Thursday, August 29, 2013

செப்டம்பர் 1, 2013

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கைம்மாறுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து கிடைக்கும் கைம்மாறுக்காக பணி வோடும் பெருந்தன்மையோடும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கி றது. தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்து வோர் உயர்த்தப் பெறுவர் என்று இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார். பணத்தையும், பதவியையும், புகழையும் விரும்பித் தேடாமல், தாழ்ச்சியோடு வாழுமாறு ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இருப்பவர்களோடு உறவு பாராட்டுவதைக் காட்டிலும் இல் லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வதற்கு முதலிடம் அளிக்குமாறு நாம் அழைக்கப்படுகி றோம். பணிவும் பகிர்வும் நிறைந்த வாழ்வு மூலம், கடவுள் தரும் கைம்மாறைப் பெற்று மகிழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கைம்மாறுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், தாழ்ச்சியோடு நடப்பதன் வழியாக ஆண்டவரின் பரிவைப் பெற முடியும் என்னும் கருத்தை டுத்துரைக்கிறது. தாழ்ச்சியால் நாம் கடவுளுக்கு உகந் தோரின் அன்பை பெறுவது மட்டுமின்றி, ஆண்டவருக்கு மாட்சி அளிப்பவர்களாகவும் திகழ்கிறோம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். நாம் இறுமாப்பு கொள்ளும் வேளை யில், நம்மில் தீமையை அனுமதிக்கிறோம் என்பதை உணருமாறும் வாசகம் எச்சரிக்கை விடுக்கிறது. நாம் தாழ்ச்சியால் ஞானத்தை அடைந்து, ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கைம்மாறுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், வாழும் கடவுளின் நகரான விண்ணக எருசலேமைப் பற்றி பேசுகிறதுசீனாய் மலை மேல் காட்சியளித்தது போல ஆண்டவர் அச்சம் தருபவ ராய் இங்கு தோன்ற மாட்டார் என வாசகம் எடுத்துரைக்கிறது. விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை கூடும் இடமாக விண்ணக எருச லேம் இருக்கிறது என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். தூய வாழ்வால் நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலை யில் நாமும் துணிவுடன் நிற்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. கைம்மாறு அளிப்பவரே இறைவா,
   உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்க ளுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. உயர்ந்தோரை தாழ்த்துபவரே இறைவா,
   
பணம், பதவி, புகழ் போன்றவற்றுக்கு அடிமையாகி, மக்களின் நலன்களை புறக்கணித்து வாழும் உலக நாடுகளின் தலைவர்கள் மனந்திரும்பி, உமது திருவுளத்தை செயல்படுத்து பவர்களாய் வாழத் தேவையான மனமாற்றத்தை தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. தாழ்ந்தோரை உயர்த்துபவரே இறைவா,
   கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்களை சிறப்பாக மேன் மைப்படுத்தி, உம்மை அறியாமல் வாழும் பெரும்பான்மை மக்களிடையே மனமாற்றம் ஏற்படத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. எச்சரிக்கை தருபவரே இறைவா,
   உலகில் இறுமாப்பு, தற்பெருமை, சீற்றம், பகையுணர்வு போன்ற தீமைகளால் சமூக வாழ்வுக்கு அச்சுறுத்தலாக வாழும் அனைவரும் மனம் திரும்பி, தாழ்ச்சியோடும் பெருந் தன்மையோடும் மற்றவர்களை ஏற்று வாழ உதவிடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. வாழ்வை வழங்குபவரே இறைவா,
  
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பணிவுக்கும், பகிர் வுக்கும் அழைப்பு விடுக்கும் உம் திருமகனின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, விண்ண கத்தை உரிமையாக்கிக்கொள்ள துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 24, 2013

