இயேசு கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில், பெந்தகோஸ்து நாளன்று இயேசுவின் தாய் மரியாவும் சீடர் களும் ஒரு வீட்டின் மேலறையில் இருந்து இறைவேண்டல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கடவுளின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவியார் நெருப்பு நாவு வடிவில் அவர்கள் மீது இறங்கி வந்தார். பேதுருவும் மற்றவர்களும் வெளியே வந்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். அது மற்ற நாடுகளில் இருந்து அங்கு வந்திருந்தவர்களுக்கு அவரவர் மொழிகளில் கேட்டது. இதனால் அனைவரும் குழப் பம் அடைந்தனர். அது கடவுளின் செயல் என்று உணர்ந்த அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டனர். அன்றே மூவாயிரம் பேர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாயினர். நாள்தோறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர்கள் அப்பம் பிடுதலிலும், பகிர்ந்து வாழ்வதிலும், இறை வேண்டலிலும் நிலைத்து இருந்தனர்.
ரோமில் திருச்சபை:
திருத்தூதர்கள் உலகின் பல இடங்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தனர். பேதுருவும் யோவானும் இணைந்து பல இடங்களில் இயசுவைப் பற்றி யூதர்களிடையே பறைசாற் றினர். கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத யூத சமயத் தலைவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக் கைகளில் இறங்கினர். திருத்தொண்டர் ஸ்தேவான் கொல்லப் பட்டார். பாலஸ்தீனில் திருச்சபையை தொடக்கத்திலேயே வேரறுக்க முயன்ற சவுல் இயேசுவின் காட்சியால் மனம் திரும்பி பவுல் எனப் பெயர் பெற்றார். அவர் பல இடங்களுக் கும் தூதுரை பயணம் மேற்கொண்டு பிற இன மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். திருத்தூதர்கள், திருத்தொண்டர்கள் மற்றும் சாதாரண கிறிஸ்தவர்களின் முயற்சியால் ரோமைய ரின் தலைநகரான ரோமுக்கும் திருச்சபை பரவியது. கி.பி.54ல் பேதுரு தனது தலைமைப் பீடத்தை ரோமில் நிறுவினார். கி.பி.64ல் பேதுருவும் பவுலும் கொலை செய்யப்பட்டனர்.
தொடக்ககால துன்புறுத்தல்கள்:
ரோமப் பேரரசன் நீரோ காலத்தில் கி.பி.64 முதல் 68 வரையிலும், பேரரசன் தொமீசியன் காலத்தில் கி.பி.95,96ஆம் ஆண்டுகளிலும், பேரரசன் ட்ராஜன் காலத்தில் கி.பி.106 முதல் 117வரையிலும், பேரரசன் அவ்ரேலியஸ் காலத்தில் கி.பி.161 முதல் 180 வரையிலும் பல்வேறு சமயத் துன்புறுத்தல்கள் அரங்கேறின. கிறிஸ்தவர்கள் பலவித பழிகள் சுமத்தப்பட்டு, கடுமையாக துன்புறுத்தப்பட்டனர். இயேசுவின் இறைத்தன் மையை மறுத்து ரோமையரின் தெய்வங்களுக்கும், அரசர் களின் சிலைகளுக்கும் வணக்கம் செலுத்தவும், பலியிடவும் வற்புறுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்கள் இதற்கு மறுத்ததால், மரணத் தீர்ப்புக்கு ஆளாகினர். காட்டு விலங்குகளுக்கு இரை யாக்கியும், நீரில் ஆழ்த்தியும், உயிரோடு எரித்தும், வாளால் வெட்டியும், கொதிக்கும் எண்ணெயில் தள்ளியும் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர்.
