Thursday, January 31, 2013

பிப்ரவரி 3, 2013

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் பணியில் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி சிந் திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு இஸ்ர யேல் மக்களிடையே வல்லமை மிகுந்த ஓர் இறைவாக்கினராக திகழ்ந்தார். இறைவாக் கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை அவர் அறிந் திருந்தார். இஸ்ரயேலில் பணியாற்றிய இறைவாக்கினர் பலரும் சந்தித்த அனுபவங் களைப் பின்புலமாக கொண்டு இயேசு துணிவோடு செயல்படுவதைக் காண்கிறோம். ஆண்டவரின் உண்மையான வார்த்தைகள் இஸ்ரயேலரை சீற்றம் கொள்ளச் செய்ததாக இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசுவின் கருக்கு வாய்ந்த வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டு, மனந்திரும்பிய புதுவாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவை நம் வாழ்வில் முழுமையாக ஏற்று, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி யும், அவர் முன் இருக்கும் சவால்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. தாய் வயிற்றில் உருவாகும் முன்பே கடவுளுக்கு அறிமுகமானவராகவும், பிறப்பதற்கு முன்பே ஆண்டவ ரால் திருநிலைப்படுத்தப்பட்டவராகவும் இறைவாக்கினர் விளங்குகிறார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். மக்கள் அனைவரின் எதிர்ப்புக்கு ஆளானாலும், அதை தாங்கி கொள்ளும் வலிமைமிகு வெண்கலச் சுவராக இறைவாக்கினர் திகழ்வதையும் காண்கி றோம். இறைவார்த்தைக்கு உள்ளங்களைத் திறந்தவர்களாய் வாழ்ந்து, கடவுளின் திருவு ளத்தை நிறைவேற்றுபவர்களாய் திகழும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், அன்பின் மேன்மையைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார். அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்ப டாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது என, அன்பின் பெருமைகளை பவுல் அடுக்கிக்கொண்டே செல்கிறார். இறைவாக்கு உரைக்கும் கொடையும், பரவசப்பேச் சுப் பேசும் கொடையும், அறிவும் அழிந்துபோனாலும், அன்பு ஒருபோதும் அழியாது என உரைக்கும் திருத்தூதர், விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றை விட அன்பே உயர்ந்தது நமக்கு சுட்டிக்காட்டுகிறார். நாம் பெற்றுள்ள கடவுளின் கொடைகளை நிறைவான அன் போடு பயன்படுத்தும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உலகின் நற்செய்தியான இறைவா, 
   இக்கால உலகில் நற்செய்தி அறிவிப்பதன் சவால்களை உணர்ந்தவர்களாய், உமது ஆற்றலின் துணையோடு திருச்சபையை வழிநடத்தும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர் கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கிப் பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பே உருவான இறைவா,
  உலக மக்கள் அனைவரும் அன்பில் வளரவும், அதன் வழியாக
பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிசெயல், தன்னலம், தீவினை போன்றவை மறைந்து, உண்மையும் நன்மை யும் உலகில் நிலைபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நன்மையை விதைப்பவரான இறைவா,
  
எம் நாட்டு மக்களை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரையும் உமது கருவிகளாக மாற்றி, அவர்கள் வழியாக உம்மைப் பற்றிய உண்மையின் நற்செய்தியை எம் நாடு முழுவதும் விதைத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கொடை வள்ளலான இறைவா,
   உமக்கு உகந்த விசுவாசிகளுக்கு நலம் அளிக்கும் கொடைகளை வழங்கி, இந்த சமூ கத்திலும், குடும்பங்களிலும், தனிநபர்களிலும் காணப்படும் அனைத்து விதமான தீமை களும், நோய்களும் நீங்க துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரான இறைவா,
   உமது திருமகனின் வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டவர்களாய், மனந்திரும்பிய புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனை வருக்கும் அளித்து, இயேசுவின் வழியில் உமது பிள்ளைகளாக திகழும் வரமருள வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 26, 2013

ஜனவரி 27, 2013

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: நெகேமியா 8:2-4,5-6,8-10
   அந்நாள்களில் ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள் ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண் பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர். திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின் மேல் நின்று கொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திரு நூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண் டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி "ஆமென்! ஆமென்!'' என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்க ளுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர். ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்'' என்றனர். ஏனெனில் மக்கள் அனைவ ரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத் தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென் றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை'' என்று கூறினார்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12:12-30
   சகோதர சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயி னும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்பு களால் ஆனது. "நான் கை அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல'' எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? "நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல'' எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட் பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய் இருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடை யதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை கால்களைப் பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல முடியாது. மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன் புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்பு கள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டா வது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக் கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்லசெயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:1-4,4:14-21
   மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப் படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன். அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயா வுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறை வாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத் தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொ ழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறை வேறிற்று'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 24, 2013

