Saturday, March 30, 2013

மார்ச் 31, 2013

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10:34,37-43
   அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந் தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவ ரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-4
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 20:1-9
  வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழைய வில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்ல றைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, March 28, 2013

மார்ச் 31, 2013

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவிலியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத் தூதர்களும் மற்ற சீடர்களும், தங்கள் உயிரையும் கையளித்து அவரது உயிர்ப் புக்கு சான்று பகர்ந்தனர். என்றென்றும் வாழ்பவராம் இறைமகன் இயேசுவுக்கு உலக முடிவு வரை சான்று பகரும் உயிர்ப்பின் மக்களாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களிடம் சான்று பகர்ந்த நிகழ்வு இடம் பெறுகிறது. மக்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு, தந்தையாம் கடவுளின் வல்லமையால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி அளித்தார் என்பதை பேதுரு எடுத்துரைக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிய உயிர்த்த இயேசுவோடு உண்டு, குடித்த மகிழ்ச்சியுடன் பேதுரு சான்று பகர்கிறார். உயிர்த்த இயேசுவில் நம் பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று புது வாழ்வு வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
  இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துக்குரிய வாழ்வு வாழு மாறு நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாட அழைப்பு விடுக்கிறார். தந்தையாம் இறை வனின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறு மாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்பதையும் அவர் நினைவூட்டு கிறார். வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிர் அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தராம் இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உயிர்ப்பை பறைசாற்றும் உன்னத தூதுவர்களாக செய லாற்ற உதவ வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. மாட்சியின் மன்னராம் இறைவா,
   உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப் பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவ ருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா,
   பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும்,
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா,
   உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 23, 2013

மார்ச் 24, 2013

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருப்பவனிக்கு முன்: லூக்கா 19:28-40
   அக்காலத்தில் இயேசு எருசலேமுக்கு புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்'' என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை'' என்றார்கள். பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச் சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கி னர்: "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதி யும் மாட்சியும் உண்டாகுக!'' என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும்'' என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
முதல் வாசகம்: எசாயா 50:4-7
   நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2:6-11
   கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 22:14-23:56
   இயேசுவின் சீடர்கள் பாஸ்கா விருந் துக்கு ஏற்பாடு செய்தபின் நேரம் ஆன தும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார். அப்போது அவர் அவர் களை நோக்கி, "நான் துன்பங்கள் படு முன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவ லாய் இருந்தேன். ஏனெனில் இறை யாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்க ளிடம், "இதைப் பெற்று உங்களுக் குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெ னில் இதுமுதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்து கடவு ளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக் கிறவனுக்குக் கேடு'' என்றார். அப்பொழுது அவர்கள், "நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்'' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். மேலும் தங்களுக் குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
   இயேசு அவர்களிடம், "பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரி பவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப் பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங் கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன். நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பதுபோல நானும் உங்களுக்கு கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள். சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்க ளைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து'' என்றார். அதற்குப் பேதுரு, "ஆண்டவரே, உம்மோடு சிறையிலிடப்படுவ தற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்'' என்றார். இயேசு அவரிடம், "பேதுருவே, இன்றிரவு, 'என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்'' என்றார். இயேசு சீடர்களிடம், "நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்க ளுக்கு ஏதாவது குறை இருந்ததா?'' என்று கேட்டார். அவர்கள், "ஒரு குறையும் இருந்த தில்லை'' என்றார்கள். அவர் அவர்களிடம், "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்று மறை நூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன'' என்றார். அவர்கள், "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன'' என்றார்கள். இயேசு அவர்களிடம், "போதும்'' என்றார். இயேசு அங் கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார்.
   சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்க ளிடம், "சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,'' என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவ னிடம் வேண்டினார்: "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார். அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்க மாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப் பதைக் கண்டார். அவர்களிடம், "என்ன, உறங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார். இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக் காட்டிக்கொடுக்கப் போகிறாய்?'' என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, "ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?'' என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குரு வின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்க ளைப் பார்த்து, "விடுங்கள், போதும்'' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கி னார். அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களை யும் மூப்பர்களையும் பார்த்து, "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்க ளோடும் தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந் தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது'' என்றார். பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள்.
   பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனோடு இருந்தவன்'' என்றார். அவரோ, "அம்மா, அவரை எனக்குத் தெரியாது'' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், "நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்" என்றார். பேதுரு, "இல்லையப்பா" என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப் பின்பு மற்றொருவர், "உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்" என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, "நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது" என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; 'இன்று சேவல் கூவுமுன் நீ என்னை மும் முறை மறுதலிப்பாய்' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவு கூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார். இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரது முகத்தை மூடி, "உன்னை அடித்த வர் யார்? இறைவாக்கினனே, சொல்" என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
   பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறி ஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், "நீ மெசியா தானா? எங்களிடம் சொல்" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்ல வராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், "அப்படியானால் நீ இறைமகனா?" என்று கேட்டனர். அவரோ, "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார். அதற்கு அவர்கள், "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே" என்றார்கள்.
   திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க, அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார். பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காண வில்லை" என்று கூறினான். ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று வலியுறுத்திக் கூறினார்கள். இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?" என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப் போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
   இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர் பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர் களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். ஏரோது தன் படை வீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
   பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான். அவர்களை நோக்கி, "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித் தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள் ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான். விழாவின்போது அவர்க ளுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. திரண்டி ருந்த மக்கள் அனைவரும், "இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்" என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர் களைக் கூப்பிட்டுப் பேசினான். ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, "இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான். அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந் தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
   அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண் டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள். பெருந்திரளான மக்களும் அவருக் காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக் களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது 'மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் 'பிள்ளை பெறா தோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர் கள் மலைகளைப் பார்த்து, 'எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார். வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென் றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங் கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.
   மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித் தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்" என்று கேலிசெய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர். 'இவன் யூதரின் அரசன்' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிக ளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவ தில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறி கடவுளை போற்றிப்புகழ்ந்தார். இக்காட்சியை காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்க ளும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
   யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச்சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங் காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக் காகக் காத்திருந்தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றி பாறையில் குடைந்திருந்த கல்ல றையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறு மணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, March 21, 2013

