மூவொரு இறைவன் பெருவிழா
முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 34:4-6,8-9
அந்நாள்களில் ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து
சீனாய் மலைமேல் ஏறிச் சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு
போனார்.
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, 'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார்.
அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! ஆண்டவர்;
இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்;
பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்" என அறிவித்தார்.
உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே! நான்
உண்மையி லேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக்
கழுத்துள்ள மக் கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள்
கொடுமையையும் எங் கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச்
சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்.
பதிலுரைப் பாடல்:
தானியேல் (இணைப்பு) 1:29.30,31.32,33
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. (பல்லவி)
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. (பல்லவி)
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. (பல்லவி)
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 13:11-13

சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங் கள்; உங்கள்
நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன
ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும்
அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள்
அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட் புறவும் உங்கள் அனைவரோடும்
இருப்பதாக!
வாழ்த்தொலி: திருவெளிப்பாடு 1:8
நற்செய்தி வாசகம்: யோவான் 3:16-18
அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக! அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: யோவான் 3:16-18
சிந்தனை: வத்திக்கான் வானொலி