Wednesday, August 29, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு தேவையற்ற மனித மரபு களில் இருந்து விலகி கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூயவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித உள்ளத்தின் விளைவுகளாகிய கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களில் இருந்து விலகி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு தந்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளைப் பின்பற்றி வாழுமாறு ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். உடலின் தூய்மையை விட உள்ளத்தின் தூய்மையையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என் பதை இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார். நம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் தூய எண்ணம் கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் அளித்த நியமங்களின்படி நடக்க இஸ்ரயேல் மக்களை மோசே உற்சாகப்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் கட்டளை படி நடப்போர் ஆண்டவர் வாக்களித்த நாட்டை உரிமையாக்கி கொள்வர் என்ற வாக்குறு தியையும் இஸ்ரயேலருக்கு மோசே வழங்குகிறார். கடவுளின் கட்டளைகளே மக்களை அறிவிலும் ஞானத்திலும் சிறந்ததாக மாற்றும் என்ற தெளிவைப் பெற நாமும் அழைக் கப்படுகிறோம். நம் ஆண்டவர் நம்மோடு இருக்குமாறு அவர் தந்த கட்டளைகளை நம் வாழ்வில் கடைபிடித்து தூயவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி சாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நிறைவான வரங்களும், நல்ல கொடைகளும் விண்ணகத் தந்தையாம் கடவுளிடம் இருந்தே வருகின் றன என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், உள்ளத்தில் ஊன்றப்பட்ட இறைவார்த்தைகளுக்கு ஏற்ப வாழுமாறு நமக்கு அறிவுரை வழங்குகிறார். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூயதும் மாசற்றதுமான வாழ்வு வாழ்ந்து, மீட்படையும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பின் ஊற்றாம் இறைவா, 
   உம் திருச்சபையை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துற வறத்தார் அனைவரும், உமக்கு உகந்த தூய வாழ்வு வாழவும், மக்கள் அனைவருக்கும் மீட்பின் கருவிகளாகத் திகழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் பிறப்பிடமாம் இறைவா,
  உலகின் பல நாடுகளிலும் நீதியின்றி அடக்கி, ஒடுக்கப்படும் மக்கள் மீது இரக்கம் காட்டி, உமது அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர்களாய் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற் றில் பங்குபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் உறைவிடமாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்களும் தலைவர்களும் உண்மை கடவுளாகிய உமது அன்பை உண ரவும், உமது கட்டளைகளின்படி வாழ்ந்து இந்த நாட்டை வளப்படுத்தவும் தேவையான அருளுதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வரங்களின் வள்ளலாம் இறைவா,
  
கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல் களின் பிடியில் சிக்கித் தவிப்போர் அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தூய்மையின் நிறைவாம் இறைவா,
   இயேசுவின் கட்டளைகளுக்கு ஏற்ப மனித மரபுகளிலிருந்து விலகி, உம்மையும் பிற ரையும் அன்பு செய்து தூயவர்களாய் வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை, அருட்சகோ தரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, August 24, 2012

ஆகஸ்ட் 26, 2012

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

முதல் வாசகம்: யோசுவா 24:1-2,15-17,18
   அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதி காரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: "ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார் வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங் களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர் களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.'' மக்கள் மறு மொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களி டத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்'' என்றனர்.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5:21-32
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவ ருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச் சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத் துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லா மல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம் மீதே அன்பு கொள்கிற வர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். "இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்'' என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்து வுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:60-69
   அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்க ளிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்க ளுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந் திருந்தது. மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்'' என்றார். அன்றே இயேசு வின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போ வோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவு ளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3