பொதுக்காலம் 33-ம் ஞாயிறு
"அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார்.
மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்.
அக் காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர்
எழுதப்பட்டுள் ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய்
மண்புழுதியில் உறங்கு கிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர்
முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா
இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத் தின் பேரொளியைப் போலவும், பலரை
நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக்
காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.''
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 10:11-14,18
சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும்
அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒரு போதும் போக்க இயலாதவை.
ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென் றைக்கும் எனச்
செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம்
பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம்
தூயவராக்கிய வர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.
எனவே பாவ மன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும்
பலிக்கு இடமே இல்லை.
நற்செய்தி வாசகம்: மாற்கு 13:24-32