Thursday, July 31, 2014

ஆகஸ்ட் 3, 2014

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விருந்துக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். ஆண்டவர் தரும் விருந்தில் பங்கேற்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தம்மை பின்தொடர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இயேசு உண வளித்த நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஆண்டவரில் நம்பிக்கை கொள் வோருக்கு எந்த நன்மையும் குறைவுபடாது என்பதை உணர அழைக்கப்படுகிறோம். காண்கிறோம். இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார் என்று வாசிக்கிறோம். சீடர்கள் அளித்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு, இயேசு ஆயிரக்கணக்கானோரின் பசியைப் போக்குகிறார். நம் தேவைகளை அறிந்திருக்கிற ஆண்டவரை எப்பொழுதும் விடாது பின்தொடர வரம் வேண்டி, இத்திருப் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விருந்துக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், நிறைவு தராத உணவுக்காக ஏன் உழைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறது. தாகமாய் இருப்பவர்கள் நீர்நிலைகளில் தாகம் தீர்க்கவும், பசியாய் இருப்பவர்கள் இலவசமாய் தானியங்களைப் பெற்றுக்கொள்ளவும் இறைவன் அழைப் பதை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து, நல்லுணவை உண்ண வும், கொழுத்ததை உண்டு மகிழவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் உடன் படிக்கையில் நிலைத்திருந்து, அவரது பேரன்பை சுவைத்து மகிழ வரம் வேண்டி, இவ்வாச கத்திற்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விருந்துக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், பசியும் வேதனையும் ஆண்டவ ரிடம் இருந்து நம்மை பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டுகிறார். நம்மேல் அன்பு கூர்ந்த இயேசுவின் செயலால் நமக்கு வருகிற சோதனைகள் அனைத்திலும் நாம் வெற்றி அடைகிறோம் என்று எடுத்துரைக்கிறார். இயேசுவின் அளவற்ற அன்பில் இருந்து, விலகி விடாதவாறு கவனமாய் இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உணவளிப்பவரே இறைவா,
  
விண்ணக அப்பமாகிய நற்கருணையை பகிர்ந்தளிக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்குபவர்களாக திகழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வளிப்பவரே இறைவா,
  
பல்வேறு கவலைகளில் மூழ்கியிருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் நல்வாழ்வுக்கு தேவையானவற்றைச் செய்வதிலும் ஆர்வங்காட்ட தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளியூட்டுபவரே இறைவா,
   தவறானவற்றை கடவுளாக ஏற்று வாழ்கின்ற எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது உண்மையின் ஒளியைக் கண்டுணரவும், அழிவுக்குரிய அனைத்தையும் விட்டுவிட்டு உம் மைப் பின்தொடரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வழிகாட்டுபவரே இறைவா,
   போர்களாலும், வன்முறைகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும் துன்பத்தில் வாடும் மக்கள் அனைவரும், நீர் தருகின்ற
உண்மை அமைதியை அடையத் தேவையான வழிகாட் டுதலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அருள் பொழிபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை எப்பொழுதும் விடாது பின்தொடர்ந்து வரவும், நீர் தருகின்ற விண்ணக விருந்தில் பங்கு பெறவும்
அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 26, 2014

ஜூலை 27, 2014

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 3:5,7-12
    அந்நாள்களில் கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்கு சாலமோன், "என் கடவுளாகியஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரச னாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்துகொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்களினத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார். சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரி களின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை" என்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 119:57,72.76-77.127-128.129-130
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
   ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித் துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. (பல்லவி)
   எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந் தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். (பல்லவி)
   பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். (பல்லவி)
   உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:28-30
   சகோதர சகோதரிகளே, கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத் திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்தி லும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப் பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன் குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

வாழ்த்தொலி: மத்தேயு 11:25
   அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:44-52
   அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண் ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ் வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?" என்று இயேசு கேட்க, அவர்கள் "ஆம்" என்றார்கள். பின்பு அவர், "ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக் கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழைய வற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்" என்று அவர்களிடம் கூறினார்.

