Wednesday, May 30, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன், தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், வரலாற்றில் செயல்படுகின்ற இஸ்ரயேலின் ஆண்டவரே உண்மையான கடவுள் என்பதை எடுத்துரைக்கிறது. தமது உரிமைச்சொத்தாக இஸ்ரயேல் இனத்தை தேர்ந்தெடுத்து வழிநடத்திய கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து வாழு மாறு மோசே அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழும்போதுதான், உரிமைப்பேறு பெற்றவர்களாய் இருக்க முடியும் என்று எடுத்துரைக்கிறது. பிள்ளைகளுக் குரிய மனப்பான்மையினாலே நாம் கடவுளை 'அப்பா, தந்தையே!' என அழைக்கிறோம் என்று புனித பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அப்பா, தந்தையே இறைவா,
   உமது பிள்ளைகளாகிய இறைமக்களின் மேய்ப்பர்களாக விளங்கும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், மக்களை உமக்கு உகந்தவர்களாக உருவாக்கவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணக தந்தையே இறைவா,
   இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதி யிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. வானக அரசரே இறைவா,
   உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த எண்ணங்களிலும், தங் கள் சொந்த விருப்பங்களிலும் நாட்களை செலவிடும்
எம் நாட்டு மக்கள் அனைவரும், மறுவுலக வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடிட துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் மதம், இனம், குலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளை கள் என்ற உணர்வோடு ஒற்றுமையில் வளரத் தூண்டுதல் அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் ஒன்றித்து வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அன்பிலும் ஒற்றுமையிலும் வளரவும், உமக்கு
விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, May 25, 2012

மே 27, 2012

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:1-11
   பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி யிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலி ருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண் டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கி னார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர் கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர். "பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசபொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரை யடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கி யிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 5:16-25
   சகோதர சகோதரிகளே, தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக் கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவ தில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர் களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடு வோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவ தில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணை யால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

நற்செய்தி வாசகம்: யோவான் 15:26-27,16:12-15
  அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங் களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்க முதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப் படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப் பார்' என்றேன்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலி