பொதுக்காலம் 2-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எசாயா 49:3,5-6
ஆண்டவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான்
மாட்சி யுறுவேன்" என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட
இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக
உருவாக்கி னார்.
ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர்
இப்பொழுது உரைக்கிறார்: "யாக்கோபின் குலங்களை
நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயே லில் காக்கப்பட்டோரைத் திருப்பிக்
கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளி தன்றோ? உலகம் முழுவதும் என்
மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தா ருக்கு ஒளியாகவும்
ஏற்படுத்துவேன்."
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 40:1,3.6-7.7-8.9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். (பல்லவி)
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, இதோ வருகின்றேன். (பல்லவி)
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திரு வுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள் ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். (பல்லவி)
என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். (பல்லவி)
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:1-3

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து
இயேசு வின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும்
எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு
இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம்
ஆண்டவர் இயேசு கிறிஸ் துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம்
கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும்
உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
வாழ்த்தொலி: யோவான் 1:14,12
நற்செய்தி வாசகம்: யோவான் 1:29-34
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.
அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: யோவான் 1:29-34
சிந்தனை: வத்திக்கான் வானொலி