Saturday, September 28, 2013

செப்டம்பர் 29, 2013

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

முதல் வாசகம்: ஆமோஸ் 6:1,3-7
   எல்லாம் வல்ல இறைவன் கூறுவது: "சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப் போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத் தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர் களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக் கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத் தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட் டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக் கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லா தொழியும்.''
இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 6:11-16
   கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டி ருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தை சிறப்பாக அறிக்கையிட்டாய். அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந் தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தை சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்கு கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன் றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.


நற்செய்தி வாசகம்: லூக்கா 16:19-31
   அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலை யுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய் கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகா மின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய் யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலை யில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், 'தந்தை ஆபிர காமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ் நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந் தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது' என்றார். அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட் டும்' என்றார். அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்க ளிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, September 26, 2013

செப்டம்பர் 29, 2013

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நம்மிடம் அதிகமாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. பிறர்நலம் நாடுவ தால் கிடைக்கும் பேரின்பத்தையும், தன்னத்தால் வரும் வேதனையையும் குறித்து இன் றைய நற்செய்தியில் ஆண்டவர் எடுத்துரைக்கிறார். வீட்டு வாயில் அருகே இருந்த ஏழை இலாசரை கண்டுகொள்ளாத செல்வர் பாதாளத்துக்கு செல்கிறார். தனக்கு கிடைத்த உண வுத் துண்டுகளைக் கொண்டு தெரு நாய்களின் பசியாற்றிய இலாசர் ஆபிரகாமின் மடியில் அமர்ந்திருக்கிறார். நம்மிடம் இருக்கின்ற செல்வத்தை நமது மகிழ்ச்சிக்காக மட்டுமின்றி, பிறரை மகிழ்விக்கவும் பயன்படுத்த வரம் கேட்டு இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக பேசும் இறைவன், மகிழ்ச்சியிலும் செல்வத்திலும் திளைத்திருப்போருக்கு விளையப்போகும் கேடு பற்றி எடுத்துரைக்கிறார். பஞ்சணை மீது சாய்ந்திருந்து பிறரை ஆட்டிப் படைப்போருக்கும், பெரிய விருந்துகளில் மகிழ்ச்சி தேடுவோருக்கும் கேடு விளையும் என கூறுகிறார். மது விலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் இன்புற்றிப்போரின் மகிழ்ச்சியை நீக்கப்போவதாக ஆண்டவர் அறிவிக்கின்றார். தன்லத்தால் விளையும் கேடுகளில் இருந்து நாம் தப்பி வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், விசுவாச வாழ்வு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் பொருள் ஆசையிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்று அறிவுறுத்து கிறார். குறைச் சொல்லுக்கு இடந்தராத வகையில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின் பற்றி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். வாழ்வளிக்கும் கடவுள் முன்னிலையில் மாசற்ற வர்களாய் வாழ புனித பவுல் நம்மை அழைக்கிறார். நம் விசுவாசத்தை வாழ்வாக்கி நிலை வாழ்வை பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, வ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. இரக்கம் நிறைந்த இறைவா, 
  உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இரக்கம் சிந்தனை உள்ளவர்களாய் வாழ்ந்து, இறைமக்களின் தேவைகளை நிறைவு செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பு நிறைந்த இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள், அனைத்து மக்கள் மீதும் அன்பு கொண் டவர்களாக வாழ்ந்து, மிகுதியாக வைத்திருப்பவர்களிடம் பெற்று தேவையில் இருப்பவர் களுக்கு பகிர்ந்தளிக்க
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. கனிவு நிறைந்த இறைவா,
  எம்
நாட்டின் தலைவர்கள் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது கனிவு கொள்பவர் களாக வாழ்ந்து, ஏற்றத் தாழ்வுகளையும், மனித நேயத்துக்கு எதிரான செயல்களையும் சமூகத்தில் இருந்து களைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. பொறுமை நிறைந்த இறைவா,
   பசியையும் நோயையும் பொறுமையுடன் சகித்துக்கொண்டு துன்பத்தில் வாழும் மனிதர் கள் மீது கருணை காட்டி, அவர்களுக்குத் தேவையான உணவையும் உடல்நலத்தையும் வழங்கி உதவு
மாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மாட்சி நிறைந்த இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தன்னலம் நாடாமல் பிறர்நலம் பேணுபவர்களாய் பகிர்வு வாழ்வு வாழ்ந்து, நிலை வாழ்வைப்  பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, September 21, 2013

