Thursday, January 31, 2013

பிப்ரவரி 3, 2013

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் பணியில் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி சிந் திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு இஸ்ர யேல் மக்களிடையே வல்லமை மிகுந்த ஓர் இறைவாக்கினராக திகழ்ந்தார். இறைவாக் கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை அவர் அறிந் திருந்தார். இஸ்ரயேலில் பணியாற்றிய இறைவாக்கினர் பலரும் சந்தித்த அனுபவங் களைப் பின்புலமாக கொண்டு இயேசு துணிவோடு செயல்படுவதைக் காண்கிறோம். ஆண்டவரின் உண்மையான வார்த்தைகள் இஸ்ரயேலரை சீற்றம் கொள்ளச் செய்ததாக இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசுவின் கருக்கு வாய்ந்த வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டு, மனந்திரும்பிய புதுவாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவை நம் வாழ்வில் முழுமையாக ஏற்று, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி யும், அவர் முன் இருக்கும் சவால்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. தாய் வயிற்றில் உருவாகும் முன்பே கடவுளுக்கு அறிமுகமானவராகவும், பிறப்பதற்கு முன்பே ஆண்டவ ரால் திருநிலைப்படுத்தப்பட்டவராகவும் இறைவாக்கினர் விளங்குகிறார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். மக்கள் அனைவரின் எதிர்ப்புக்கு ஆளானாலும், அதை தாங்கி கொள்ளும் வலிமைமிகு வெண்கலச் சுவராக இறைவாக்கினர் திகழ்வதையும் காண்கி றோம். இறைவார்த்தைக்கு உள்ளங்களைத் திறந்தவர்களாய் வாழ்ந்து, கடவுளின் திருவு ளத்தை நிறைவேற்றுபவர்களாய் திகழும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், அன்பின் மேன்மையைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார். அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்ப டாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது என, அன்பின் பெருமைகளை பவுல் அடுக்கிக்கொண்டே செல்கிறார். இறைவாக்கு உரைக்கும் கொடையும், பரவசப்பேச் சுப் பேசும் கொடையும், அறிவும் அழிந்துபோனாலும், அன்பு ஒருபோதும் அழியாது என உரைக்கும் திருத்தூதர், விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றை விட அன்பே உயர்ந்தது நமக்கு சுட்டிக்காட்டுகிறார். நாம் பெற்றுள்ள கடவுளின் கொடைகளை நிறைவான அன் போடு பயன்படுத்தும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உலகின் நற்செய்தியான இறைவா, 
   இக்கால உலகில் நற்செய்தி அறிவிப்பதன் சவால்களை உணர்ந்தவர்களாய், உமது ஆற்றலின் துணையோடு திருச்சபையை வழிநடத்தும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர் கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கிப் பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பே உருவான இறைவா,
  உலக மக்கள் அனைவரும் அன்பில் வளரவும், அதன் வழியாக
பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிசெயல், தன்னலம், தீவினை போன்றவை மறைந்து, உண்மையும் நன்மை யும் உலகில் நிலைபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நன்மையை விதைப்பவரான இறைவா,
  
எம் நாட்டு மக்களை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரையும் உமது கருவிகளாக மாற்றி, அவர்கள் வழியாக உம்மைப் பற்றிய உண்மையின் நற்செய்தியை எம் நாடு முழுவதும் விதைத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கொடை வள்ளலான இறைவா,
   உமக்கு உகந்த விசுவாசிகளுக்கு நலம் அளிக்கும் கொடைகளை வழங்கி, இந்த சமூ கத்திலும், குடும்பங்களிலும், தனிநபர்களிலும் காணப்படும் அனைத்து விதமான தீமை களும், நோய்களும் நீங்க துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரான இறைவா,
   உமது திருமகனின் வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டவர்களாய், மனந்திரும்பிய புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனை வருக்கும் அளித்து, இயேசுவின் வழியில் உமது பிள்ளைகளாக திகழும் வரமருள வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, January 26, 2013

ஜனவரி 27, 2013

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: நெகேமியா 8:2-4,5-6,8-10
   அந்நாள்களில் ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள் ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண் பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர். திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின் மேல் நின்று கொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திரு நூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண் டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி "ஆமென்! ஆமென்!'' என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்க ளுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர். ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்'' என்றனர். ஏனெனில் மக்கள் அனைவ ரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத் தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென் றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை'' என்று கூறினார்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12:12-30
   சகோதர சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயி னும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்பு களால் ஆனது. "நான் கை அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல'' எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? "நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல'' எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட் பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய் இருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடை யதாய் இருந்தாலும் உடல் ஒன்றே. கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை கால்களைப் பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல முடியாது. மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன் புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்பு கள். அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டா வது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக் கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்லசெயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:1-4,4:14-21
   மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப் படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன். அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயா வுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறை வாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத் தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொ ழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறை வேறிற்று'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3