துறவறத்தின் தோற்றம்:
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் திருச்சபையில் துறவற வாழ்க்கை முறை தோன்றியது. கிறிஸ்துவின் போதனைக ளின்படி வாழ விரும்பிய சிலர், திருமணம் செய்யாமல் காடு, குகை போன்ற தனிமையான இடங்களுக்கு சென்று தவ வாழ்வு மேற்கொண்டனர். இவர்கள் தபோதனர்கள் என்றும், வனத் துறவிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நாள் முழுவதையும் கடுமையான செபத்திலும், தவத்திலும் செலவழித்தனர். வனத் துறவிகளின் புனித வாழ்வு பொது நிலைக் கிறிஸ்தவர்கள் பலரையும் கவர்ந்தது. மக்கள் பல ரும் அறிவுரை பெறவும், துறவறத்தில் இணையவும் இவர் களைத் தேடி வந்தனர். மேலும் செபிக்கவும், தியானம் செய்ய வும், மறையுரைகள் கேட்கவும் வனத் துறவிகள் வாழ்ந்த இடத்துக்கு மக்கள் சென்றனர். துறவிகள் மக்களிடையே பெரிதும் மதிப்பு பெற்றிருந்தனர்.
கிறிஸ்தவத்துக்கு சமய சுதந்திரம்:
பேரரசன் செப்டிமஸ் செவரஸ் காலத்தில் கி.பி.202 முதல் 211 வரையிலும், பேரரசன் மேக்சிமினஸ் காலத்தில் கி.பி.235 முதல் 238 வரையிலும், பேரரசன் டேசியஸ் காலத்தில் கி.பி.249 முதல் 251 வரையிலும், பேரரசன் காலஸ் காலத்தில் கி.பி.251 முதல் 253 வரையிலும், பேரரசன் வலேரியன் காலத் தில் கி.பி.257 முதல் 260 வரையிலும், பேரரசன்அவ்ரேலியன் காலத்தில் கி.பி.274, 275ஆம் ஆண்டுகளிலும், பேரரசன் டியோ கிளேசியன் ஆட்சியில் கி.பி.284-305 காலத்திலும் கிறிஸ்தவர் களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்ந்தன. கிறிஸ்தவர் கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களின் உடைமைகள் சூறையா டப்பட்டன. இறுதியாக கி.பி.312ல் ரோமப் பேரரசின் மேலைப் பகுதியைக் கைப்பற்ற நடந்த போரில், கான்ஸ்டன்டைன் சிலுவை சின்னத்தைக் கொண்டு வெற்றி பெற்றார். இதனால் கி.பி.313ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட்டது. சூறையாடப்பட்ட கிறிஸ்தவர்களின் உடைமைகள் திருப்பிக் கொடுக்கப் பட்டன. அரசனின் லாத்தரன் அரண்மனை திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது.
கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கு சவால்:
கிறிஸ்தவத்துக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட்ட காலத்தில், கிறிஸ்தவத்தின் அடிப்படை விசுவாசக் கோட்பாடுகளிலேயே குழப்பம் நிலவியது. கி.பி.325ல் கூடிய நிசாயா பொதுச்சங்கம், இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்த ஆரியசின் தவறான போதகத்தைக் கண்டித்தது. கி.பி.381ல் நடைபெற்ற கான்ஸ்டாண்டிநோபிள் பொதுச்சங்கம், தூய ஆவியானவரின் இறைத்தன்மையை மறுத்த மசடோனியசின் தவறான போத னையைக் கண்டித்தது. இக்காலத்தில் பல்வேறு துறவற சபைகள் தோன்றின. புனித பெனடிக்ட் இளைஞர்களைக் கொண்ட துறவற சமூகம் ஒன்றை முதலில் தோற்றுவித்து, அதற்கான நெறிகளையும் வகுத்து கொடுத்தார். கி.பி.4ஆம் நூற்றாண்டின் இறுதியில், ரோமப் பேரரசு தளர்ச்சி அடையத் தொடங்கியது. பிராங்கர், ஹூணர், வந்தலர் போன்ற முரட்டு இன மக்கள், ஐரோப்பாவின் வெவ்வேறுப் பகுதிகளைக் கைப்பற்றினர். இதனால் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தில் தளர்ச்சி ஏற்பட்டது.