செப்டம்பர் 22, 2013

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

முதல் வாசகம்: ஆமோஸ் 8:4-7
   "வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: 'நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோது மையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள் ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?' ஆண்டவர் யாக் கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: 'அவர்களுடைய இந்தச் செயல்க ளுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.'''
இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 2:1-8
   அன்பிற்குரியவர்களே, அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங் கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காக வும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமா கும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட் புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தை யும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட் டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல. எனவே, ஆண்கள் சினமும் சொற்பூச லும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 16:1-13
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு கூறியது: "செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப் பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர் மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, 'உம்மைப் பற்றி நான் கேள்விப்படு வது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பா ளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், 'நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகி றாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வ ளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதி யோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர் களாய் நடந்து கொள்ளுகிறார்கள். ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மை யற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையா ளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக் குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள் வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, September 19, 2013

செப்டம்பர் 22, 2013

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். நேரிய உள்ளத்துடன் ஆண்டவருக்கு பணிவிடை புரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்பவர்களாகவும், அதன் வழியாக நற்செய்தியைப் பறைசாற்றுபவர்களா கவும் திகழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கும் கிறிஸ்துவின் அரசை நிறுவும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமது தலைவர் இயேசுவின் விருப்பத்தை திருச் சபையிலும், சமூகத்திலும் நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து வாழ்வது நம் கடமை. ஆண்டவரின் திருவுளத்தை பொறுப்புடன் நிறைவேற்றும் நேர்மையுள்ள பணியாளர்க ளாக வாழும் அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ், நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்யும் வணிகர்களை ஆண்டவர் பெயரால் கண்டிக்கிறார். நாட்டில் மதிப் பின்றி வாழும் வறியோரை ஒடுக்குகிறவர்கள் கண்டிக்கப்படுகின்றனர். கள்ள எடை போடு பவர்களையும், கலப்படப் பொருள் விற்போரையும் இறைவாக்கினர் கண்டிகின்றார். அவர் கள் அனைவரும் ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டுமென்பதைச் சுட்டிக் காட்டு கிறார். நாமும் பிறரை ஏமாற்றாமல் நன்மை செய்பவர்களாய் வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்கு உகந்த வகையில் கண்ணியம் உள்ளவர்களாகவும் பிறருக்காக செபிப்பவர்களாகவும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். எல்லா மனிதரும் மீட்புப் பெற, கடவுளைப் பற்றிய உண்மையை அவர்கள் அறியச் செய்வது நம் கடமை என்பதை உணர்த்துகிறார். அன்புக்கு எதிரான அனைத்தை யும் விலக்கிவிட்டு, தூய உள்ளத்தோடு இறைவேண்டலில் ஈடுபட நாம் அழைக்கப்படுகி றோம். கிறிஸ்தவ அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், இயேசுவின் மீட்புப் பணியைத் தொடர வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வழிகாட்டும் தலைவரே இறைவா, 
  உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, உம் திருவுளப்படி உண்மையுடன் பணியாற்ற அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகாளும் அரசரே இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள், மக்களின் வாழ்க்கை நலனுக்கும் இயற் கைச் சூழலின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நீதியுடன் ஆட்சி நடத்த
உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வளிக்கும் மீட்பரே இறைவா,
 
நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும், மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் ஆர்வமுள்ள நல்ல தலைவர் களை எம் நாட்டில் உருவாக்கித் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் மருத்துவரே இறைவா,
   பசித் தீர்க்கும் பணியும்,
குணம் அளிக்கும் பணியும் வியாபாரமாக மாறிவிட்ட இந்த உலகில், அன்பும் நேர்மையும் பெருகவும், வெறுப்புணர்வும் அநீதியும் வன்முறைகளும் ஒழியவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. நிறைவாகும் நிம்மதியே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தங்கள் கிறிஸ்தவக் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றவும், உமது நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ்ந்து இறையரசைக் கட்டி எழுப்பவும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, September 14, 2013