ஆகஸ்ட் 25, 2013

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 66:18-21
   ஆண்டவர் கூறியது: மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வரு வேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடை யாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள். அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவ ரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலா கக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களை குதிரைகள், தேர்கள், பல் லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். மேலும் அவர்களுள் சிலரை குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12:5-7,11-13
   சகோதர சகோதரிகளே, தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: "பிள்ளாய், ஆண்டவர் உன் னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும் போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்ட வர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'' திருத்தப்படு வதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைக ளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப் படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ் வையும் பயனாகப் பெறுவர். எனவே, "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள் ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 13:22-30
   அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக் கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன் றும் இயலாமற்போகும். 'வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, 'நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத் தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கி னர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்ப தையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Saturday, August 17, 2013

ஆகஸ்ட் 18, 2013

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 38:4-6,8-10
   அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, "இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண் டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை'' என்றார்கள். அதற்கு அரசன் செதேக் கியா, "நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக் கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே'' என்றான். எனவே அவர்கள் எரேமியா வைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்கிணற் றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கி னார். எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, "என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெ னில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது'' என்று கூறினார். அதைக் கேட்ட அரசன் எத்தி யோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, "உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட் டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கி விடு'' என்று கட்டளையிட்டான்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12:1-4
   சகோதர சகோதரிகளே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோ மாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண் டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:49-53
   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயி னும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்க ளுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவ ரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக் கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, August 15, 2013

ஆகஸ்ட் 18, 2013

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பிரிக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவருக்கு உரியவர்களாக தனித்துவத்துடன் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் இந்த உலகிற்கு உரியவற்றில் இருந்து பிரிக்கப்பட்டு, விண்ணக வாழ்வுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை முழு மையாக உணர அழைக்கப்படுகிறோம். கடவுளின் விருப்பப்படி, இவ்வுலகின் தீமைகளில் இருந்து விலகி வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்தொடரவே நாம் கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் தலைவராகிய இயேசு இவ்வுலகில் மூட்ட வந்த தீயைப் பற்றியெரியச் செய்பவர் களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பிரிக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எரேமியா கடவுளுக்காக துன்பங்களை ஏற் றுக்கொண்டதைப் பற்றி எடுத்துரைக்கிறது. யூதா நாட்டு மக்கள், வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடியப்போவதாக எரேமியா இறைவாக்கு உரைக்கிறார். மக்களை மனம் தளரச்செய்து வருவதாக எழும் குற்றச்சாட்டால், எரேமியா பாழும் கிணற்றில் தள் ளப்படுகிறார். நகரில் பஞ்சம் உண்டாகவே, இறை அருளால் எரேமியா மீட்கப்படுவதைக் காண்கிறோம். துன்பங்களின் நடுவிலும் ஆண்டவருக்கு உண்மை உள்ளவர்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பிரிக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், பாவங்களை உதறிவிட்டு நிலைவாழ்வை நோக்கி மன உறுதியோடு ஓட நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்காக சிலுவை மரணத்தின் கொடிய வேதனையையும், இழிவையும் தாங்கிக்கொண்ட ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் மனம் தளர்ந்து போகாத வாறு, இறைத்தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துவின் மாட்சியை நினைவில் கொள்வோம். விண்ணகத்தை நோக்கிய ஓட்டத்தை நம்பிக்கையுடன் நிறைவு செய்ய வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிறைவு அளிப்பவரே இறைவா,
   உமது பணிக்காக நீர் தேர்ந்தெடுத்துள்ள
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவ றத்தார் அனைவரும், நிறைவாழ்வை நோக்கிய பயணத்தில் ம் மக்களை மன உறுதி யுடன் வழிநடத்த தேவையான அருளைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கை தருபவரே இறைவா,
  
உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனை களால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம் பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவரே இறைவா,
   இரண்டாயிரம் ஆண்டு காலமாக உமது மீட்பின் மறைபொருளை அறியாமலும், ஏற்றுக் கொள்ளாலும் வாழும் எம் நாட்டு மக்கள் உம்மை அறிந்து, ஏற்றுகொள்ளவும் உமது மீட்பைக் கண்டடையவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வை வழங்குபவரே இறைவா,
   உலகெங்கும் உமது நற்செய்தியைப் புறக்கணிப்பவர்களால், கிறிஸ்தவ மக்களும் மறை போதகர்களும் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்கிட, மீட்பின் மறைபொருளை உலகோர் அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. வரம் அருள்பவரே இறைவா,
  
