திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எசாயா 35:1-6,10
அந்நாள்களில் பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்
படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி
மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்;
கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம்
கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.
தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங் கால்களை
உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன்
கொள் ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்;
அநீதிக்குப் பழி வாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.''
அப்போது பார்வையற்றோரின் கண் கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள்
கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்;
வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ஆண்டவரால் விடுவிக் கப்பட்டோர் திரும்பி
வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும்
உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும்
அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 146:7,8,9-10
பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும். (அல்லது) அல்லேலூயா.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். (பல்லவி)
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த் துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். (பல்லவி)
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். (பல்லவி)
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 5:7-10

சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயி ரிடுபவரைப் பாருங்கள். அவர்
நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும்
பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமை யோடு இருங்கள்.
உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி
வந்துவிட்டது. சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு
ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்.
இதோ நடுவர் வாயி லில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள்
துன்பத்தைத் தாங்குவதிலும் பொறு மையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின்
பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்க ளுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
வாழ்த்தொலி: எசாயா 61:1
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லே லூயா!
நற்செய்தி வாசகம்: மத்தேயு 11:2-11
சிந்தனை: வத்திக்கான் வானொலி