கிறிஸ்தவத்தின் வளர்ச்சி:
கி.பி.431ல் கூடிய எபேசு பொதுச்சங்கம், நெஸ்டோரியசின் பேதகத்தைக் கண்டித்து, புனித கன்னி மரியா இறைவனின் தாய் என்று அறிக்கையிட்டது. கி.பி.451ல் நடைபெற்ற கால்சீ தோன் பொதுச்சங்கம், இயேசு கிறிஸ்துவில் இறை இயல்பும் மனித இயல்பும் ஒன்றுக்கு ஒன்று குறைவுபடாமல் இருக்கின் றன என்பதை விளக்கிக் கூறியது. 452ஆம் ஆண்டு, இத்தாலி மீதான ஹூணர் இனத் தலைவன் அத்திலாவின் படையெ டுப்பு, திருத்தந்தை முதல் லியோவின் சமாதான முயற்சி யால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் திருத்தந்தையின் செல்வாக்கு மக்களிடையே பெருகியது. இக்காலத்தில் அயர் லாந்து, பிரான்ஸ் உள்பட பல நாடுகளிலும் கிறிஸ்தவம் வளர்ச்சி அடைந்தது. கி.பி.797ல் கூடிய 2ஆம் நிசாயா பொதுச் சங்கம், சொரூப உடைப்பாளர்களை கண்டனம் செய்ததுடன், இயேசு மற்றும் புனிதர்களின் சொரூபங்களுக்கு வணக்கம் செலுத்துவது பக்திக்குரிய செயல் என்றும் அறிக்கையிட்டது.
புனித ரோமப் பேரரசு:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அரசர் சார்ல்மேன், திருத்தந் தைக்கு கீழ்ப்படியாத சில அரசர்களை முறியடித்து திருச்சபை யைப் பாதுகாத்தார். இதனால் திருத்தந்தை 3ம் லியோ புனித ரோமப் பேரரசு என்ற அமைப்பை உருவாக்கி, அதன்முதல் பேரரசராக சார்ல்மேனுக்கு முடிசூட்டினார். பேரரசர், நாட்டில் பல ஆலயங்களைக் கட்டியதுடன், கிறிஸ்தவ மதிப்பீடுகளை யும் புகுத்தினார். கலையும் கலாச்சாரமும் வளர்ச்சி அடைந் தன. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் என ஒவ்வொரு இடமாக புனித ரோமப் பேரரசின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. ஆயினும் இக்காலத்தில், வைக்கிங்கள், ஸ்லாவ்கள், ஸ்கண்டிநேவியர்கள், செக்குகள் எனப் பல்வேறு இனத்தவரும் கிறிஸ்தவத்தை தழுவினர். ஐஸ்லாந்து, ரஷ்யா, கிரீன்லாந்து, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளும் கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக்கொண்டன.
சிலுவைப் போர்கள்:
புனித ரோமப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டாண்டிநோ பிள் நாட்டின் கிழக்குப் பகுதியிலும், திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் நாட்டின் மேற்குப் பகுதியிலும் அமைந்திருந்தன. இத னால் திருத்தந்தையின் பிரதிநிதிக்கும், கீழை ஆயரான பெருந்தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதன் விளைவாக கி.பி.1054ல், கீழைத் திருச்சபையும் மேலைத் திருச்சபையும் தனித்தனியாக பிரிந்தன. 1074ஆம் ஆண்டு நடைபெற்ற தவக்காலத் திருச்சங்கம், ஞான அதிகாரப் பதவி களைத் தவறான வழிகளில் பெறுவதையும், திருமணமான குருக்கள் அருள் அடையாளங்களை வழங்குவதையும் தடை செய்தது. கி.பி.1076ல் செல்ஜுக் இன துருக்கியர், எருசலேமை கைப்பற்றி அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் திருப்பயணி களையும் துன்புறுத்தினர். இதன் விளைவாக, இயேசுவோடு தொடர்புடைய புனித இடங் களை மீட்கவும், கிறிஸ்தவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் சிலுவைப் போர்கள் தொடங்கப்பட்டன. 1095 முதல் 1272 வரை மொத்தம் எட்டு சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இவை கிறிஸ்தவத்தின் வரலாற்றுப் பிழைகள் என அழைக்கப்படுகின்றன.