ஜனவரி 27, 2013

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நற்செய்திக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் வார்த்தைகளை ஏற்று அவரில் ஒன்றித்தி ருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு பாவத்தின் அடிமைத்தளையால் ஒடுக்கப்பட்ட நம்மை விடுவிக்கவும், கடவுளின் திட்டம் பற்றிய சரியான பார்வையை நமக்கு வழங்கவும் இவ்வுலகிற்கு வந்தார் என்பது தெளிவுபடுத்தப் படுகிறது. மறைநூல் வாக்குகளை நிறைவேற்றிய இறைமகன் இயேசுவே நமது மீட்பர் என்று உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். மறைநூலில் முழு மையான நம்பிக்கை கொண்டவர்களாக, ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நற்செய்திக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் குருவும் திருச்சட்ட வல்லுநருமான எஸ்ரா இஸ்ரேல் மக் கள் நடுவே மறைநூலை திறந்து வாசித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. மறைநூலின் சட்டங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றுக்கு விளக்கம் வழங்கப்பட்டபோது மக்கள் தங்கள் உள்ளங்களைத் திறந்து மனம் வருந்தி அழுதார்கள் என்று வாசிக்கிறோம். அதே வேளை யில், ஆண்டவரில் மகிழ்ந்திருக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதையும் காண்கி றோம். இறைவார்த்தைக்கு நம் உள்ளங்களைத் திறந்து மனம் வருந்தவும், அதன் மூலம் அகமகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளவும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நற்செய்திக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். உடலின் அனைத்து உறுப் புகளும் தேவையானவையாகவும், புறக்கணிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன. அதே போன்று, கிறிஸ்துவின் உடலாம் திருச்சபையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டவரின் முன்னிலையில் மதிப்புக்கு உரியவராய் திகழ்கிறார். எனவே, ஒவ்வொரு வரும் மற்றவர் மீது அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்று திருத்தூதர் அறிவுறுத் துகிறார். பல்வேறு அருள் கொடைகளைப் பெற்றுள்ள நாம், கிறிஸ்துவுக்காக ஒருவர் மற்றவரின் ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்பவர்களாக திகழும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மறைநூலின் நாயகரே இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைநூலின் படிப்பினைகளை தங்கள் வாழ்வில் செயல்படுத்தவும், திருச் சபையின் மக்களை இறைவார்த்தையின் பாதையில் நடத்தவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகிழ்ச்சியின் ஊற்றே இறைவா,
  உலக மக்கள் அனைவரும் இறைவார்த்தையைக் கேட்டு மனம் வருந்தவும், உம்மைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொண்டு மீட்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் தேவை யான உதவிகளை வழங்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நற்செய்தியே இறைவா,
   உலக வரலாற்றில் உம் திருமகன் வழியாக நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தை 
எம் நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவும், உமக்கு உரியவர்களாய் வாழத் தூண்டு தல் பெறவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலையின் நிறைவே இறைவா,
   பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண் ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும் புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் வழிகாட்டியே இறைவா,
   எம் பங்கு திருச்சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் இணைந்து வாழத் தேவையான அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 19, 2013

ஜனவரி 20, 2013

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 62:1-5
   சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப் படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர் பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப் படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர்பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பது போல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துகொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வது போல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12:4-11
   சகோதர சகோதரிகளே, அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல் பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற் றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள் கொடையையும் அளிக் கிறார். தூய ஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும், இன்னொரு வருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலையும், வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும், மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்ற லையும், பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 2:1-12
   கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். இயேசு அவரிடம், "அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டி கள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார் வையாளரிடம் கொண்டுபோங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந் தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 17, 2013