மார்ச் 24, 2013

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருவழிபாட்டு முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். கழுதைக்குட்டி மீது தொடங்கும் கிறிஸ்து வின் பயணம் சிலுவை மரத்தில் முடிவடைந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். 'ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!' என்று ஆர்ப்பரித்து இயேசுவை அரச ராய் வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், 'அவனை சிலுவையில் அறையும்!' என்ற கூக் குரலால் அவரை மரணத்துக்கு தீர்ப்பிடுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் பாடுகளின் பயணத்தில் பங்கேற்று, நமது பாவங்களுக்காக மனம் வருந்த திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் மீது கொண்ட அன்பிற்காக தன்னையே சிலுவையில் பலியாக்கி, நற் கருணையில் உணவாக வழங்கும் இயேசுவின் அன்பை சுவைக்க நாம் அழைக்கப்படு கிறோம். கிறிஸ்துவின் அன்புக்கு பதிலன்பு செலுத்தும் உண்மையுள்ள சீடர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா கிறிஸ்துவின் திருப்பாடுகளை முன்னறிவிப்பதை காண்கிறோம். கிறிஸ்துவின் தாழ்ச்சியும் பொறுமையும் இங்கு தெளி வாக எடுத்துரைக்கப்படுகிறது. அடிப்போருக்கு தன் முதுகையும், தாடியைப் பிடுங்குவோ ருக்கு தன் தாடையையும் அவர் ஒப்புவித்தார். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோருக்கும் தன் முகத்தை மறைக்கவில்லை. தந்தையாம் இறைவனில் நம்பிக்கை கொண்டவராய் தன்னை சிலுவை மரணத்துக்கு கையளித்த இயேசுவை பின்பற்றி வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு நாம் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய இரண்டாம் வாசகமும், நம் ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியை பற்றி பேசு கிறது. கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. சிலுவை மரணம் வரை இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிந்த இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சிலுவை வழியை தொடர்ந்து சென்று, அவரது மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி அளிப்பவராம் இறைவா,
   உமது திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்த உம் திருமகனைப் பின்பற்றி வாழும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. நிறைவு தருபவராம் இறைவா,
   உம்மை குறித்த மனிதரின் தேடல், சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவிலேயே நிறைவு பெறுகிறது என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள நீர் உதவ
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு வழங்குபவராம் இறைவா,
   கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக மனித குலத்துக்கு நீர் அளித்த மீட்பை சுவைத்து மகிழும் வரத்தை எம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கம் காட்டுபவராம் இறைவா,
   எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அருள் பொழிபவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, கிறிஸ்து இயேசுவின் உண்மை சீடர்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 16, 2013

மார்ச் 17, 2013

தவக்காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 43:16-21
   கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்த வரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன் றாக கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பது போல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: முன்பு நடந்தவற்றை மறந் துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில் லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடை களைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்க ளுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3:8-14
   சகோதர சகோதரிகளே, உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகி றேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்ப டையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும் புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும். நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற் கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற் காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன் னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடு கிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

