Thursday, January 30, 2014

பிப்ரவரி 2, 2014

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்று நாம் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவரின் திருச்சட்டத்தை நிறைவேற்ற நாம் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தும் மோசேயின் சட்டப்படி தம்மை இறைத்தந் தைக்கு அர்ப்பணித்ததைக் காண்கிறோம். ஆண்டவரின் தாயாக இருந்தும் திருச்சட்டத்தை ஆர்வத்தோடு நிறைவேற்றிய மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் அழைக்கப்படு கிறோம். குழந்தை இயேசுவை கையில் ஏந்திய இறைவாக்கினர் சிமியோனும், கோவிலில் திருப்பணி செய்துவந்த இறைவாக்கினர் அன்னாவும் மீட்பருக்கு சான்று பகர்கின்றனர். இவர்களைப் போல ஆண்டவருக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், "நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்" என்று இயேசுவின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கிறது. "அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் இருப்பார்" என்று முன்னுரைக்கப் படுவதைக் காண்கிறோம். "இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச் சிக்கும் காரணமாக இருக்கும்" என்ற சிமியோனின் இறைவாக்குக்கு இது முன்னடையாள மாக விளங்குகிறது. பொன், வெள்ளியைப்போல் தூய்மையாக்கிப் புடமிட ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இறைமகன் இயேசு மனித குழந்தையாக தோன்றியதன் நோக்கத்தை எடுத்துரைக்கிறது. ஊனும் இரத்தமும் கொண்ட மனிதர்களின் இயல்பில் கடவுளும் பங்கு கொண்டார், மீட்பர் இயேசுவின் மரணத்தின் மூலம் சாவு அழிந்துவிட்டது என்ற உண்மை இங்கு தெளிபடுத்தப்படுகிறது. மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகு மாறு இயேசு எல்லாவற்றிலும் நம்மைப்போல் ஆனார் என்பதை உணர நாம் அழைக்கப் படுகிறோம். நம்மைப் போல் சோதனைக்கு உள்ளான இயேசுவின் உதவியை நம் துன்ப நேரங்களில் நாட வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் ஒளியான இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் உமது ஒளியைப் பிரதிபலித்து, உலக மக்கள் அனைவரையும் மீட்பின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் மீட்பா இறைவா,
  கிறிஸ்து இயேசு வழியாக நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
உலக மக்கள் அனை வரும் கண்டடையத் துணைபுரியும் சாட்சிகளாகத் திகழ கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் வழியா இறைவா,
  
எம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆன்மீக இருளும், தீமையும் முழுமையாக அழிந்து, உமது மீட்பின் ஒளியை நோக்கிய பாதையில் மக்கள் அனைவரும் வழிநடக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் நிறைவா இறைவா,
   இவ்வுலக வாழ்வின் துன்பங்களாலும், சோதனைகளாலும் உம்மை விட்டு விலகிச் செல்லும் மக்கள் அனைவரும், உமது வழிகாட்டுதலால் மீட்பைக் கண்டடைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் இலக்கான இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது திருவுளத்தை அறிந்து வாழவும், இயேசுவின் வழியாக நீர் அருளும் மீட்புக்கு சான்று பகரவும் உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 25, 2014

ஜனவரி 26, 2014

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 9:1-4
   முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறு வடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள் ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட் டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோ ரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 27:1.4.13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

   ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? (பல்லவி)
   நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்ட வரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண் டறிய வேண்டும். (பல்லவி)
   வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:10-13,17
   சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொரு வரும் 'நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, 'நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங் கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய் தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையி லான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ் துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். 

வாழ்த்தொலி: யோவான் 1:14,12
     அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி னார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லே லூயா! 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 4:12-23
   அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயா வுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறி யது: "செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப் பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.'' அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ண ரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு கலிலேயக் கட லோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலை களை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோத ரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர் கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 23, 2014