Thursday, July 24, 2014

ஜூலை 27, 2014

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விண்ணரசுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனின் அரசில் ஒன்றிணைய அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. விண்ணரசு ஒரு புதையலுக்கும், விலைமதிப்பற்ற ஒரு முத்துக்கும் ஒப்பானது என இயேசு குறிப்பிடுகிறார். தம் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, புதையல் உள்ள நிலத்தையும், ஒப்பற்ற முத்தை யும் அடைய முயற்சிப்பது போன்று, விண்ணரசை அடைய இவ்வுலகின் நாட்டங்களை கைவிட நாம் அழைக்கப்படுகிறோம். விண்ணரசு என்ற வலையில் சிக்கும் நல்ல மீன்க ளாக வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணரசுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், சாலமோன் ஆண்டவரிடம் ஞானத்தை வரமாக கேட்டுப் பெற்ற நிகழ்வை விவரிக்கிறது. இஸ்ரயேல் பேரரசின் அரசராக பொறுப்பேற்ற சாலமோ னின் கனவில் ஆண்டவர் தோன்றி, என்ன வரம் வேண்டுமெனக் கேட்கிறார். அரசர் என்ற முறையில் மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான சாலமோன் வேண்டுவதைக் காண்கி றோம். அவரது மேலான எண்ணத்தை பாராட்டும் ஆண்டவர், சாலமோனுக்கு ஞானத்தை வழங்குகிறார். ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஞானம் வேண்டி, இவ் வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணரசுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளின் திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டோர் தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை நினைவூட்டுகி றார். இறைமக்கள் அனைவரும், இயேசுவின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறார். கடவுளின் மக்களாகுமாறு அழைப்பு பெற்றுள்ள நாம் அனைவரும், கடவுளுக்கு ஏற்புடையோராக வாழ அழைக்கப் படுகிறோம். விண்ணரசுக்கு உரியவர்களாய் கடவுளின் மாட்சியில் பங்கு பெற வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் உமது ஞானத்தை அளித்து, உலக மக்கள் அனைவரையும் விண்ணரசின் உறுப்பினர்களாக மாற்ற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணக அரசரே இறைவா,
  
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாய் செயல்படவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஞானத்துடன் முடிவெடுக்கவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒப்பற்ற புதையலே இறைவா,
   ஆன்மீக இருளில் சிக்கியிருக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது உண்மையின் அரசில் ஒன்றிணைவதற்காக, பொய்மை நெறிகள் அனைத்தையும் கைவிட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. தேர்வு செய்பவரே இறைவா,
   பிறவிப் பெருங்கடலில் நீந்தும்
மீன்களான கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், தீயவை அனைத்திலிருந்தும் விலகி, நன்மைத்தனத்தால் விண்ணரசுக்கு தகுதிபெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. இணையில்லா முத்தே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை அடைவதற் காக இவ்வுலக
த் தீய நாட்டங்களைத் துறக்கும் துணிவைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 19, 2014

ஜூலை 20, 2014

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 12:13,16-19
    ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத் தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்? உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியு ரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு. நீதிமான்கள் மனிதநேயம் கொண்ட வர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 86:5-6.9-10.15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
   என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். (பல்லவி)
   என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! (பல்லவி)
   என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறா தவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப் பாற்றும். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:26-27
   சகோதர சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சு களின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறை யில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

வாழ்த்தொலி: மத்தேயு 11:25
   அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:24-43
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "விண் ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமை களுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, 'ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், 'நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், 'வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய் வோரிடம், 'முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறு வேன்'' என்றார். இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.'' அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. "நான் உவமைகள் வாயி லாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறு வடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித் துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவ ரையும் நெறிகெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளு வார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந் தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