துறவற சபைகளால் மறுமலர்ச்சி:
கி.பி.1209ல் அசிசி புனித பிரான்சிஸ், பிரான்சிஸ்கன் சபையைத் தோற்றுவித்தார். தங்கள் உடைமைகளை விற்று வறியோருக்கு கொடுத்தல், சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவைப் பின் தொடர்தல் ஆகியவை இந்த சபையின் மையக் கோட்பாடுகள் ஆகும். கி.பி.1215ல் புனித டோமினிக், டோமினிக்கன் சபையை நிறுவினார். ஏழ்மையேத் துறவற வாழ்வின் அடித்தளம் என்பதை இந்த சபைகள் உணர்த்தின. துறவற சபைகளால், திருச்சபையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. புனித டோமினிக், இயேசுவைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்பிய ஆல்பிஜென்சிய பேதகத்தை ஒழிக்கத் தீவிரமாக முயன்றார். புனித பிரான்சிஸ், இயேசுவின் ஏழ் மைப் பிறப்பு மற்றும் பாடுகளின் சிந்தனைகளைப் பரப்புவதில் ஆர்வம் காட்டினார். இதன் விளைவாக செபமாலை, கிறிஸ்து பிறப்பு விழா, சிலுவைப் பாதை மற்றும் நற்கருணை ஆராதனை ஆகிய பக்தி முயற்சிகள் வளர்ச்சி பெற்றன. எனவே இக்காலம் திருச்சபையின் வரலாற்றில் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
புதிய பிரிவினைகள்:
கி.பி.15ஆம் நூற்றாண்டளவில், ஐரோப்பா முழுவதும் மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றி வளர்ந்தன. இவை கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் பக்கம் மக்களைக் கவர்ந்து இழுத்தன. இதனால் திருச்சபையில் விசுவாச வாழ்வு தளர்ந்து, பகட்டு பக்தி முயற்சிகள், ஆடம் பரக் கொண்டாட்டங்கள் போன்ற உலகப் போக்குகள் தோன் றின. சாதாரண மக்கள், கிறிஸ்தவ விசுவாச உண்மைகளைப் பற்றிய அறிவின்றி, பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்களாக வாழ்ந்தனர். திருச்சபையின் ஞானப் பலன்கள் பற்றியத் தவ றான கண்ணோட்டம் நிலவியது. இதனால் திருச்சபையில் புதிய பிரிவினைகள் தோன்றின. 1517ல் மார்ட்டின் லூத்தர் ஜெர்மனியிலும், அதே காலகட்டத்தில் சுவிங்கிலி மற்றும் கால்வின் ஆகியோர் சுவிட்சர்லாந்திலும் பிரிவினைகளைத் தோற்றுவித்தனர். கி.பி.1534ல் இங்கிலாந்து அரசன் 8ஆம் ஹென்றி, சுயநலத்துக்காக இங்கிலாந்து திருச்சபைக்கு தானே தலைவன் என்று அறிவித்தான். கத்தோலிக்க விசுவாசத்தைக் கைவிடாமல் இருந்தவர் களை, பலவிதமாக துன்புறுத்தினான். சிலரைக் கொலையும் செய்தான்.
