கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா
திருப்பலி முன்னுரை:
"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்."
நற்கருணைக்குரியவர்களே,கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு, நற்கருணை வடிவில் எப்போதும் நம் மோடு இருக்கிறார். "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வை கொண்டுள்ளார்" என்ற இயேசுவின் வாக்குறுதி, நற்கருணையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. கல்வாரி பலியின் நிகழ்வாகிய இந்த திருப்பலி கொண்டாட்டம், வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நமக்கு விருந்தாக்குகிறது. இயேசுவின் சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடிக்கும் பேறுபெற்றுள்ள நாம், அவரோடு என்றென்றும் இணைந்தி ருக்கும் வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
நற்கருணைக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகத்தில் மோசே, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் மனிதர் உயிர் வாழ்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகிறார். நற்கருணையின் முன்னடை யாளமாக விளங்கும் மன்னாவால், இஸ்ரயேலர் உண்பிக்கப்பட்டதை நினைவூட்டுகிறார். கடவுளின் கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறோமா என்பதை ஆண்டவர் சோதித்து அறி கிறார் என்பதையும் எடுத்துரைக்கிறார். ஆன்மீக வறட்சி நிலவும் பாலைநிலத்திலும், வாழ் வளிக்கும் உணவாக நம்மிடம் வரும் நற்கருணை நாதருக்கு உகந்தவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமாக செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நற்கருணைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நற்கருணை பற்றிய தொடக்கத் திருச்சபையின் விசுவாசத்தை அறிக்கையிடுகிறார். அப்பத்தை பிட்டு உண்ணுதல், கிறிஸ் துவின் உடலில் பங்குகொள்வது என்பதையும், கிண்ணத்திலிருந்து பருகுதல், கிறிஸ்து வின் இரத்தத்தில் பங்குகொள்வது என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஒரே நற்க ருணை விருந்தில் பங்குபெறும் நாம் அனைவரும், கிறிஸ்துவுக்குள் ஒற்றுமையாக வாழ அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் மறையுடல் உறுப்புகளாக ஒன்றித்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமாக செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கும் இருப்பவரே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவா சத்தில் வளர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமையை அருள்பவரே இறைவா,
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மை யையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவே இறைவா,
எம் நாட்டு தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க் கவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் அளிப்பவரே இறைவா,
உலகில் பல்வேறு அச்சுறுத்தல்களாலும், துன்புறுத்தல்களாலும் வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி நிற்கும் மக்களுக்கு, தேவையான ஆறுதலும் உதவியும் கிடைக்குமாறு அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமே இறைவா,
எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளர உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.