Thursday, October 24, 2013

அக்டோபர் 27, 2013

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
செபிப்பவர்களே,
   பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் வேண்டுதல்களை சமர்ப்பிக்கும்போது நம் மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நம் பெருமையை நாடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நாம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவரைப் போற்றவும், அவரது இரக்கத்தை மன்றாடவும் இயேசு நம்மை அழைக்கிறார். கடவுளிடம் பிறரைப் பற்றி குறை கூறுவதையும் அவர் கண்டிக்கிறார். ஆண்டவர் முன்பு நம் தாழ்நிலையை உணர்ந்தவர்களாய், அவரது இரக்கத்தை அனுபவிக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், யாருடைய மன்றாட்டை ஆண்டவர் கேட்பார் என்று நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது. அனைவருக்கும் நடுவரான ஆண்டவர் ஒருதலைச் சார்பாய் நடந்துகொள்ள மாட்டார் என்பதை உணர அழைப்பு விடுக்கிறது. ஏழைகள், கைம்பெண் கள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவரின் வேண்டுதலுக்கும் அவர் பதில் அளிக்கிறார் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவோர் மற்றும் தங்களைத் தாழ்த்துவோரின் மன்றாட்டுகள் ஆண்டவரை எட்டும் என்ற உறுதி தரப்படுகிறது. நமது தாழ்ச்சியால் கடவுளின் அருளை நிறைவாகப் பெற வரம் வேண்டிஇவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தனது வாழ்வையே செபமாக மாற்றியது பற்றி எடுத்துரைக்கிறார். விசுவாசப் போராட்டத்தில் நம்மையே பலியாகப் படைக்க அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் வாழும்போது, நீதியுள்ள நடுவரான அவர் தரும் வெற்றி வாகையைப் பெற்றுக்கொள் ளலாம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கும் போது, அவர் அனைத்து வகையான தீங்கில் இருந்தும் விடுவிப்பார் என்று புனித பவுல் நமக்கு கற்பிக்கிறார். நமது தூய வாழ்வின் மூலம் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பவர் களாக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அருள் பொழிபவரே இறைவா, 
   இறைமக்களின் அருள் வாழ்வைப் புதுப்பித்து, திருச்சபையை சீரமைக்கும் அருளை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவர் மீதும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவரே இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெருமைகளை நாடாமல், இயற்கையின் வளங்களைப் பாதுகாத்து மக்களுக்கு வாழ்வளிக்க உதவ
வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆற்றல் அளிப்பவரே இறைவா,
 
எம் நாட்டு மக்களை உம்மை நோக்கியப் பாதையில் வழிநடத்தும் ஆற்றலை கிறிஸ்த வர்கள் அனைவருக்கும் அளித்து, செப வாழ்வில் உறுதிபடுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. உதவி செய்பவரே இறைவா,
  
ஏழைகள், கைம்பெண்கள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், வீடிழந்து நிற் போர், கடும் நோயால் தவிப்போர் அனைவருக்கும் உதவி வழங்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம் அருள்பவரே இறைவா,
   உம் முன்னிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ்ந்து, உமது இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வரத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் அருள வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.