நற்செய்தி வாசகம்: யோவான் 8:1-11
  அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட் டுக் கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்'' என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?'' என்று கேட்டார். அவர், "இல்லை, ஐயா'' என்றார். இயேசு அவரிடம், "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, March 14, 2013

மார்ச் 17, 2013

தவக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாற்றத்துக்கு உரியவர்களே,
    மன்னிப்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, பழைய பாவ வாழ்வை விட்டுவிட்டு புதிய அருள் வாழ்வுக்கு கடந்து செல்ல நம்மை அழைக்கிறது.  நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும், மனம் வருந்தி ஆண்டவரிடம் திரும்பும்போது, நம்மை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார். பிறரது குற்றங்களை அலசி ஆராயும் நாம், நமது பாவங்களை எண்ணிப் பார்க்க வேண்டு மென ஆண்டவர் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். எல்லோரும் நம்மை விட்டுச் சென்ற பிறகு, நாம் கடவுள் முன் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். இயேசுவைப் பின்பற்றி வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது பாவ வாழ்வை களைந்து விட்டு அவரிலே புதுவாழ்வு பெறும் வரம் வேண்டி, இத்திருப் பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மாற்றத்துக்கு உரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுளின் புதுப்பிக்கும் ஆற்ற லைப் பற்றி எடுத்துரைக்கிறார். கடலின் நடுவே பாதை அமைத்து இஸ்ரயேலரை கடந்து போகச் செய்த கடவுள், எகிப்தியரின் படைகளை அதே கடலுக்குள் மூழ்கடித்து அழித்த நிகழ்வு நினைவுபடுத்தப்படுகிறது. தம் மக்களுக்காக பழையவற்றை அழிக்கவும், புதிய வற்றை உருவாக்கவும் கடவுள் தயாராக இருக்கிறார் என்பது விளக்கப்படுகிறது. பாழ் வெளியில் நீரோடைகளையும், பாலைநிலத்தில் நீரூற்றுகளையும் தோன்றச் செய்வதாக ஆண்டவர் வாக்குறுதி தருகிறார். நாம் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, கடவுளின் வாக்குறுதிக்கு தகுதிபெற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாற்றத்துக்கு உரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளுக்காக வாழ்வது பற்றிப் பேசுகிறார். ஒப்பற்ற செல்வமான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப்பெற, அனைத் தையும் இழப்பாகக் கருதுவதாக கூறுகிறார். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல் லாவற்றையும் குப்பையாகக் கருதுவதாகவும் திருத்தூதர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை யும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருப்பது தேவை என்றும் அவர் எடுத்துரைக்கிறார். புனித பவுலைப் போன்று, கிறிஸ்து என்ற இலக்கை நோக்கி ஓடும் வரம் வேண்டி, இவ்வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. சீரமைத்து புதுப்பிப்பவராம் இறைவா,
   எங்கள் புதிய திருத்தந்தையை நிறைவாக ஆசீர்வதித்து, அவர் வழியாக திருச்சபையின் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருடைய விசுவாச வாழ் வையும் சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றத்தை தருபவராம் இறைவா,
   உம் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் உலக மக்களிடையே மனமாற்றத்தை உரு வாக்கி, அவர்கள் உள்ளங்களில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஒளியை ஏற்ற வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. கட்டி எழுப்புபவராம் இறைவா,
   உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து பாவத்தில் வாழும் மக்கள் அனைவரும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணர்ந்து மனம் மாறவும், அதன் வழியாக எங்கள் நாட்டில் உமது அரசை கட்டி எழுப்பவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மன்னிப்பு அருள்பவராம் இறைவா,
   சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமை தவறியதாலும் செய்த பாவங் களால் உமது அன்புறவை இழந்து தவிக்கும் மக்களுக்கு, உமது இரக்கத்தால் மன்னிப்பு வழங்கி புதுவாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மனம்மாற அழைப்பவராம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தின் உறுப்பினர்களாகிய பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தங்கள் குற்றங்களை உணர்ந்து மனந்திருந்தவும், பிறரின் குற்றங் களை மன்னித்து வாழவும் தேவையான புதிய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 9, 2013

மார்ச் 10, 2013

தவக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: யோசுவா 5:9,10-12
   அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், "இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்க ளிடமிருந்து நீக்கிவிட்டேன்'' என்றார். இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதி னான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ர யேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 5:17-21
   சகோதர சகோதரிகளே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதி தாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம் மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண் டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாக தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 15:1-3,11-32
  அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரி டம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே" என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்க ளுக்கு இந்த உவமையைச் சொன்னார்: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத் தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்க சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பி னார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தை யின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதி ராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்ற வன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக் கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப் படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடை யைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயி ருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண் டிருந்தபோது, ஆடல் பாடல்களை கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல் லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித் திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என் றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்கு தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கி றாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன் புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற் றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, March 7, 2013

