Thursday, February 6, 2014

பிப்ரவரி 9, 2014

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்பர்களே,
   பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்து இயேசுவின் சீடர்களான நாம் ஒவ்வொருவரும் உல கிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக் கிறது. உப்பைப் போன்று நாமும் மற்றவர்களின் வாழ்வில் சுவையூட்டுபவர்களாக திகழ இயேசு நம்மை அழைக்கிறார். இருளின் பிடியில் சிக்கித் தவிப்போருக்கு ஒளியாக சுடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறரது வாழ்வில் சுவை தரும் உப்பாகவும், சுடர் விடும் ஒளியாகவும் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
     இன்றைய முதல் வாசகம் நமது ஒளியை மற்றவர்கள் முன் ஒளிரச் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தருகிறது. பசித்தோருக்கு உணவளிக்கவும், வறியோருக்கு உதவி செய்யவும் இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். பிறரை சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு தீமைகளுக்கு பதிலாக நன்மைகளைச் செய்து, இருளின் நடுவே ஒளி வீசுபவர்களாக திகழ இறைவனின் உதவி வேண்டி, இவ்வாசகத்தை உள மேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் திருத்தூதர் பவுல், இயேசுவின் நற்செய்திக்கு சான்று பகர்ந்தது குறித்து எடுத்துரைக்கிறது. கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்கும் அளவுக்கு தன்னிடம் சொல்வன்மையோ ஞானமோ இருந்ததில்லை என்று பவுல் கூறு கிறார். இருந்தாலும் அங்கு தூய ஆவியின் வல்லமை செயல்பட்டதை நினைவுறுத்து கிறார். நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே என்பதை உணர்ந்து செயலாற்ற இறைவனின் அருள் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற் போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றே இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வழிகாட்டும் ஒளியே இறைவா, 
   உலகெங்கும் வாழும் பிற சமய மக்களிடம் உமது நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படும் ஆவலை கிறிஸ்தவர்கள்  அனைவரது உள்ளத்தி லும் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. சுவையூட்டும் உப்பே இறைவா,
   எம் நாட்டில் உம்மைப் புறக்கணித்து சுவையற்ற வாழ்வு வாழும் மக்களிடையே
உமது நற்செய்தியை சுவையைப் பரப்பும் உப்பாக செயல்படும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடம் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிக்கும் சுடரே இறைவா,
   தீமைகளின் பிடியிலும், பாவ இருளிலும், துன்ப நோயிலும் சிக்கி, ஆறுதல் இழந்து தவிக் கும் மக்கள் அனைவருக்கும் ஒளியாக இருந்து வழிகாட்டி, உப்பாக இருந்து சுவையூட்டு மாறு 
உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்வின் நிறைவே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது வல்லமையில் முழுமையான நம்பிக்கை வைத்து, தங்கள் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் உப்பாகவும் ஒளியாகவும் திகழச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 1, 2014

பிப்ரவரி 2, 2014

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா

முதல் வாசகம்: மலாக்கி 3:1-4
   கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்: அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீ ரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார் என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிற வரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப் பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்தி ருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கி பொன், வெள்ளியைப் போல் அவர்களை புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 24:7.8.9.10
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்!

   வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். (பல்லவி)
   மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். (பல்லவி)
   வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். (பல்லவி)
   மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: எபிரேயர்  2:14-18
   சகோதர சகோதரிகளே, ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அல கையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச் சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

வாழ்த்தொலி: லூக்கா 2:32
    அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:22-40
   மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார் கள். ஏனெனில், 'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டி யிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மை யானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத் திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளை போற்றி, "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார். குழந்தை யைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ் ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப் படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார். ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பி ருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந் தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3