Saturday, August 3, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சபை உரையாளர் 1:2,2:21-23
   வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கி றார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக் காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-5,9-11
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந் திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண் ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவ ரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள். ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாய லுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 12:13-21
   அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என் னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தி யவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டி ருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார். அவர்களுக்கு அவர் ஓர் உவமை யைச் சொன்னார்: "செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே!' என்று எண்ணினான். 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப் பேன்'. பின்பு, 'என் நெஞ்சமே, உனக்கு பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள் கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவி லியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.'' 

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, August 1, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். உலக செல்வங்களில் பற்று வைக்காமல் கடவுளுக்கு விருப்பமான வழி யில் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவர் ஒவ்வொரு வரும் உலகிற்குரிய அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்ற அழைக்கப்படு கிறார். நாம் கோடிகோடியாய் சொத்து சேர்த்தாலும், அதை இந்த உலகத்திலேயே விட்டுச் செல்ல வேண்டும் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். நமது உயிர் பிரிந்த பிறகு, நாம் சேர்த்து வைத்த சொத்துக்கள் யாருக்கு உரிமையாகும் என சிந்திக்க இயேசு நம்மை அழைக்கிறார். உலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டாமல், விண்ணக வாழ்வுக்கு உரிய வற்றை சேர்த்துவைக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மனிதரின் உழைப்பு அனைத்தும் வீண் என்பதை உணர்ந்து வாழ அழைப்பு விடுக்கிறது. அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் கடினமாக உழைத்து சேர்த்த சொத்து, அதற்காக சிறிதும் உழைக்காதவரிடம் செல்கின்ற யதார்த்த நிலையை எடுத்துரைக்கிறது. உலகப் பொருட்களுக்காக ஒருவர் செய்யும் அனைத்து முயற்சிகளும், அவரது செயல் திட்டங்களும் அவருக்கு பயன் அளிக்காததை நாம் பல நேரங்களில் காண்கிறோம். அமைதி இல்லாத இவ்வுலகில், கடவுளின் திருவடிகளில் நிம் மதி தேடுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு பெற விரும்பினால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுமாறு அழைப்பு விடுக்கிறார். கிறிஸ் துவே நமக்கு வாழ்வு அளிப்பவராக இருப்பதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகி றோம். உலக இயல்புக்குரிய ஒழுக்கக்கேடுகள் அனைத்தில் இருந்தும் விலகி, புதிய மனித இயல்பை அணிந்துகொள்ள திருத்தூதர் நம்மை அழைக்கிறார். கிறிஸ்து இயேசு வையே அனைத்துமாகக் கொண்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத புதிய சமூகம் படைக்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விண்ணகத் தந்தையே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், விண்ணக வாழ் வுக்கு உரியவர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் அனைவரையும் விண்ணக வாழ் வுக்கு தயார் செய்யவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவரே இறைவா,
   பதவிக்காகவும்,
புகழுக்காகவும், சொத்துகளுக்காகவும் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் தன்னலவாதிகள் அனைவரையும் மனந்திருப்பி, உலகெங்கும் வாழும் மக்கள் அமைதி யான வாழ்வை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதி அருள்பவரே இறைவா,
   உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மீட்பு அளிப்பவரே இறைவா,
   உலகப் பொருட்கள் மீதான ஆசையால் உறவுகள், உடல்நலம் மற்றும் மன அமைதியை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், விண்ணுலகு சார்ந்தவற்றில் மனதை செலுத்தி உமது மீட்பை அனுபவிக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிழ்ச்சி கொடுப்பவரே இறைவா,
   உலகப் பற்றுகளில் இருந்து விலகி, விண்ணக வாழ்வை ஆர்வமாக தேடும் உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும்
வழங்கி, உம்மில் மகிழ்ச்சி காணும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.