மார்ச் 10, 2013

தவக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   தம் மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ள ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப் பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது மனமாற்றத்தின் வழியாக கடவுளுக்கு மகிழ்ச்சி அளிக்க இன் றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வழிதவறிய பிள்ளைகளாய் அலைந்து திரிந்தாலும், கடவுளின் அன்பை உணர்ந்து அவரிடம் திரும்பி வரும் நாளை அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் நாம் முழுமையாக புரிந்துகொள்ளும்போது, அவரது எல்லையற்ற இரக்கத்தில் மகிழ்ச்சி காண முடியும் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் அன்பில் முழு மையாக நம்மை கரைத்துக்கொண்டு, அவரது விருந்துக்கு நம்மை தகுதியாக்கி கொள் ளும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கானான் நாட்டில் இஸ்ரயேலர் கொண்டாடிய முதல் பாஸ்கா விழாவைப் பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்தியருக்கு எதிராக இஸ்ரயேல் மக்க ளுக்கு வாக்களிக்கப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல் நிறைவு பெறுவதை இங்கு காண் கிறோம். ஆண்டவரின் பராமரிப்பில் நாற்பது ஆண்டுகளாக மன்னாவை உண்டு வாழ்ந்த வர்கள், தங்கள் சொந்த உழைப்பின் பலனை மீண்டும் ருசி பார்க்கிறார்கள். எகிப்தியரின் கேலிப் பேச்சுக்கு ஆளான அடிமை வாழ்வுக்கு பதிலாக, ஆண்டவரின் செயலால் இஸ்ர யேலர் உரிமை வாழ்வை அனுபவித்த நிகழ்வு எடுத்துரைக்கப்படுகிறது. நாமும் கடவு ளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த புது வாழ்வை பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நாம் புதிய படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறார். தந்தையாம் கடவுள் நமது குற்றங்களைப் பொருட்படுத்தாமல், ஆண்டவரான இயேசுவின் வழியாக நம்மை அவரோடு ஒப்புரவாக்கினார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். நம்மை புனிதர்களாக மாற்றவே, இறைமகன் இயேசு பாவநிலை ஏற்றார் என்பதை உணர்ந்து வாழ நாம் அழைக் கப்படுகிறோம். நமது மனமாற்றத்தின் வழியாக நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மனமாற்றம் தருபவராம் இறைவா,
   உமது திருச்சபையை மனமாற்றத்தின் பாதையில் வழிநடத்தும் ஆற்றல்மிகு திருத் தந்தையை எங்களுக்கு தந்து, அவருக்கு கீழ்ப்படிந்து வாழும் உள்ளத்தை இறைமக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.
2. அனைவரையும் ஈர்ப்பவராம் இறைவா,
   உமது மாட்சிக்கும் திருவுளத்துக்கும் எதிராக பாவத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அனை வரும் மனந்திரும்பி, உம் அருள் இரக்கத்தை நாடி தேடும் வரமருள வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் அரசராம் இறைவா,
   உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய தீமைகளை உமது அன்புத் தீயால் சுட்டெரிக்க வேண்டுமென்று உரிமையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
4. உண்மையின் உருவாம் இறைவா,
       நீர் ஏற்படுத்திய திருச்சபைக்கும், உம்மை பற்றிய உண்மைக்கும் எதிராக உலகில் உள்ள தவறான சமயங்கள், நம்பிக்கைகள், கொள்கைகளை வேரறுக்க வேண்டுமென்று பணிந்த அன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம்நிறை தந்தையாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நன்மைத் தனத்துக்கு எதிராக செய்த அனைத்து பாவங்களையும் விடுத்து, உம்மிடம் மனந்திரும்பி வர அருள்புரிய வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 2, 2013

மார்ச் 3, 2013

தவக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 3:1-8,13-15
   அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலைநிலத்தின் மேற் றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. ''ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்'' என்று மோசே கூறிக்கொண்டார். அவ் வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ''மோசே, மோசே'' என்று சொல்லி கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ''இதோ நான்'' என்றார். அவர், ''இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றி விடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்'' என்றார். மேலும் அவர், ''உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக் கோபின் கடவுள் நானே'' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்றுநோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது ஆண்டவர் கூறியது: ''எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட் டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.'' மோசே கடவுளிடம், ''இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?'' என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், ''நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்'' என்றார். கடவுள் மீண் டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ''நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக் கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என் றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!''
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10:1-6,10-12
   சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கட லைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன் மீக உணவை உண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மீகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மீகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தீயனவற்றில் ஆசை கொண்டு இருந்தது போல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணு முணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர் களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறி வுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப் பவர் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 13:1-9
  அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழி யாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரை யும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கி றேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழி வீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காண வில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண் டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3