திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
முதல் வாசகம்: எசாயா 2:1-5
யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி
நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும்
உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய்
உயர்த்தப் படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.
வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, "புறப்படுங்கள் ஆண்டவரின்
மலைக்குச் செல்வோம்; யாக்கோ பின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம்
வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட் டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே
ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற் றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத்
தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப் பளிப்பார்; அவர்கள் தங்கள்
வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டி களைக் கருக்கு
அரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற் றோர் இனம்
வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார் கள்.
யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 122:1-2,3-4,4-5,6-7,8-9
பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அக மகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். (பல்லவி)
எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும். ஆண்டவரின் திருக் குலத்தார் ஆங்கே செல்கின்றனர். (பல்லவி)
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். (பல்லவி)
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; "உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவ தாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" (பல்லவி)
"உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். (பல்லவி)
இரண்டாம் வாசகம்: உரோமையர் 13:11-14

சகோதர சகோதரிகளே, இறுதிக்காலம் இதுவே என அறிந்துகொள்ளுங்கள்; உறக்கத்தி னின்று விழித்தெழும்
நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம் பிக்கை கொண்டபோது
இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது;
பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல் களைக்
களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோ மாக!
பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்துகொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா
ஒழுக்கம், காம வெறி, சண்டைச் சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய
இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
வாழ்த்தொலி: திருப்பாடல் 85:7
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியரு ளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: மத்தேயு 24:37-44
அக்காலத்தில் மானிடமகன்
வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில்
இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக் கும்.
வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை
எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.
வெள்ளப் பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும்
அறியாதி ருந்தார்கள்.
அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர்.
ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர்
திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்;
மற்றவர் விட்டுவிடப்படுவார்.
விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என
உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான்
என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம்
வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய்
இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்."
சிந்தனை: வத்திக்கான் வானொலி