Saturday, February 1, 2014

பிப்ரவரி 2, 2014

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

முதல் வாசகம்: மலாக்கி 3:1-4
   கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்: அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீ ரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார் என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிற வரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப் பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்தி ருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கி பொன், வெள்ளியைப் போல் அவர்களை புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 24:7.8.9.10
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்!

   வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். (பல்லவி)
   மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். (பல்லவி)
   வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். (பல்லவி)
   மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: எபிரேயர்  2:14-18
   சகோதர சகோதரிகளே, ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அல கையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச் சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

வாழ்த்தொலி: லூக்கா 2:32
    அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:22-40
   மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார் கள். ஏனெனில், 'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டி யிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மை யானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத் திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளை போற்றி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார். குழந்தை யைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ் ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப் படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பி ருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந் தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 30, 2014

பிப்ரவரி 2, 2014

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்று நாம் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவரின் திருச்சட்டத்தை நிறைவேற்ற நாம் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தும் மோசேயின் சட்டப்படி தம்மை இறைத்தந் தைக்கு அர்ப்பணித்ததைக் காண்கிறோம். ஆண்டவரின் தாயாக இருந்தும் திருச்சட்டத்தை ஆர்வத்தோடு நிறைவேற்றிய மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் அழைக்கப்படு கிறோம். குழந்தை இயேசுவை கையில் ஏந்திய இறைவாக்கினர் சிமியோனும், கோவிலில் திருப்பணி செய்துவந்த இறைவாக்கினர் அன்னாவும் மீட்பருக்கு சான்று பகர்கின்றனர். இவர்களைப் போல ஆண்டவருக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இயேசுவுக்கு சாட்சிகளாய் திகழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், "நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்" என்று இயேசுவின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கிறது. "அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் இருப்பார்" என்று முன்னுரைக்கப் படுவதைக் காண்கிறோம். "இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச் சிக்கும் காரணமாக இருக்கும்" என்ற சிமியோனின் இறைவாக்குக்கு இது முன்னடையாள மாக விளங்குகிறது. பொன், வெள்ளியைப்போல் தூய்மையாக்கிப் புடமிட ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இறைமகன் இயேசு மனித குழந்தையாக தோன்றியதன் நோக்கத்தை எடுத்துரைக்கிறது. ஊனும் இரத்தமும் கொண்ட மனிதர்களின் இயல்பில் கடவுளும் பங்கு கொண்டார், மீட்பர் இயேசுவின் மரணத்தின் மூலம் சாவு அழிந்துவிட்டது என்ற உண்மை இங்கு தெளிபடுத்தப்படுகிறது. மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகு மாறு இயேசு எல்லாவற்றிலும் நம்மைப்போல் ஆனார் என்பதை உணர நாம் அழைக்கப் படுகிறோம். நம்மைப் போல் சோதனைக்கு உள்ளான இயேசுவின் உதவியை நம் துன்ப நேரங்களில் நாட வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் ஒளியான இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் உமது ஒளியைப் பிரதிபலித்து, உலக மக்கள் அனைவரையும் மீட்பின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் மீட்பான இறைவா,
  கிறிஸ்து இயேசு வழியாக நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
உலக மக்கள் அனை வரும் கண்டடையத் துணைபுரியும் சாட்சிகளாகத் திகழ கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் வழியான இறைவா,
  
எம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆன்மீக இருளும், தீமையும் முழுமையாக அழிந்து, உமது மீட்பின் ஒளியை நோக்கிய பாதையில் மக்கள் அனைவரும் வழிநடக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் நிறைவான இறைவா,
   இவ்வுலக வாழ்வின் துன்பங்களாலும், சோதனைகளாலும் உம்மை விட்டு விலகிச் செல்லும் மக்கள் அனைவரும், உமது வழிகாட்டுதலால் மீட்பைக் கண்டடைய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் இலக்கான இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது திருவுளத்தை அறிந்து வாழவும், இயேசுவின் வழியாக நீர் அருளும் மீட்புக்கு சான்று பகரவும் உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.