Thursday, July 17, 2014

ஜூலை 20, 2014

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனின் வார்த்தையை நம் உள்ளத்தில் ஏற்று கடவுளின் ஆட்சிக் குட்பட்ட மக்களாய் வாழ இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது. மானிட மகனால் விதைக்கப்பட்ட நல்ல விதைகளுடன், தீயவன் விதைத்த களைகளும் சேர்ந்து வளர கட வுள் அனுமதிக்கிறார் என்பதை உணர அறிவுறுத்தப்படுகிறோம். அறுவடை நாளில் களை கள் தீக்கிரையாக்கப்படும் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். களைகளைப் போன்று பிறருக்கு கெடுதல் செய்பவர்களாய் இருக்காமல், கடவுள் விரும்பும் வகையில் பலன் அளிப்பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் கிறிஸ்துவின் அரசை பரவச் செய்யும் புளிப்பு மாவாகவும், பிறருக்கு அடைக்கலம் கொடுக்கும் கடுகு விதையாகவும் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுளின் நீதியைப் பற்றி எடுத்துரைக்கிறது. அனைத்தையும் ஆட்சி செய்கின்ற கடவுளின் மேலான ஆற்றலையும், நீதியையும் புரிந் துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவர், செருக்குற்றிருப்போரை அடக்கு கிறவராகவும், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறவராகவும், பொறுமையோடு ஆட்சி செய்கிற வராகவும் இருக்கிறார் என்பது உணர்த்தப்படுகிறது. நம்மை நம்பிக்கையால் நிரப்பி, பாவங் களில் இருந்து மனமாற்றம் அருளும் ஆண்டவரின் பாதம் பணிந்து வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், வலுவற்ற நிலையில் தூய ஆவி யாரின் துணையை வேண்டுமாறு நமக்கு அழைப்புவிடுக்கிறார். சொல் வடிவம் பெறமுடி யாத நம்முடைய பெருமூச்சுகளின் வழியாக தூய ஆவியார் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். உள்ளங்களைத் துருவி அறியும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ திருத்தூதர் நம்மை அழைக்கிறார். தூய ஆவியின் துணையோடு இறைநம்பிக்கையில் நிலைத்திருந்து நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வானுலக அரசரே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அரசை உல கெங்கும் பரவச் செய்யும் முனைப்புடன் செயல்படத் தேவையான மனவுறுதியையும், ஆற் றலையும் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. பூவுலக அரசரே இறைவா,
  
கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, உலகில் வாழும் மக்களி டையே, உமது இறையரசின் புளிப்பு மாவாக செயல்படும் வல்லமையையும், ஆர்வத்தை யும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் அரசரே இறைவா,
   எம் நாட்டில் உமது இறையரசின் மதிப்பீடுகள் விரைந்து பரவவும், பிற சமயத்தினர் அனைவரும் உமது மேன்மையை உணர்ந்து தீயவனின் பிடியில் இருந்து வெளியேறவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மையின் அரசரே இறைவா,
   இவ்வுலக தீமைகளின் நடுவே வாழும் இறைமக்கள் எவரும், தீயவனின் செயலுக்கு இடம்கொடுத்து அழிந்து போகாமல், உமது ஆற்றலால் நிலைவாழ்வுக்கு உரியவர்களாய் செழித்து வளர
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உன்னத அரசரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்,
உமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகவும், உமது அரசை இவ்வுலகில் கட்டி எழுப்புபவர்களாகவும் வாழ துணை செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 12, 2014

ஜூலை 13, 2014

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 55:10-11
    ஆண்டவர் கூறுவது: "மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ் வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத் தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறை வேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 65:9.9-10.11-12.13
பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
   மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. (பல்லவி)
   நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். (பல்லவி)
   ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. (பல்லவி)
   புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:18-23
   சகோதர சகோதரிகளே, இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவ லோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப் போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.