சீர்திருத்தத்தில் திருச்சபை:
பிரிவினை சபையினர் போதித்த தவறான கொள்கைகளைக் கண்டிக்கவும், கத்தோலிக்க திருச்சபையின் மறையுண்மைக ளில் தெளிவு பெறவும், திருச்சபைக்கு தேவையான சீர்திருத் தங்களை ஆராயவும், கி.பி.1545ல் திரெந்து பொதுச்சங்கம் கூடியது. 1563ல் நிறைவுபெற்ற இந்த சங்கம், மறையுண்மை களை தெளிவுபடுத்தியதுடன் திருச்சபைக்கு தேவையான சீர் திருத்தங்களை செயல்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண் டது. இதன் விளைவாக திருச்சபையில் புதிய மாற்றம் ஏற் பட்டது. இயேசு சபையினரின் உழைப்பால் திருச்சபை, ஆப் ரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளிலும் பரவியது. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சி மற்றும் தொழில் புரட்சி ஆகியவற்றின் காரணமாக, திருச்சபையின் விசுவாச வாழ்வில் தளர்ச்சி ஏற்பட்டது. திருத்தந்தை 13ம் லியோ தொழிலாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், தொழிலாளர்களின் சாசனம் என்ற சுற்று மடலை வெளியிட்டார்.
வத்திக்கான் சங்கங்கள்:
கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வுக்கு தடையாக இருந்த, புதிய சிந்தனைப் போக்குகளை ஆராய்ந்து விசுவாசத்தைப் புதுப்பிக்க, கி.பி.1869ல் முதல் வத்திக்கான் பொதுச்சங்கம் கூடியது. கடவுளின் படைப்பு, இறை வெளிப்பாடு, மனிதனின் பதில் ஆகிய சிந்தனைகள் இதில் இடம்பெற்றன. உலக நாடு களோடு திருச்சபையின் உறவு, விசுவாசத்துக்கு தேவையான மறுமலர்ச்சிப் பணிகள் போன்றவை ஆராயப்பட்டன. திருத் தந்தையின் முதன்மையும், தவறா வரமும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. உலகப் போர்களுக்குப் பிந்திய திருச்சபையின் நிலை யினை ஆராய, கி.பி.1962ல் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியது. 1965ல் முடிவுற்ற இந்த சங்கத்தில், திருச்சபையின் வாழ்வு, அதன் உள் இயல்பு, இன்றைய உல கில் அது ஆற்ற வேண்டியப் பணிகள் ஆகியவை ஆராயப்பட்டு, 16 ஏடுகள் வெளியிடப் பட்டன. இந்த சங்கத்தக்கு பிறகு, கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளும், திருவழிபாட்டு முறைகளும் மறுமலர்ச்சி அடைந்துள்ளன.
இன்றைய திருச்சபை:
இன்றைய கத்தோலிக்க திருச்சபை, திருத்தந்தை தலைமை யில் அவரோடு ஒத்துழைக்கும் ஆயர்களால் ஆட்சி செய்யப் படுகிறது. திருச்சபையின் திருப்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொது நிலையினர் அனைவரும் ஆயர்களின் பணி யில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். திருச்சபையின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு அமைப்பு கள் மற்றும் சேவை மையங்கள் ஆகியவை மக்கள் பணி ஆற்றி வருகின்றன. மரியாயின் சேனை, மாதா சபை, திருக் குடும்ப சபை, பாலர் சபை, நற்கருணை வீரர் சபை போன்ற பக்த சபைகள் கிறிஸ்தவ வாழ்வின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. வின்சென்ட் தே பவுல் சபை, இளையோர் இயக்கங்கள் ஆகியவை குழு உணர்வுக்கும், பணி வாழ்வுக்கும் அழைப்பு விடுக்கின்றன. அகில உலக ஆயர் பேரவை, தேசிய அளவிலான ஆயர் மன்றம், மறைமாவட்ட குருக்கள் பேரவை, பங்குப் பேரவை போன்ற அமைப்புகள் மூலம் திருச் சபை நிர்வகிக்கப்படுகிறது.