ஜனவரி 20, 2013

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நம் ஆண்டவரின் மாட்சிமிகு செயல்களை நம் வாழ்வில் அனுபவிக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர் களாகிய நாம் அனைவரும் கடவுளின் மேன்மையை உணர்ந்து, அவரது மாட்சிமையில் பங்குபெறவே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உதவியைப் பெற்று மகிழ அன்னை மரியாவின் பரிந்துரை தேவை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. கானாவூர் திருமண நிகழ்ச்சியில் திராட்சை இரசம் தீர்ந்த பொழுது, மரியன்னையின் பரிந்துரையால் ஒரு புதுமை நிகழ்ந்ததைக் காண்கிறோம். நமது அன் றாடத் தேவைகளில் இறையன்னையின் பரிந்துரையை நாடி, இறைவனின் உதவிகளை சுவைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் கடவுளை மணமகனாகவும், திருச்சபையை மணமகளாக வும் சித்தரிக்கிறது. இங்கு எசாயா பயன்படுத்தும் அடையாளப் பெயர்களான சீயோன், எருசலேம் ஆகியவை ஆண்டவரின் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன. நாம் இறை மாட்சியைப் பெற்றவர்களாய், ஆண்டவரின் மணிமுடியாகத் திகழ அழைக்கப்படுகின் றோம். திருமண உறவைப் போன்ற மிக நெருங்கிய பிணைப்புடன் ஆண்டவரோடு இணைந்து வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரின் மாட்சி நம்மில் வெளிப்படத் தேவையான கொடைகளைப் பற்றிப் பேசுகிறார். அருள் கொடைகள் பல வகையாக இருந்தாலும் தூய ஆவியார் ஒருவரே; திருத்தொண்டுகள் பலவகையாக இருந்தாலும் ஆண்டவர் ஒருவரே; செயல்பாடுகள் பலவகையாக இருந்தாலும் கடவுள் ஒருவரே என்பதை அவர் நமக்கு தெளிவுபடுத்துகிறார். ஆண்டவரின் விருப்பத்துக்கு ஏற்ப நமக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள ஆற்றலைப் பயன்படுத்தி இறை மாட்சியை வெளிப் படுத்துபவர்களாய் வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் தொடக்கமாம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றவர்களாய், திருச்சபையின் மக்களையும், உலக நாடுகளின் தலைவர் களையும் நிறை உண்மையின் பாதையில் வழிடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆற்றலின் ஊற்றாம் இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்தி, தீமைகளின் பிடியில் இருந்து மக்களை காக்கவும், நன்மையின் பாதையில் அவர்களை வழிநடத்தவும் தேவையான அருளை வழங்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடவும், கிறிஸ்தவ உண்மைகளைப் புறக்கணிக்க தூண்டும் தவறான வழிகாட்டுதல்களில் இருந்து விலகி நடக்கவும், உம மாட்சிமையின் அரசை இம்மண்ணில் வரவேற்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் வேந்தராம் இறைவா,
   உலகில் பணம், புகழ், பதவி போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு, நீதியையும் உண்மை யையும் குழிதோண்டி புதைக்கும் தீயவர்கள் மனந்திரும்பவும், கிறிஸ்தவ நம்பிக்கை களுக்கு தவறான விளக்கம் அளிக்கும் மதவெறியர்கள் உம்மைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளவும் புதுமை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பின் நாயகராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது இறை மாட்சியை உலகிற்கு பறைசாற்றுபவர்களாக திகழவும், வாழ்வின் அனைத்து போராட் டங்களிலும் நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 12, 2013

ஜனவரி 13, 2013

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

முதல் வாசகம்: எசாயா 40:1-5,9-11
   "ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங் கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப் படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருச லேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
இரண்டாம் வாசகம்: தீத்து 2:11-14,3:4-7
   அன்பிற்குரியவரே, மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள் ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட் டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்தி ருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல் களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 3:15-16,21-22
  அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்" என்றார். மக்கள் எல்லா ரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப் படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 10, 2013

ஜனவரி 13, 2013

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

திருப்பலி முன்னுரை:
திருமுழுக்கு பெற்றவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு விழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திருமுழுக்கின் வழியாக நாம் கடவு ளின் பிள்ளைகளாக ஆகியிருக்கிறோம் என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகனாம் இயேசு இந்த உலக வரலாற்றில் தோன்றி, மானிட ரான நாம் செய்ய வேண்டியவற்றை தமது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் நமக்கு கற்பித்தார். தூய ஆவியின் அருளைப் பெற்று கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழுமாறு, திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் திருவுளத்திற்கு நம்மை முழுமையாக கைய ளிக்கும் மனம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
திருமுழுக்கு பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலுக்கு ஆண்டவர் அருளும் பாவ மன்னிப்பைப் பற்றிய இறைவாக்கினை எடுத்துரைக்கிறது. ஆற்றலுடன் ஆட்சிபுரிய வருகின்ற நம் தலைவராகிய ஆண்டவர், நமக்காக வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருவதாக எசாயா இறைவாக்கு உரைக்கிறார். ஓர் ஆயனைப் போல் தம் மந்தையை மேய்க்கும் ஆண்டவர், ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார் என்பது முன்னறிவிக்கப் படுகிறது. மாட்சிமிகு ஆண்டவரின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்யும் விதத்தில், நமது வாழ்வை நெறிப்படுத்தும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
திருமுழுக்கு பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப் பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, இறைப்பற்று டன் தூய வாழ்வு வாழ திருமுழுக்கின் அருளால் பயிற்சி பெற வேண்டுமென எடுத்துரைக் கிறார். நம் மீட்பராம் இயேசுவின் வழியாக தூய ஆவியைப் பெற்றுள்ள நாம், அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாக மாறி, நிலைவாழ்வை உரிமைப்பேறாக அடை யும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்லாயராம் இறைவா,
   உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும், திருச்சபையின் மக்களை நிலைவாழ்வுக்கு உரிய மந்தைகளாகத் தயார் செய்யத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சியின் ஆண்டவராம் இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உமது மேலான மாட்சியை அறிந்துகொள் ளவும், மக்கள் அனைவரையும் உமக்கு உரியவர்களாக ம
ந்திருப்பவும் தேவையான ஆற்றலை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆவியைப் பொழிபவராம் இறைவா,
  
