Thursday, September 12, 2013

செப்டம்பர் 15, 2013

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அன்பையும் பரிவையும் உணர்ந்த வர்களாய் பாவத்தில் இருந்து மனமாற்றம் அடைய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் மனம் திரும்பும்போது, காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்த ஆயனாக ஆண்டவர் மகிழ்ச்சி அடைகிறார். தொலைத்த பணத்தைக் கண்டுபிடிப்ப வரைப் போன்று, விண்ணுலகத் தூதரிடையே மகிழ்ச்சி ஏற்படும் என ஆண்டவர் எடுத்து ரைக்கிறார். விண்ணகத் தந்தையின் அன்பை உணராதவர்களாய் அவரை விட்டு விலகிச் சென்ற தருணங்களுக்காக நாம் மன்னிப்பு வேண்டுவோம். மனமாற்றத்துடன் ஆண்டவ ரிடம் திரும்பிவர அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மோசேயின் வேண்டுதலை ஏற்று இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் இரக்கம் காட்டிய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஆண்டவரோடு உரையாடச் சென்ற மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதமானதால், இஸ்ரயேலர் பொற்கன்று வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் சினமுற்ற ஆண்டவர் அவர்களை அழித்தொ ழிக்க நினைக்கிறார். கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியை நினைவூட்டி, இஸ்ர யேல் மக்களுக்காக மோசே பரிந்து பேசுவதையும், அதன் மூலம் இஸ்ரயேல் மக்கள் காப் பாற்றப்பட்டதையும் காண்கிறோம். நாமும் புனிதர்களின் பரிந்துரையால் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவர் இயேசுவின் பரிவன் புள்ள  இரக்கத்தைக் குறித்து எடுத்துரைக்கிறார். ஆண்டவரை அறிந்து கொள்ளும் முன் அவரைப் பழித்துரைத்து, இழிவுபடுத்திய தன்னை, திருத்தூதராக பணியமர்த்திய இரக் கத்தைப் பற்றி பவுல் வியப்படைகிறார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற் படும் நம்பிக்கை மற்றும் அன்பால், அருள் அளவின்றிப் பெருகுவதாக திருத்தூதர் சுட்டிக் காட்டுகிறார். எக்காலத்துக்கும் அரசராய் இருக்கின்ற கடவுளுக்கு, நமது மனமாற்றத்தால் மாட்சி அளிப்பவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எம் ஆயரே இறைவா, 
   உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.
2. எம் நம்பிக்கையே இறைவா,
  இவ்வுலகில் போர்ச் சூழலும், வன்முறைகளும், அமைதியற்ற நிலையும் மறைந்து, நீர் அருளும் அமைதியை சுவைக்கும் வரத்தை உலக நாடுகளின் தலைவர்கள் வழியாக
மக்க ளுக்கு வழங்கிட உம்மை மன்றாடுகிறோம்.
3. எம் நிறைவே இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் உமது இரக்கத்தையும் பொறுமையையும் உணர்ந் தவர்களாய் உம்மைத் தேடி வரவும், தங்கள் மனமாற்றத்தால் நீர் அளிக்கும் மீட்பைக் கண்டுணரவும் துணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.
4. எம் வாழ்வே இறைவா,
   பல்வேறு பாவச் சூழல்களில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் உமது பேரன்பின் மேன்மையை உணர்ந்து மனந்திரும்பவும், தூய வாழ்வு வாழ்வதற்கான மன உறுதியைப் பெறவும் அருள்கூர்ந்திட
உம்மை மன்றாடுகிறோம்.
5. எம் மாட்சியே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை விட்டு வில கிச் செல்லாமல் தந்தைக்குரிய உமது அன்பில் மகிழ்பவர்களாகவும், உமது மாட்சியில் பங்கு பெறுபவர்களாகவும் வாழும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, September 7, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 9:13-18
   "கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. மண்ணுலகில் உள்ளவற் றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டு பிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாம லும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்துகொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுல கில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.''
இரண்டாம் வாசகம்: பிலமோன் :9-10,12-17
   அன்பிற்குரியவரே, கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம் மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக் கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும் பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந் திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலான வனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவ ரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரிய வனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 14:25-33
   அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட் டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமை திக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3