நிலைவாழ்வை நோக்கி மன உறுதியோடு ஓடத் தேவையான நம்பிக்கையை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் அளித்து, உமக்கு உரிய வர்களாக எங்களை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 10, 2013

ஆகஸ்ட் 11, 2013

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 18:6-9
   எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான் களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர். நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார் கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர் களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 11:1-2,8-19
   சகோதர சகோதரிகளே, நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கை யால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால் தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கை யினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோ புடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே. ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்க ளித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரை யிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார் கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய் நாட்டைத் தேடிச்செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகி றார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, "அவர்களுடைய கடவுள்'' என்று அழைத்துக் கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள் ளார். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையி னால்தான். "ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்'' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:32-48
   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண் டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள் ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள் ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்தி ருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக் கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளை யில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப் பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விட மாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: "தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்து வார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனு டைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்த மின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடு வான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல் படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகு தியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக் கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, August 8, 2013

ஆகஸ்ட் 11, 2013

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். தலைவர் வந்து பார்க்கும்போது, விழித்திருக்கும் பொறுப்புள்ள பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்ட வரின் வருகையை எப்போதும் எதிர்நோக்கி காத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் வர காலம் தாழ்த்துவார் என கூறிக்கொண்டு, தீய நாட்டங்களுக்கும், செயல் களுக்கும் இடம் கொடுத்தால் நாம் கொடுமையான தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவோம் என இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். நம் தலைவராகிய இயேசுவுக்கு உண்மை உள்ள வர்களாக வாழும்போது, நம்மை அவர் தம் உடமைக்கெல்லாம் அதிகாரியாக அமர்த்து வார் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. எனவே கடவுளின் திருவுளத்தை உணர்ந்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்புள்ள பணியாளர்களாக செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்கப்பட்ட நிகழ்வை எடுத்துரைக்கிறது. பாஸ்கா இரவில் எகிப்தியர்களின் தலைப் பிள்ளைகளைக் கொன்று, ஆண்டவர் விடுதலை அளித்ததை நினைத்து இஸ்ரேல் மக்கள் மகிழ்ந்ததை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது. எகிப்தியர் செங்கடலில் ஆழ்த்தப்பட்டதால், இஸ்ரயேல் மக் கள் மேன்மை அடைந்ததை உணர அழைக்கப்படுகிறோம். கடவுளின் வாக்குறுதியில் நம் பிக்கை கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்கள் மீட்கப்பட்டது போன்று, நாமும் விசுவா சத்தில் உறுதியாக இருந்து மீட்பைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், ஆபிரகாம் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் மூலம் பெற்றுக்கொண்ட நல்வாழ்வைப் பற்றி எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் வார்த் தையை நம்பியதால், அன்னியராய் இருந்தும் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கி வாழ்ந்தார். கருவுற இயலாத சாராவின் மூலம் அவர் வாக்களிக்கப்பட்ட மகனாகிய ஈசாக்கின் தந்தையானதும் நம்பிக்கையால்தான். நம்பிக்கையோடு ஈசாக்கைப் பலியிடத் துணிந்ததால், இறைமகன் இயேசுவின் மூதாதை ஆகும் பேறுபெற்றார். ஆபிரகாமைப் போன்று, நாமும் நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ்ந்து கிறிஸ்து வாக்களித்துள்ள விண் ணக நாட்டை உரிமையாக்கிட வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் தலைவரே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உண்மை யுள்ள பணியாளர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் உமது திருவுளப்படி வழிநடத்த வும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வாழ்வே இறைவா,
  