ம் ஒளியைக் காணாமல், உமது திருச்சபையின் வழிகாட்டுதலில் இருந்து விலகி வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், தூய ஆவியின் தூண்டுதலால் உம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்து ஏற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. தூய்மைப்படுத்துபவராம் இறைவா,
   சுயநலம், வெறுப்பு, பகைமை, அநீதி, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் கறை களால் மாசு படிந்திருக்கும் இந்த உலகை, உமது அருளாலும் அன்பாலும் தூய்மைப்படுத்த
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. திருமுழுக்கு அளிப்பவராம் இறைவா,
   உமது பெயரால் திருமுழுக்கு பெற்று, உமது பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டிருக் கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் அருளில் நிலைத்து வாழத் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 5, 2013

ஜனவரி 6, 2013

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

முதல் வாசகம்: எசாயா 60:1-6
   எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்தி வருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 3:2-3,5-6
   சகோதர சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 2:1-12
   ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 3, 2013

ஜனவரி 6, 2013

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

திருப்பலி முன்னுரை:
திருக்காட்சிக்குரியவர்களே,
   ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கிழக்கத்திய ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். குழந்தை இயேசுவின் மேன் மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின் அரசராம் இறைவனே, மனிதராக பிறந்திருப்பதை அறிந்து அவருக்கு பொன்னும் சாம்பி ராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாக அளிக்கிறார்கள். அந்த ஞானிகளைப் போன்றே, நாமும் அனைத்துக்கும் மேலாக ஆண்டவருக்கு பணிவிடை செய்யும் மன நிலையைப் பெற்று வாழும் வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
திருக்காட்சிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் பெயரால் எருசலேம் மாட்சி அடைய இருப் பதைப் பற்றிய இறைவாக்கினை எடுத்துரைக்கிறது. இவ்வுலகின் மக்களினங்களை இருள் கவ்வினாலும், ஆண்டவரின் மாட்சிமிகு ஒளியால் எருசலேம் நிரப்பப்படும் என்று எசாயா இறைவாக்கு உரைக்கிறார். பொன்னும் நறுமணப் பொருளும் ஏந்தி வரும் பிற இனத்தவர் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. உல கின் மக்களினங்கள் அனைத்தும் ஆண்டவரை அறிந்து, அவரைப் புகழ்ந்தேற்றும் நாள் விரைவில் மலர வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
திருக்காட்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், ஆண்டவரின் மறைபொருள் பற்றிய இறைவெளிப்பாட்டைக் குறித்து எடுத்துரைக்கிறார். ஆண்டவரைப் பற்றிய மறைபொருள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படாமல், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட் டுமே வெளிப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்தி வழியாக பிற இஸ்ரயேலர் அல்லாத இனத்தவரும் இறைவனின் வாக்குறுதிகளுக்கு பங்காளிகள் ஆகியிருக்கிறார்கள் என் பதை அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் நற்செய்தியை உலக மக்கள் அனைவ ரும் விரைவில் அறிந்துகொள்ள வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உலகின் நற்செய்தியாம் இறைவா, 
   உம்மைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்ற உழைத்து வரும், எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவின் இறைத்தன்மைக்கு சான்றுபகர்பவர்களாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சிமிகு மன்னராம் இறைவா,
   உலக நாடுகள் அனைத்திலும் உமது நல்லாட்சி மலரவும், மக்கள் அனைவரும் உமது திருச்சபையின் வழியாக உம்மை நாடித் தேடவும் தேவையான
உதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உன்னத ஒளியாம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை ஒளியாகிய உம்மை அறிந்துகொள்ளவும், உமது ஒளியை நோக்கி தங்கள் சிந்தனைகளை செலுத்தவும் தேவையான ஆர்வத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் நிறைவாம் இறைவா,
   நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதி காண அருள்புரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மேன்மை மிகுந்தவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் உம் திருமகனை வணங்கச் சென்ற ஞானிகளைப் போன்று, நீர் வெளிப்படுத்தும் மறைபொருளை உணர்ந்து வாழும் வரத்தை பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.