செப்டம்பர் 15, 2013

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 32:7-11,13-14
   அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை நோக்கி, "இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்தி லிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, 'இஸ்ர யேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்'' என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், "இம்மக்களை எனக்குத் தெரி யும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள் மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார். அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர் முன் மன்றாடி, "ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித் துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற் றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டு விட்டார்.
இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 1:12-17
   அன்பிற்குரியவரே, எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என் னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின் றிப் பெருகியது. 'பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மை யான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டி னார். அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 15:1-32
   அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரி டம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்க ளுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத் தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட் டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டை கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரி டம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில் லையா? கண்டு பிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட் டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரி டையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.'' மேலும் இயேசு கூறியது: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமா றாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின் னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப் பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய் தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலி யாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண் டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண் டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டி தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடு வோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந் துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாட தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந் தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல் களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். அவர் சின முற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமக ளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னு டையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, September 12, 2013

செப்டம்பர் 15, 2013

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அன்பையும் பரிவையும் உணர்ந்த வர்களாய் பாவத்தில் இருந்து மனமாற்றம் அடைய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் மனம் திரும்பும்போது, காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்த ஆயனாக ஆண்டவர் மகிழ்ச்சி அடைகிறார். தொலைத்த பணத்தைக் கண்டுபிடிப்ப வரைப் போன்று, விண்ணுலகத் தூதரிடையே மகிழ்ச்சி ஏற்படும் என ஆண்டவர் எடுத்து ரைக்கிறார். விண்ணகத் தந்தையின் அன்பை உணராதவர்களாய் அவரை விட்டு விலகிச் சென்ற தருணங்களுக்காக நாம் மன்னிப்பு வேண்டுவோம். மனமாற்றத்துடன் ஆண்டவ ரிடம் திரும்பிவர அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மோசேயின் வேண்டுதலை ஏற்று இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் இரக்கம் காட்டிய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஆண்டவரோடு உரையாடச் சென்ற மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதமானதால், இஸ்ரயேலர் பொற்கன்று வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் சினமுற்ற ஆண்டவர் அவர்களை அழித்தொ ழிக்க நினைக்கிறார். கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியை நினைவூட்டி, இஸ்ர யேல் மக்களுக்காக மோசே பரிந்து பேசுவதையும், அதன் மூலம் இஸ்ரயேல் மக்கள் காப் பாற்றப்பட்டதையும் காண்கிறோம். நாமும் புனிதர்களின் பரிந்துரையால் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவர் இயேசுவின் பரிவன் புள்ள  இரக்கத்தைக் குறித்து எடுத்துரைக்கிறார். ஆண்டவரை அறிந்து கொள்ளும் முன் அவரைப் பழித்துரைத்து, இழிவுபடுத்திய தன்னை, திருத்தூதராக பணியமர்த்திய இரக் கத்தைப் பற்றி பவுல் வியப்படைகிறார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற் படும் நம்பிக்கை மற்றும் அன்பால், அருள் அளவின்றிப் பெருகுவதாக திருத்தூதர் சுட்டிக் காட்டுகிறார். எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற கடவுளுக்கு, நமது மனமாற்றத்தால் மாட்சி அளிப்பவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எம் ஆயரே இறைவா, 
   உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.
2. எம் நம்பிக்கையே இறைவா,
  இவ்வுலகில் போர்ச் சூழலும், வன்முறைகளும், அமைதியற்ற நிலையும் மறைந்து, நீர் அருளும் அமைதியை சுவைக்கும் வரத்தை உலக நாடுகளின் தலைவர்கள் வழியாக
மக்க ளுக்கு வழங்கிட உம்மை மன்றாடுகிறோம்.
3. எம் நிறைவே இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் உமது இரக்கத்தையும் பொறுமையையும் உணர்ந் தவர்களாய் உம்மைத் தேடி வரவும், தங்கள் மனமாற்றத்தால் நீர் அளிக்கும் மீட்பைக் கண்டுணரவும் துணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.
4. எம் வாழ்வே இறைவா,
   பல்வேறு பாவச் சூழல்களில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் உமது பேரன்பின் மேன்மையை உணர்ந்து மனந்திரும்பவும், தூய வாழ்வு வாழ்வதற்கான மன உறுதியைப் பெறவும் அருள்கூர்ந்திட