வாழ்த்தொலி
   அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதை, அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார். அல் லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 13:1-23
   அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமை கள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: "விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமை யால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட் செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார். சீடர்கள் அவர் அருகே வந்து, "ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசு கின்றீர்?" என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்க ளுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வ தில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெ னில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட் கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மை யாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தை யைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதை களைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைக ளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ் வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக் கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங் காகவும் பயன் அளிப்பர்."

Thursday, July 10, 2014

ஜூலை 13, 2014

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
வார்த்தைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் வார்த்தைய நம் உள்ளத்தில் ஏற்று பலன் தருபவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது உள் ளத்தை கடவுளுக்கு உகந்த நல்ல நிலமாக மாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். நம் கண்கள் பேறுபெற்றவை; ஏனெனில் நற்கருணையில் வாழும் ஆண்டவரை அவை காண்கின்றன. நம் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் விவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தை களை அவை கேட்கின்றன. அதேநேரத்தில், நம்மை ஆண்டவருக்கு ஏற்ற பலன் தரவிடா மல் தடுக்கும் உலகு சார்ந்த கவர்ச்சிகள் மற்றும் கவலைகளில் இருந்து விலகி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
வார்த்தைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வார்த்தை எவ்வாறு பலன் தருகிறது என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. வானத்திலிருந்து இறங்கி வரும் மழையும் பனியும், நிலத்தில் விளைச்சலைத் தந்து விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் பல னாக கொடுக்கின்றன. அவ்வாறே ஆண்டவரின் வார்த்தை, அவரது விருப்பத்தை நம்மில் நிறைவேற்றி பலன் கொடுக்கும் என்ற தெளிவைப் பெற அழைக்கப்படுகிறோம். ஆண்ட வரின் வார்த்தைக்கு பலன் தருபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவி மடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
வார்த்தைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இவ்வுலகின் துன்பங்களால் நாம் சோர்ந்து போகக்கூடாது என்ற அறிவுரையை வழங்குகிறார். வரவிருக்கும் கடவுளின் மாட்சியை நம் கண்முன் கொண்டு கடவுளுக்கு உகந்த பிள்ளைகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். கடவுளின் மாட்சி வெளிப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நாம், அவரது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாய் திகழ அழைக்கப்படு கிறோம். நாம் கடவுளின் மக்கள் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வார்த்தையை அனுப்புபவரே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது உண்மையின் வார்த்தையை உலகுக்கு எடுத்துரைத்து, உமக்கு உகந்த பிள்ளைகளாக மக்களைத் தயார் செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வார்த்தையை விதைப்பவரே இறைவா,
   உலகெங்கும் பரவியுள்ள தீமை மற்றும் அழிவின் நடுவே வாழும் மக்கள் அனைவரின் உள்ளத்திலும், உமது நன்மையின் வார்த்தையை விதைத்து உமக்கேற்ற பலன் தருபவர் களாய் உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. வார்த்தையை விளைவிப்பவரே இறைவா,
   எம் நாட்டில் உமது வார்த்தை விதிக்கப்படும் இடங்கள் பாறைகளாகவும், முட்புதர்க ளாகவும் இல்லாமல், நல்ல நிலங்களாக பலன் தரவும், கிறிஸ்துவின் நற்செய்தி விரைந்து
பரவவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. பலனளிக்கச் செய்பவரே இறைவா,
   போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
5. நற்பலனில் மகிழ்பவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது வார்த்தையை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவும், உமது விருப்பத்தை ங்கள் வாழ்வாக்கி நூறு மடங்கு பலன் தரவும் அருள் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 5, 2014

ஜூலை 6, 2014

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

முதல் வாசகம்: செக்கரியா 9:9-10
    ஆண்டவர் கூறியது: "மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமை யுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப் படை இல்லாமற் போகச் செய்வார்; எருசலேமில் குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத் தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் முதல் மறு கடல் வரை, பேராறு முதல் நிலவுலகின் எல்லைகள் வரை செல்லும்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145:1-2.8-9.10-11.13-14
பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
   என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப் பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். (பல்லவி)
   ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத் தின் மீதும் இரக்கம் காட்டுபவர். (பல்லவி)
   ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். (பல்லவி)
   உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமு றையாக உள்ளது. தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:9,11-13
   சகோதர சகோதரிகளே, கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த் தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங் கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

