பொதுக்காலம் 33-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் அரசருக்குரிய மாட்சியுடன் நமக்கு தீர்ப்பிட வரும் நாளில் நிகழப்போகின் றவை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக நாம் எப்பொழும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. கிறிஸ்து இயேசுவின் பலியால் தூயவர்களாக மாற்றப்பட்டிருக்கும் நாம், தொடர்ந்து அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் இரண்டாம் வருகை நாளைப் பற்றிய அறிவிப் பைத்
தருகிறது. வருகைக்கு முந்திய நாட்கள் துன்ப காலமாக இருக்கும். அந்நாட்களில், இறந்துபோய் மண்புழுதியில் உறங்குவோர் விழித்தெழுவர் என்ற உண்மை
தெளிவுபடுத் தப்படுகிறது. அதன் பிறகு நமது செயல்களுக்கு ஏற்ப, முடிவில்லா வாழ்வுக்கோ, நிலை யான இழிவுக்கோ நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். தூய வாழ்வு வாழ்ந்து, முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ வரம் கேட்டு, இந்த வாச கத்துக்கு செவிகொடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் நாம் பாவ வாழ்வில் இருந்து விடுபடுமாறு, கிறிஸ்து இயேசு தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் அவர், தமது பகைவர்களை கால்மணை ஆக்கும் நாளுக்காக காத்திருக் கிறார். தூயவரான கிறிஸ்துவின் ஒரே பலியால் நாம் என்றென்றும் நிறைவுள்ளவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது எடுத்துரைக்கப்படுகிறது. நாம் தூயவர்களாக மாறும் வகையில், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

1. தூயவராம் இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருமகனின் இரண்டாம் வருகைக்கு மக்களைத் தயார் செய்பவர்களாகவும், உமக்கு உகந்த தூய வாழ்வு வாழ்பவர்களாகவும் திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சி மிகுந்தவராம் இறைவா,
உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், உமது மேலான ஆட் சியை நாடவும், உமது நீதியின் தீர்ப்புக்கு ஆளாக வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், உமது மேலான ஆட் சியை நாடவும், உமது நீதியின் தீர்ப்புக்கு ஆளாக வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மேன்மை நிறைந்தவராம் இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள் ளவும், அனைத்துக்கும் மேலாக உமது நீதியின் அரசை விரும்பித் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள் ளவும், அனைத்துக்கும் மேலாக உமது நீதியின் அரசை விரும்பித் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சி தருபவராம் இறைவா,
பாவம் என்னும் நோயால் உலகில் நிலவும் அன்பின்மை, ஆதரவின்மை, நம்பிக்கை யின்மை, உதவியின்மை போன்றவை அகன்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
பாவம் என்னும் நோயால் உலகில் நிலவும் அன்பின்மை, ஆதரவின்மை, நம்பிக்கை யின்மை, உதவியின்மை போன்றவை அகன்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வு அளிப்பவராம் இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமக்கு உண்மை உள்ளவர்களாக வாழ்ந்து நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வரம் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.