இயேசுவுக்கு சான்றுகள்

மனிதரின் தேடல்:
   இந்த உலகத்தின் புதிய குழந்தையாக மனிதன் தோன்றியபோது, இயற்கையின் புதிர்களுக்கு விடை காண ஆவல் கொண்டான். இயற்கையில் செயலாற்றும் மேலான ஓர் ஆற்றலைப் பற்றி அதிகமாக அறிய ஆசைப்பட்டான். பல்வேறு வகைகளிலும், பலவித உருவங்களிலும் அந்த ஆற்றலுக்கு வழிபாடு செய்தான். ஆனாலும் நிறைவு பெறாத மனிதன், இயற்கைக்கு மேற்பட்ட அந்த ஆற்றலை நேரில் காண ஆவல் கொண்டான். இயற்கையை படைத்த அந்த கடவுள், ஒரு மனிதராகப் பிறக்க வேண்டுமென மனித மனம் ஏங்கியது; அமைதியில்லாத இந்த உலகில் அமைதியைக் கொண்டு வரும் போதனை களை வழங்கி மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமெனத் தவித்தது; மக்களின் பாவங் களுக்கு பரிகாரமாக கடவுளே தன்னைப் பலியாக்க வேண்டுமென விரும்பியது.
   "வாடுகின்ற பயிர் மழைக்காக காத்திருப்பதுபோல, மக்கள் அனைவரும் உன்னதரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்." - 'தேடுதல்' என்ற சீன நூல்.
   "கடவுளே தனது பெயரால் போதிக்க ஒருவரை அனுப்பாவிடில், மக்களை நல்ல ஒழுக்கத்தில் நிலைநிறுத்த உங்களால் முடியாது." - தத்துவ ஞானி பிளேட்டோ.
   "கடவுளே தோன்றி, உன் பாவங்களால் உண்டான தீமைகளை தன்மேல் ஏற்றுக் கொள்ளும்வரை இந்த சாபத்திற்கு முடிவிருக்கும் என எதிபார்க்காதே." - 'எஸ்கிலஸ்' என்ற கிரேக்க புராணம்.

கடவுளின் திட்டம்:
   உண்மையில் கடவுள் தம்மைத் தேடி, அறிந்து, அன்பு செய்யவும், அதன் வழியாக அவரை அடையவுமே மனிதர்களை உருவாக்கினார். உலக வரலாற்றில் தம்மை வெளிப்படுத்துவது கடவுளின் முன்குறிக்கப்பட்ட திட்டமாக இருந்தது. கடவுள், தம்மை ஆபிரகாமுக்கு உருவம் இல்லாத நிலையில் வெளிப்படுத்தி இஸ்ரயேலரை தமது சொந்த மக்களினமாக தேர்ந்துகொண்டார். அவர்கள் வழியாகவே தமது மீட்புத் திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். இறைமகன் இயேசுவின் வருகைக்காக அவர்களைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் கடவுள் மனிதராக பிறக்க இருந்ததை மக்களுக்கு முன்னறிவித்தனர்.
   "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற் றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' [கடவுள் நம்மோடு] என்று பெயரிடுவார்." - எசாயா 7:14.
   "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோ சகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப் படும்." - எசாயா 9:6.
   "நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்." - திருப்பாடல்கள் 32:8.
   "அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக் காகப் பரிந்து பேசினார்." - எசாயா 53:12.

உலகத்தில் இறைமகன்:
   "பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதைய ரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ண கத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்." - எபிரேயர் 1:1-3.
   'பேதுரு கூறியது: "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமை யைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத் திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார் கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாக கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்." - திருத்தூதர் பணிகள் 10:38-42.
   "நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண் டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்கு கிறது." - 1 யோவான் 4:9-10.

வரலாற்று ஆவணங்கள்:
   "இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரை சிலுவையில் அறைந்து கொள்ளுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவரது சீடர்கள் அறிவித்தார்கள். அதன்படி, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்." - யூத வரலாற்று ஆசிரியர் ப்ளாவியஸ் ஜோசப்பஸ் (கி.பி.37-97).
   "இயேசு கிறிஸ்து இறைமகனாக விளங்கினார். நேர்த்தியானவை அனைத்தும் அவரில் நிறைவுபெற வேண்டியிருந்தது. பிலாத்துவின் அதிகாரத்தில், அவர் நமக்காக பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு உண்மையாகவே இறந்தார். இறந்த அவரை தந்தையாகிய கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அதன் பின்பும் இயேசு தனது திருத்தூதர்களோடு இணைந்து உண்டு குடித்தார்." - அந்தியோக் ஆயர் புனித இக்னேசியஸ் (கி.பி.110).
   "எனக்கு மனிதர்களை நன்றாக தெரியும். இயேசு கிறிஸ்து மனிதர்கள் அனைவரை யும்விட மேலானவர். அவர் தனது மரணத்திலேயே தன் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஒரு சாதாரண மனிதன் இப்படிதான் செய்வானா? அவரது ஞானமுள்ள போதனைகள், அவருடைய ஆன்மீக அரசாட்சி, மற்றும் அவரின் மகிமை ஆகியவை எனக்கு மறைபொருளாகவே இருக்கின்றன. எனவே, இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுள் என்ற உறுதியான முடிவுக்கு வருகிறேன்." - மாவீரன் நெப்போலியன் (கி.பி. 1769-1821).