Thursday, May 9, 2013

மே 12, 2013

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
   ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரை யும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனிடம் செல்கிறார். தூய ஆவியாரின் துணையோடு உலகெங்கும் நற்செய்தியை பறைசாற்றி, கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். முதல் கிறிஸ்தவர்களைப் போன்று, ஆண்டவரின் மாட்சியை பிறருக்கு அறிவிக்க இயேசு நம்மை அழைக்கிறார். ஆண்டவருக்கு சான்று பகரும் வகை யில் மனந்திரும்பிய புதுவாழ்வு வாழ, இத்திருப்பலியில் நாம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
     திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து வாசிக்கப்படும் இன்றைய முதல் வாசகம், இயேசு வின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடையும் முன், இறைத்தந்தையின் வாக்குறுதியாகிய தூய ஆவியாரின் வருகைக்காக காத்திருக்குமாறு சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். உலகின் கடையெல்லை வரைக்கும் இயேசுவுக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு உலகின் முடிவில் மீண்டும் வருவார் என்ற முன் னறிவிப்பு வானதூதர்கள் வழியாக வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் வல்லமையாகிய தூய ஆவியாரின் வருகைக்கு நம்மைத் தயார் செய்யும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
  புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இடம்பெறும் இன்றைய இரண்டாம் வாசகம், நம்மில் செயலாற்றும் இறை வல்லமையின் மேன்மையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்த இயேசு, அனைத்துக்கும் மேலான மாட்சியைப் பெற்றிருப்பதை புனித பவுல் எடுத்துரைக்கிறார். தலையாகிய கிறிஸ்துவுக்கு பணிந்து அவரது உடலாக வாழ திருச் சபையின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வழியாக கடவுள் அளிக்கும் உரிமைப்பேற்றை நிறைவாகப் பெற வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.
மாற்று வாசக முன்னுரை:
விண்ணகத்துக்குரியவர்களே,
  எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் இருந்து இடம்பெறும் இன்றைய இரண்டாம் வாசகம், மக்களுக்காக பரிந்து பேசும் தலைமைக் குருவாக இயேசுவை சுட்டிக்காட்டு கிறது. நமது பாவங்களைப் போக்கும் பொருட்டு, கிறிஸ்து தம்மையே ஒரு நிலையான பலியாக செலுத்தினார் என்பதை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது. இறைத்தந்தை யின் திருவுளத்தை நிறைவேற்றி விண்ணகத்திற்குள் நுழைந்திருக்கும் இயேசு, நமக்கு மீட்பு வழங்க மீண்டும் ஒருமுறை தோன்றுவார் என்ற நம்பிக்கை தரப்படுகிறது. நேரிய உள்ளத்தோடும், உறுதியான நம்பிக்கையோடும் ஆண்டவரைப் பின்பற்ற வரம் வேண்டி இவ்வாசகத்தை கவனமுடன் செவியேற்போம். 

இறைமக்கள் மன்றாட்டு:
1. எல்லாம் வல்லவராம் இறைவா,
   உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படை யில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு
, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ணில் வாழ்பவராம் இறைவா,
   இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ  வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தலைசிறந்த அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்களும், தலைவர்களும் இயேசுவின் இறைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வும், அவர் அறிவித்த விண்ணரசில் பங்கேற்க ஆர்வம் கொள்ளவும், எங்கள் நாட்டை உமது ஆட்சிக்கு உரியதா
க்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் நாயகராம் இறைவா,
   பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம் மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால்
உலகெங்கும் நற்செய்தியைப் பறை
சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் தலைவராம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் இணைந்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருச்சபையின் தலையாகிய கிறிஸ்துவோடு ஒன்றித்து செயல்படும் உறுப்புகளாக வாழத் தேவையான அருளாதார நலன்களை கட்டளையிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.