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் பணத்துக்கும், பதவிக்கும் சேவை செய்வதை விடுத்து, எங்களுக்கு வாழ்வளிக்கும் உண்மை தலைவரான உமக்கே பணி செய்து வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் நிறைவே இறைவா,
   உண்மையின் நிறைவான உம்மை அறிந்துகொள்ளாமல், மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திழைக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகன் வழியாக நீர் அளித்த மீட்பைத் தேடி அடைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் உறவே இறைவா,
   தவறான புரிதல்களாலும், விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாததாலும் ஒருவரையொரு வர் பகைத்து வாழ்பவர்கள், மீண்டும் தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொண்டு புதுவாழ்வு வாழ துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் மீட்பரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நம்பிக்கைக் குரியவர்களாய் வாழ்ந்து
, விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும், விண்ணகத்தை உரிமை யாக்கிக்கொள்ளவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 3, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சபை உரையாளர் 1:2,2:21-23
   வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கி றார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக் காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-5,9-11
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந் திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண் ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவ ரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள். ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாய லுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:13-21
   அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என் னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தி யவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டி ருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமை யைச் சொன்னார்: "செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே!' என்று எண்ணினான். 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப் பேன்'. பின்பு, 'என் நெஞ்சமே, உனக்கு பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள் கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவி லியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.'' 

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, August 1, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். உலக செல்வங்களில் பற்று வைக்காமல் கடவுளுக்கு விருப்பமான வழி யில் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவர் ஒவ்வொரு வரும் உலகிற்குரிய அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்ற அழைக்கப்படு கிறார். நாம் கோடிகோடியாய் சொத்து சேர்த்தாலும், அதை இந்த உலகத்திலேயே விட்டுச் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். நமது உயிர் பிரிந்த பிறகு, நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் யாருக்கு உரிமையாகும் என சிந்திக்க இயேசு நம்மை அழைக்கிறார். உலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டாமல், விண்ணக வாழ்வுக்கு உரிய வற்றை சேர்த்துவைக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மனிதரின் உழைப்பு அனைத்தும் வீண் என்பதை உணர்ந்து வாழ அழைப்பு விடுக்கிறது. அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் கடினமாக உழைத்து சேர்த்த சொத்து, அதற்காக சிறிதும் உழைக்காதவரிடம் செல்கின்ற யதார்த்த நிலையை எடுத்துரைக்கிறது. உலகப் பொருட்களுக்காக ஒருவர் செய்யும் அனைத்து முயற்சிகளும், அவரது செயல் திட்டங்களும் அவருக்கு பயன் அளிக்காததை நாம் பல நேரங்களில் காண்கிறோம். அமைதி இல்லாத இவ்வுலகில், கடவுளின் திருவடிகளில் நிம் மதி தேடுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு பெற விரும்பினால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுமாறு அழைப்பு விடுக்கிறார். கிறிஸ் துவே நமக்கு வாழ்வு அளிப்பவராக இருப்பதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகி றோம். உலக இயல்புக்குரிய ஒழுக்கக்கேடுகள் அனைத்தில் இருந்தும் விலகி, புதிய மனித இயல்பை அணிந்துகொள்ள திருத்தூதர் நம்மை அழைக்கிறார். கிறிஸ்து இயேசு வையே அனைத்துமாகக் கொண்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத புதிய சமூகம் படைக்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், விண்ணக வாழ் வுக்கு உரியவர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் அனைவரையும் விண்ணக வாழ் வுக்கு தயார் செய்யவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவரே இறைவா,
   பதவிக்காகவும்,
புகழுக்காகவும், சொத்துகளுக்காகவும் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் தன்னலவாதிகள் அனைவரையும் மனந்திருப்பி, உலகெங்கும் வாழும் மக்கள் அமைதி யான வாழ்வை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதி அருள்பவரே இறைவா,
   உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மீட்பு அளிப்பவரே இறைவா,
   உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிழ்ச்சி கொடுப்பவரே இறைவா,
   உலகப் பற்றுகளில் இருந்து விலகி, விண்ணக வாழ்வை ஆர்வமாக தேடும் உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும்
வழங்கி, உம்மில் மகிழ்ச்சி காணும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.