Thursday, October 17, 2013

அக்டோபர் 20, 2013

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
செபிப்பவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நேரிய உள்ளத்தோடு மன்றாடும் போது, அவர் நம் செபத்துக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையைப் பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் வேண்டுகோளுக்கு இவ்வுலக அதிகாரிகள் பதில் அளிப்பதைக் காட்டிலும், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்டவர் விரைந்து செயல்படுவார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். "தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்க ளுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்து வாரா?" என்ற இயேசுவின் கேள்வியை மனதில் இருத்துவோம். நம் வேண்டுதலுக்கு கட வுள் உரிய பதில் தருவார் என்ற நம்பிக்கையோடு நமது வேண்டுதல்களை ஆண்டவரிடம் சமர்ப்பித்து, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், அமலேக்கியரை எதிர்த்துப் போரிட்ட மோசேயின் செபத் தால் இஸ்ரயேலர் வெற்றியடைந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. 'மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்' என்று எழுதப்பட்டிருப் பதைக் காண்கிறோம். அவ்வாறே, கடவுளை நோக்கி நம் உள்ளத்தை உயர்த்தும் போதெல் லாம் நாம் வெற்றி அடைகிறோம், நாம் மனம் தளரும் போதெல்லாம் தோல்வியை சந் திக்கிறோம். கடவுள் மீது நம்பிக்கையிழந்து சோர்ந்து போகும் நேரத்தில் அவரது அருட் கரம் நம்மை வழிநடத்த வேண்டிஇவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுள் மீதான நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருக்க அழைப்பு விடுக்கிறார். மறைநூலை வாசிக்கும் நாம் கற்பிப்ப தற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழ பயிற்றுவிப்பதற்கும் ஞானம் பெற அழைக்கப்படுகிறோம். வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இறைவார்த் தையை அறிவிப்பதில் கருத்தாயிருக்குமாறு புனித பவுல் நம்மை அழைக்கிறார். நாம் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் நிலைத்திருந்து செப வாழ்வில் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிலைத்திருப்பவரே இறைவா, 
  திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு செப வாழ்வில் நிலைத்திருக்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி வழங்குபவரே இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உண்மையிலும் நேர்மையிலும் நிலைத்தி ருந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் சீரிய முறையில் நீதி வழங்க உதவ
வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. உதவி செய்பவரே இறைவா,
 
எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் உம் வழியில் நடக்க உதவி செய்பவர்களாய் மாற உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   பல்வேறு பிரச்சனைகளாலும், நோய்களாலும், அடக்குமுறைகளாலும் துன்புறுவோ ருக்கு இரக்கம் காட்டும் மனதை மக்கள் அனைவருக்கும் வழங்கி உதவ வேண்டுமென
உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அருகில் வசிக்கும் மக்களுக்கு உமது அருளால் புதுவாழ்வு கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.