பொதுக்காலம் 3-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எசாயா 9:1-4
முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர்
அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி,
யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு
ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார்.
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல்
சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே!
அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை
மிகுதிப்படுத்தினீர்; அறு வடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன்
அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள் ளைப் பொருளைப் பங்கிடும்போது
அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
மிதியான் நாட் டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை
நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப்
போட்டீர்; அவர்களை ஒடுக்குவோ ரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 27:1.4.13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? (பல்லவி)
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்ட வரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண் டறிய வேண்டும். (பல்லவி)
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. (பல்லவி)
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:10-13,17

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக்
கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய்
இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும்
கொண்டிருங்கள்.
என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர்.
நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொரு வரும் 'நான் பவுலைச்
சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான்
கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, 'நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ
சொல்லிக்கொள்கிறீர்களாம்.
கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச்
சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங் கள் திருமுழுக்குப்
பெற்றுக்கொண்டீர்கள்?
திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய் தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை
அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையி லான சொற்களில் இந்நற்செய்தியை
அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ் துவின் சிலுவை பொருளற்றுப்
போய்விடும்.
வாழ்த்தொலி: யோவான் 1:14,12
வாழ்த்தொலி: யோவான் 1:14,12
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி னார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
அல்லே லூயா!
நற்செய்தி வாசகம்: மத்தேயு 4:12-23
சிந்தனை: வத்திக்கான் வானொலி