உம்மை மன்றாடுகிறோம்.
5. எம் மாட்சியே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை விட்டு வில கிச் செல்லாமல் தந்தைக்குரிய உமது அன்பில் மகிழ்பவர்களாகவும், உமது மாட்சியில் பங்கு பெறுபவர்களாகவும் வாழும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, September 7, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 9:13-18
   "கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. மண்ணுலகில் உள்ளவற் றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டு பிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாம லும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்துகொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுல கில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.''
இரண்டாம் வாசகம்: பிலமோன் :9-10,12-17
   அன்பிற்குரியவரே, கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம் மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக் கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும் பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந் திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலான வனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவ ரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரிய வனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 14:25-33
   அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட் டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமை திக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, September 5, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு இயேசுவை பின் தொடரும் நாம், அவருடைய சீடர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவுக்காக தம் உறவுகளையும், உடைமைகளையும், உயிரையும் இழக் கத் தயாராக இருப்பவரே அவருடைய சீடராக மாற முடியும். தம் சிலுவையைச் சுமக்கா மல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணத்துக் காகவும், புகழுக்காகவும் இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடி யாது என்பதே நாம் இன்று கற்க வேண்டியப் பாடம். அன்னை மரியாவைப் போன்று கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கும் மனநிலை நம்மில் உருவாக வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் திட்டத்துக்கு நம்மை தாழ்ச்சியோடு அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கற்பிக்கிறது. மண்ணுலகில் உள்ளவற்றையே முழுமை யாக உணர முடியாமல் இருக்கும் நாம், விண்ணுலகில் இருப்பவற்றை கண்டுபிடிக்க ஆசை கொள்வதால் எந்த பயனும் இல்லை என்பதை முழுமனதோடு ஏற்க அழைக்கப்படு கிறோம். ஆண்டவரின் ஆவியால் கிடைக்கும் ஞானத்தாலே நாம் கடவுளுக்கு உகந்த வற்றை கற்றுக் கொள்கிறோம். தூய ஆவியின் வழிநடத்துதல் நம்மை மீட்பின் பாதை யில் அழைத்துச் செல்ல வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் பொருட்டு நன்மை செய்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். புனித பவுலை இயேசுவின் நற்செய்திக்காக துன்புறும் கைதியாக இங்கு நாம் காண்கிறோம். ஒனேசிம் என்ற அடிமையை உடன் சகோ தரனாக ஏற்றுக் கொள்ளுமாறு அவரது தலைவரான பிலமோனிடம் பவுல் பரிந்துரைப் பதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் பொருட்டு அனைவருக்கும் நன்மை செய்பவர்களாக வாழ்ந்து அவரது உண்மை சீடராக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நன்மைகளின் ஊற்றாம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவின் வழியில் அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும், நற்செய்திக்காக அனைத்தையும் இழக்கும் துணிவுள்ளவர்களாகவும் வாழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,
  உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் புகழையும், பணத்தையும் நாடிச் செல்லாமல், உலகின் நற்செய்தியாம் இயேசுவை தங்கள் வாழ்வால் பறைசாற்றும் சீடர்களாக வாழத் துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் ஊற்றாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் உமது மேன்மையை அறிந்துகொள்ள உதவும் கருவிகளாக வாழும் ஞானத்தை இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழங்கி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் ஊற்றாம் இறைவா,
   போராலும், வன்முறையாலும் உலகை ஆள நினைப்பவர்கள் மனம் திரும்பவும், உமது அன்பின், அமைதியின், உண்மையின் அரசு உலகெங்கும் நிறுவப்படவும் அருள்புரியுமா
று உம்மை மன்றாடுகிறோம்.
5. அருளின் ஊற்றாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரிலும், கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழந்து, சிலுவையுடன் அவரைப் பின்தொடரும் சீடத்துவ மனநிலையை உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Sunday, September 1, 2013

செப்டம்பர் 1, 2013

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 3:17-18,20,28-29
   குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக் கொண்டோ ரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண் ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12:18-19,22-24
   சகோதர சகோதரிகளே, நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றி யெரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட் டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக் கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாள ராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 14:1,7-14
   அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர் கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர் களுக்கு கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற் குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங் கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டி ருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்த வர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.'' பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டா ரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெ ழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3