Saturday, January 25, 2014

ஜனவரி 26, 2014

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 9:1-4
   முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறு வடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள் ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட் டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோ ரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 27:1.4.13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

   ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? (பல்லவி)
   நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்ட வரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண் டறிய வேண்டும். (பல்லவி)
   வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:10-13,17
   சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொரு வரும் 'நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, 'நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங் கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய் தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையி லான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ் துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். 

வாழ்த்தொலி: யோவான் 1:14,12
     அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி னார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லே லூயா! 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 4:12-23
   அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயா வுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறி யது: "செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப் பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.'' அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ண ரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு கலிலேயக் கட லோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலை களை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோத ரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர் கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, January 23, 2014

ஜனவரி 26, 2014

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவரது மகிழ்ச்சியில் ஒரு மித்து பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கை நிறைவேற்றும் விதமாக, சாவின் நிழல் சூழ்ந்தவர்கள் மேல் சுடர் ஒளியாக உதித்தவர் நம் ஆண்டவர் இயேசு. பாவத்தளையால் கட்டுண்ட மக்களுக்கு சிலுவை மரணத்தால் அருள் வாழ்வை வழங்க வந்தவர் அவரே. மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை மனிதரைப் பிடிப்பவர்களாக மாற்றும் வல்லமையை இயேசுவி டம் காண்கிறோம். விண்ணரசின் நற்செய்தியைப் பறைசாற்றி, மக்களின் நோய் நொடி களை குணப்படுத்திய இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்ற வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் கலிலேயப் பகுதிக்கு ஆண்டவர் அளிக்க இருக்கும் மேன் மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. 'காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண் டார்கள்' என்ற மகிழ்ச்சியின் இறைவாக்கு உரைக்கப்படுகிறது. ஆண்டவரின் வல்லமை யால், மக்களுக்குச் சுமையாக உள்ள நுகம் உடைக்கப்படும் என்றும், அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடி தகர்க்கப்படும் என்றும் வாக்களிக்கப்படுகிறது. நமது வாழ்வைச் சூழ்ந் துள்ள துன்பமெனும் இருள் மறைந்து, மகிழ்ச்சியின் ஒளி பெருக ஆண்டவரின் உதவி கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்தவர்கள் அனைவரும் பிளவுபடாமல் ஒத்த கருத்துடன் வாழ அழைப்பு விடுக்கிறார். நமது மீட்புக்காக சிலுவை யில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசுவின் மீதான நம்பிக்கையில் நாம் ஒரே மனத்து டன் உறுதியாக நிலைத்திருக்க திருத்தூதர் அறிவுறுத்துகிறார். ஒரே திருமுழுக்கில் பங்கு பெற்றுள்ள நாம் அனைவரும் இறையரசின் வளர்ச்சிக்காக ஒரே நோக்கத்துடன் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் நற்செய்திக்காக ஒருங்கிணைந்து செயலாற்ற ஆண்டவரின் அருள் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவரே இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், உம்மை அறியாத மக்களுக் கும் நற்செய்தி பணியாற்ற துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசுகளை அமைப்பவரே இறைவா, 
   எங்கள் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் உமது நற்செய்தி பரவலுக்கு துணை நிற்கவும், இந்திய மக்களிடையே நிலவும் ஆன்மிக இருளை நீக்கி உமது ஒளி யைக் காணச் செய்யவும் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்றிப்பை உருவாக்குபவரே இறைவா,
   உலகெங்கும் பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபடவும், உம்மை அறியாத
மக்களிடையே உமது மீட்பின் நற்செய்தியை ஒற்றுமை யுடன் கொண்டு சேர்க்கவும் அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா,
   பாவம், தீமை, நோய் ஆகியவற்றின் கட்டுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உமது அருள் நலன்களால் புதுவாழ்வு தந்து, உமது மீட்பின் மகிழ்ச்சியை
த் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நற்செய்தியே இறைவா,
   எம் பங்கு சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வரும், ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாக உமக்கு சான்று பகர்ந்து வாழ அருள் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.