கிறிஸ்து பிறப்பு பெருவிழா
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: எசாயா 9:2-4,6-7
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல்
சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே!
அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை
மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன்
அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொரு ளைப் பங்கிடும்போது
அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை
நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளை புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப்
போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத்
தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர்
திருப்பெயரோ 'வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை,
அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும்.
அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும்
முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலை நாட்டுவார்;
இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை
நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து
நிறைவேற்றும்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 96:1-2.2-3.11-12.13
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவ ரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங் கள். (பல்லவி)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். (பல்லவி)
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ள னவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொ ழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். (பல்லவி)
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். (பல்லவி)
இரண்டாம் வாசகம்: தீத்து 2:11-14

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம்
இறைப் பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து,
கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ
இவ்வருளால் பயிற்சி பெறு கிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது
நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய
இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா
நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வ முள்ள தமக்குரிய
மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.
வாழ்த்தொலி: லூக்கா 2:10-11
அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறி விக்கிறேன். இன்று
ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: லூக்கா 2:1-14