பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை
அன் போடு வரவேற்கிறோம். பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த இன்றைய திருவழிபாடு
நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கு எதிராக ஒருவர் குற்றம் செய்தால், அவருடன் தனியாக இருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுமாறு இயேசு கூறுகிறார். கிறிஸ்தவர்கள் இடையே எழும் பிரச்சனைகளை திருச்சபைக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டுமென நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நற்காரி யத்துக்காக இருவர் மனமொத்து வேண்டினால், கடவுள் நமக்கு தருவார் என்ற உறுதியை இன்றைய நற்செய்தி தருகிறது. கிறிஸ்து இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து ஆண்ட வரின் மாட்சியைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகத்தில், தீமை செய்வோரை எச்சரிக்கை செய்யுமாறு இறைவாக் கினர் எசேக்கியேலை ஆண்டவர் பணிக்கிறார். ஆண்டவரின் வாக்கை கேட்கும் போதெல் லாம் தீயோரை எச்சரிக்குமாறு அவருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், தீயோரின் இரத்தப்பழி எசேக்கியேல் மீது விழும் எனவும் எச்சரிக்கப்படுவதை காண்கிறோம். தீயவர்களை ஆண்டவரின் பெயரால் எச்ச ரித்து திருத்தும் வரம் வேண்டி,
இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தீமையை விடுத்து அன்பு செலுத் துவதில் கருத்தாய் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!" என்ற பிறரன்பு கட்டளையில் நிலைத் திருக்குமாறு அறிவுறுத்துகிறார். அன்பினால் நன்மைக்குரிய செயல்களை ஊக்குவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் வழியில், தீமைக்குரிய சோதனைகளை வெற் றிகொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தீமையை விடுத்து அன்பு செலுத் துவதில் கருத்தாய் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!" என்ற பிறரன்பு கட்டளையில் நிலைத் திருக்குமாறு அறிவுறுத்துகிறார். அன்பினால் நன்மைக்குரிய செயல்களை ஊக்குவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் வழியில், தீமைக்குரிய சோதனைகளை வெற் றிகொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்லாயராம் இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தீய வழியில் செல் லும் மக்களை எச்சரித்து நல்வழியில் நடத்துவர்களாய் திகழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நல்லரசராம் இறைவா,
உலக நாடுகளை வழிநடத்தும் தலைவர்கள், மக்களிடையே ஒற்றுமையை உருவாக் கவும், பிறநாடுகளுடன் நல்லுறவை வளத்துக்கொள்ளவும் துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. நற்றலைவராம் இறைவா,
எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் சமய சுதந்திரத்தை மதிக்கவும், மக்களி டையே பிரிவினை மற்றும் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மருத்துவராம் இறைவா,
உலகெங்கும் நிகழும் போர்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் போன்ற தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பினை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. தந்தையாம் இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தீமையை அகற்றி தூயவர்களாக வாழவும், உம் திருமகனின் பெயரால் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.