Thursday, March 7, 2013

மார்ச் 10, 2013

தவக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   தம் மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ள ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப் பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது மனமாற்றத்தின் வழியாக கடவுளுக்கு மகிழ்ச்சி அளிக்க இன் றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வழிதவறிய பிள்ளைகளாய் அலைந்து திரிந்தாலும், கடவுளின் அன்பை உணர்ந்து அவரிடம் திரும்பி வரும் நாளை அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் நாம் முழுமையாக புரிந்துகொள்ளும்போது, அவரது எல்லையற்ற இரக்கத்தில் மகிழ்ச்சி காண முடியும் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் அன்பில் முழு மையாக நம்மை கரைத்துக்கொண்டு, அவரது விருந்துக்கு நம்மை தகுதியாக்கி கொள் ளும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கானான் நாட்டில் இஸ்ரயேலர் கொண்டாடிய முதல் பாஸ்கா விழாவைப் பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்தியருக்கு எதிராக இஸ்ரயேல் மக்க ளுக்கு வாக்களிக்கப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல் நிறைவு பெறுவதை இங்கு காண் கிறோம். ஆண்டவரின் பராமரிப்பில் நாற்பது ஆண்டுகளாக மன்னாவை உண்டு வாழ்ந்த வர்கள், தங்கள் சொந்த உழைப்பின் பலனை மீண்டும் ருசி பார்க்கிறார்கள். எகிப்தியரின் கேலிப் பேச்சுக்கு ஆளான அடிமை வாழ்வுக்கு பதிலாக, ஆண்டவரின் செயலால் இஸ்ர யேலர் உரிமை வாழ்வை அனுபவித்த நிகழ்வு எடுத்துரைக்கப்படுகிறது. நாமும் கடவு ளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த புது வாழ்வை பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நாம் புதிய படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறார். தந்தையாம் கடவுள் நமது குற்றங்களைப் பொருட்படுத்தாமல், ஆண்டவரான இயேசுவின் வழியாக நம்மை அவரோடு ஒப்புரவாக்கினார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். நம்மை புனிதர்களாக மாற்றவே, இறைமகன் இயேசு பாவநிலை ஏற்றார் என்பதை உணர்ந்து வாழ நாம் அழைக் கப்படுகிறோம். நமது மனமாற்றத்தின் வழியாக நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மனமாற்றம் தருபவராம் இறைவா,
   உமது திருச்சபையை மனமாற்றத்தின் பாதையில் வழிநடத்தும் ஆற்றல்மிகு திருத் தந்தையை எங்களுக்கு தந்து, அவருக்கு கீழ்ப்படிந்து வாழும் உள்ளத்தை இறைமக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.
2. அனைவரையும் ஈர்ப்பவராம் இறைவா,
   உமது மாட்சிக்கும் திருவுளத்துக்கும் எதிராக பாவத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அனை வரும் மனந்திரும்பி, உம் அருள் இரக்கத்தை நாடி தேடும் வரமருள வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் அரசராம் இறைவா,
   உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய தீமைகளை உமது அன்புத் தீயால் சுட்டெரிக்க வேண்டுமென்று உரிமையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
4. உண்மையின் உருவாம் இறைவா,
       நீர் ஏற்படுத்திய திருச்சபைக்கும், உம்மை பற்றிய உண்மைக்கும் எதிராக உலகில் உள்ள தவறான சமயங்கள், நம்பிக்கைகள், கொள்கைகளை வேரறுக்க வேண்டுமென்று பணிந்த அன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம்நிறை தந்தையாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நன்மைத் தனத்துக்கு எதிராக செய்த அனைத்து பாவங்களையும் விடுத்து, உம்மிடம் மனந்திரும்பி வர அருள்புரிய வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.