைக்கு அமைதி யுடன் கீழ்ப்படியும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த யோவானின் காட்சியை நமக்கு எடுத்துரைக்கிறது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளி வீசிய அந்த நகருக்கு பன்னிரண்டு வாயில்கள் இருந்ததாகவும், அவற்றில் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் வாசகம் விளக்குகிறது. திருச்சபையைக் குறிக் கும் அந்நகரின் பன்னிரு அடிக்கற்களில் திருத்தூதர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந் தன. நகரின் கோயிலாக ஆட்டுக்குட்டியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே விளங் கியதாக காண்கிறோம். மாட்சிமிகு விண்ணகத் திருச்சபையின் மக்களாக அமைதியில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. அமைதியின் ஊற்றே இறைவா,
   பலவித அச்சுறுத்தல்களால் துன்புற்றுத் துடிக்கும் உமது தி
ருச்சபையை கனிவுடன் கண்ணோக்கி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக அமைதியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் அரசே இறைவா,
  உலகப் பொருட்கள் மீதுள்ள ஆசையாலும், அதிகாரத்தை நிலைநாட்ட துடிப்பதாலும், போர், வன்முறை ஆகியவற்றின் வழியாக அமைதியை சீர்குலைக்கும் தலைவர்கள் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. அமைதியின் நிறைவே இறைவா, 
   எங்கள் நாட்டு மக்களிடையே, சாதி, மதம், மொழி, நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையைத் தூண்டுவோர் மனந்திரும்பவும், இந்திய மக்கள் அனைவரும் உம்மில் நிறைவு காணவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதி தருபவரே இறைவா,
   உலகெங்கும் நோய், பசி, வறுமை, அடக்குமுறை போன்றவற்றால்
மனக்கலக்கம் அடைந்து வருந்துகின்ற அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அமைதியின் தந்தையே இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரிடமும் அன்பும் ஒற்றுமையும் பெருகவும், நாங்கள் உமது நிறை அமைதியில் மகிழ்ச்சி காணவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.