Thursday, September 5, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு இயேசுவை பின் தொடரும் நாம், அவருடைய சீடர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவுக்காக தம் உறவுகளையும், உடைமைகளையும், உயிரையும் இழக் கத் தயாராக இருப்பவரே அவருடைய சீடராக மாற முடியும். தம் சிலுவையைச் சுமக்கா மல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணத்துக் காகவும், புகழுக்காகவும் இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடி யாது என்பதே நாம் இன்று கற்க வேண்டியப் பாடம். அன்னை மரியாவைப் போன்று கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கும் மனநிலை நம்மில் உருவாக வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் திட்டத்துக்கு நம்மை தாழ்ச்சியோடு அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கற்பிக்கிறது. மண்ணுலகில் உள்ளவற்றையே முழுமை யாக உணர முடியாமல் இருக்கும் நாம், விண்ணுலகில் இருப்பவற்றை கண்டுபிடிக்க ஆசை கொள்வதால் எந்த பயனும் இல்லை என்பதை முழுமனதோடு ஏற்க அழைக்கப்படு கிறோம். ஆண்டவரின் ஆவியால் கிடைக்கும் ஞானத்தாலே நாம் கடவுளுக்கு உகந்த வற்றை கற்றுக் கொள்கிறோம். தூய ஆவியின் வழிநடத்துதல் நம்மை மீட்பின் பாதை யில் அழைத்துச் செல்ல வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் பொருட்டு நன்மை செய்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். புனித பவுலை இயேசுவின் நற்செய்திக்காக துன்புறும் கைதியாக இங்கு நாம் காண்கிறோம். ஒனேசிம் என்ற அடிமையை உடன் சகோ தரனாக ஏற்றுக் கொள்ளுமாறு அவரது தலைவரான பிலமோனிடம் பவுல் பரிந்துரைப் பதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் பொருட்டு அனைவருக்கும் நன்மை செய்பவர்களாக வாழ்ந்து அவரது உண்மை சீடராக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நன்மைகளின் ஊற்றாம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவின் வழியில் அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும், நற்செய்திக்காக அனைத்தையும் இழக்கும் துணிவுள்ளவர்களாகவும் வாழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,
  உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் புகழையும், பணத்தையும் நாடிச் செல்லாமல், உலகின் நற்செய்தியாம் இயேசுவை தங்கள் வாழ்வால் பறைசாற்றும் சீடர்களாக வாழத் துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் ஊற்றாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் உமது மேன்மையை அறிந்துகொள்ள உதவும் கருவிகளாக வாழும் ஞானத்தை இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழங்கி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் ஊற்றாம் இறைவா,
   போராலும், வன்முறையாலும் உலகை ஆள நினைப்பவர்கள் மனம் திரும்பவும், உமது அன்பின், அமைதியின், உண்மையின் அரசு உலகெங்கும் நிறுவப்படவும் அருள்புரியுமா
று உம்மை மன்றாடுகிறோம்.
5. அருளின் ஊற்றாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரிலும், கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழந்து, சிலுவையுடன் அவரைப் பின்தொடரும் சீடத்துவ மனநிலையை உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Sunday, September 1, 2013

செப்டம்பர் 1, 2013

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 3:17-18,20,28-29
   குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக் கொண்டோ ரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண் ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12:18-19,22-24
   சகோதர சகோதரிகளே, நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றி யெரிகின்ற, இருள் சூழ்ந்த, மந்தாரமான, சுழல் காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக்கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட் டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக் கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாள ராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 14:1,7-14
   அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர் கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர் களுக்கு கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற் குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங் கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டி ருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்த வர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.'' பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டா ரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெ ழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3