ஜனவரி 26, 2014

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவரது மகிழ்ச்சியில் ஒரு மித்து பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கை நிறைவேற்றும் விதமாக, சாவின் நிழல் சூழ்ந்தவர்கள் மேல் சுடர் ஒளியாக உதித்தவர் நம் ஆண்டவர் இயேசு. பாவத்தளையால் கட்டுண்ட மக்களுக்கு சிலுவை மரணத்தால் அருள் வாழ்வை வழங்க வந்தவர் அவரே. மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை மனிதரைப் பிடிப்பவர்களாக மாற்றும் வல்லமையை இயேசுவி டம் காண்கிறோம். விண்ணரசின் நற்செய்தியைப் பறைசாற்றி, மக்களின் நோய் நொடி களை குணப்படுத்திய இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்ற வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் கலிலேயப் பகுதிக்கு ஆண்டவர் அளிக்க இருக்கும் மேன் மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. 'காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண் டார்கள்' என்ற மகிழ்ச்சியின் இறைவாக்கு உரைக்கப்படுகிறது. ஆண்டவரின் வல்லமை யால், மக்களுக்குச் சுமையாக உள்ள நுகம் உடைக்கப்படும் என்றும், அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடி தகர்க்கப்படும் என்றும் வாக்களிக்கப்படுகிறது. நமது வாழ்வைச் சூழ்ந் துள்ள துன்பமெனும் இருள் மறைந்து, மகிழ்ச்சியின் ஒளி பெருக ஆண்டவரின் உதவி கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்தவர்கள் அனைவரும் பிளவுபடாமல் ஒத்த கருத்துடன் வாழ அழைப்பு விடுக்கிறார். நமது மீட்புக்காக சிலுவை யில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசுவின் மீதான நம்பிக்கையில் நாம் ஒரே மனத்து டன் உறுதியாக நிலைத்திருக்க திருத்தூதர் அறிவுறுத்துகிறார். ஒரே திருமுழுக்கில் பங்கு பெற்றுள்ள நாம் அனைவரும் இறையரசின் வளர்ச்சிக்காக ஒரே நோக்கத்துடன் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் நற்செய்திக்காக ஒருங்கிணைந்து செயலாற்ற ஆண்டவரின் அருள் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவரே இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், உம்மை அறியாத மக்களுக் கும் நற்செய்தி பணியாற்ற துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசுகளை அமைப்பவரே இறைவா, 
   எங்கள் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் உமது நற்செய்தி பரவலுக்கு துணை நிற்கவும், இந்திய மக்களிடையே நிலவும் ஆன்மிக இருளை நீக்கி உமது ஒளி யைக் காணச் செய்யவும் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்றிப்பை உருவாக்குபவரே இறைவா,
   உலகெங்கும் பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபடவும், உம்மை அறியாத
மக்களிடையே உமது மீட்பின் நற்செய்தியை ஒற்றுமை யுடன் கொண்டு சேர்க்கவும் அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா,
   பாவம், தீமை, நோய் ஆகியவற்றின் கட்டுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உமது அருள் நலன்களால் புதுவாழ்வு தந்து, உமது மீட்பின் மகிழ்ச்சியை
த் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நற்செய்தியே இறைவா,
   எம் பங்கு சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வரும், ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாக உமக்கு சான்று பகர்ந்து வாழ அருள் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 18, 2014

ஜனவரி 19, 2014

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 49:3,5-6
   ஆண்டவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சி யுறுவேன்" என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கி னார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: "யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயே லில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளி தன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தா ருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 40:1,3.6-7.7-8.9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

   நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். (பல்லவி)
   பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, இதோ வருகின்றேன். (பல்லவி)
   என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திரு வுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள் ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். (பல்லவி)
   என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:1-3
   கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு வின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ் துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

வாழ்த்தொலி: யோவான் 1:14,12
     அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா! 

நற்செய்தி வாசகம்: யோவான் 1:29-34
   இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் செம்மறி! செம்மறி யாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திரு முழுக்குக் கொடுத்தும் வருகிறேன்'' என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: "தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக் கும்படி என்னை அனுப்பியவர் 'தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Saturday, January 11, 2014

ஜனவரி 12, 2014

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

முதல் வாசகம்: எசாயா 42:1-4,6-7
    ஆண்டவர் கூறுவது: "இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிட மாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட் டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாக வும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிக ளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 29:1-2.3-4.9-10
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

   இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக் குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். (பல்லவி)
   ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றி ருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. (பல் லவி)
   
ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் 'இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10:34-38
   கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதி லும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவி யாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்."

வாழ்த்தொலி: மாற்கு 9:7
     அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 3:13-17
   அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர் தானுக்கு வந்தார். யோவான், "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?'' என்று கூறித் தடுத்தார். இயேசு, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை'' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

Saturday, January 4, 2014

ஜனவரி 5, 2014

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

முதல் வாசகம்: எசாயா 60:1-6
    எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 72:1-2.7-8.10-11.12-13
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

   கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரி டம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்மு டையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. (பல்லவி)
   அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். (பல்லவி) 
   தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவ ரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். (பல்லவி)
   தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப் பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப் பாற்றுவார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: எபேசியர் 3:2-3,5-6
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத் தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை யனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்பு களாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள். கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக் குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ் வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோ ருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். பெற் றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

வாழ்த்தொலி: மத்தேயு 2:2
     அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 2:1-12
   ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என் றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவ தும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண் டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னி லிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத் தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப் பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

Wednesday, January 1, 2014

ஜனவரி 1, 2014

கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா

முதல் வாசகம்: எண்ணிக்கை 6:22-27
   ஆண்டவர் மோசேயிடம் கூறியது: "நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 67:1-2.4.5,7
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

   கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனை வரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். (பல்லவி)
   வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங் களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (பல்லவி)
   கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: கலாத்தியர்  4:4-7
   சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்த வராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா, தந்தையே,' எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைக ளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கி றீர்கள். இது கடவுளின் செயலே.

வாழ்த்தொலி: எபிரெயர் 1:1-2
    அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக் கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:16-21
   அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தை யும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேத னம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வான தூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.