பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 7:7-11
நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை
வேண்டி னேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும்
அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது,
செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும்
அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே
நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும்
அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத்
தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா
நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4:12-13
சகோதர சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு
பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும்
பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும்
மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும்
நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய
பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்க ளுக்கு முன் அனைத்தும் மறைவின்றி
வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 10:17-30