வாழ்த்தொலி: மத்தேயு 11:25
   அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லே லூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 11:25-30
   அக்காலத்தில் இயேசு கூறியது: "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத் துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும் புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடைய வன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங் கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என்றார்.

Thursday, July 3, 2014

ஜூலை 6, 2014

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆறுதலுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். நாம் துன்பங்களால் சோர்வுறும் நேரங்களில் கிறிஸ்து இயேசுவிடம் ஆறுதலைக் கண்டடைய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக் கிறது. ஞானிகளும் அறிஞர்களும் அல்ல, குழந்தை உள்ளம் கொண்டவர்களே கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்வது அவசியம். கனிவும் மனத்தாழ் மையும் உள்ள இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொண்டு, அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது சுமைகள் நம்மை அழுத்தும்போது, ஆண்டவரின் பாதத்தில் இளைப்பாறுதல் அடைய வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆறுதலுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், அமைதியின் அரசராக உலகிற்கு வந்த இயேசுவைப் பற்றிய முன்னறிவிப்பை நமக்குத் தருகிறது. அவர் நீதி உள்ளவராகவும், வெற்றி வேந்தராகவும், கழுதையின் மேல் ஏறி வரும் எளிய அரசராகவும் இருப்பார் என இறைவாக்கினர் செக் கரியா முன்னறிவிக்கிறார். அமைதியின் அரசரான இயேசு, போர்ப்படைகளும், போர்க்கரு விகளும் இல்லாமல் செய்வார் என்ற வாக்குறுதி வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் ஆட்சி உலகெங்கும் மலர வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆறுதலுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தூய ஆவிக்கு ஏற்ற வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் ஊனியல்புக்கு ஏற்றவாறு செயல்பட்டால், கிறிஸ்து வுக்கு உரியவர்களாக வாழ முடியாது என்பதை அறிவுறுத்துகிறார். தூய ஆவியின் ஆல யங்களாக நாம் செயல்படும்போது, கிறிஸ்துவின் இயல்பைக் கொண்ட உயிர்ப்பின் மக் களாக வாழ்வோம் என்று சுட்டிக்காட்டுகிறார். நமது தீச்செயல்களை கொன்றழித்து, இறை வன் தரும் வாழ்வில் பங்கேற்க வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆறுதலின் ஊற்றே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், கிறிஸ்து வழங்கும் ஆறுதலை திருச்சபையின் மக்களுக்கு பெற்றுத்தரும் கருவிகளாக செயல்படத் தேவை யான ஆற்றலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் ஊற்றே இறைவா, 
   உலகெங்கும் அழிவை விளைவிக்கும் தீமையின் ஆதிக்கம் பெருகி வரும் சூழலில், மக்கள் அனைவரும் நீர் அளிக்கும் அமைதி நிறைந்த வாழ்வை விருப்பத்துடன் தேடத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் ஊற்றே இறைவா,
   எம் நாட்டில் உமது மேன்மையை அறியாமல் இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தி யின் உண்மை ஒளியை வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் அனைவரையும்
உருவாக்கு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆற்றலின் ஊற்றே இறைவா,
   போர்கள், வன்முறைகள் உள்ளிட்ட தீமைகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற மக்கள் அனைவரும்,
இவ்வுலகில் உமது அமைதியின் அரசை நிறுவும் ஆர்வத்துடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்வின் ஊற்றே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் எளிய நுகத்தை எங்கள் மேல் ஏற்றுகொள்ளவும், அவர் வழியாக இளைப்பாறுதலைக் கண்டடை யவும் அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.