Thursday, January 23, 2014

ஜனவரி 26, 2014

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவரது மகிழ்ச்சியில் ஒரு மித்து பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கை நிறைவேற்றும் விதமாக, சாவின் நிழல் சூழ்ந்தவர்கள் மேல் சுடர் ஒளியாக உதித்தவர் நம் ஆண்டவர் இயேசு. பாவத்தளையால் கட்டுண்ட மக்களுக்கு சிலுவை மரணத்தால் அருள் வாழ்வை வழங்க வந்தவர் அவரே. மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை மனிதரைப் பிடிப்பவர்களாக மாற்றும் வல்லமையை இயேசுவி டம் காண்கிறோம். விண்ணரசின் நற்செய்தியைப் பறைசாற்றி, மக்களின் நோய் நொடி களை குணப்படுத்திய இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்ற வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் கலிலேயப் பகுதிக்கு ஆண்டவர் அளிக்க இருக்கும் மேன் மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. 'காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண் டார்கள்' என்ற மகிழ்ச்சியின் இறைவாக்கு உரைக்கப்படுகிறது. ஆண்டவரின் வல்லமை யால், மக்களுக்குச் சுமையாக உள்ள நுகம் உடைக்கப்படும் என்றும், அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடி தகர்க்கப்படும் என்றும் வாக்களிக்கப்படுகிறது. நமது வாழ்வைச் சூழ்ந் துள்ள துன்பமெனும் இருள் மறைந்து, மகிழ்ச்சியின் ஒளி பெருக ஆண்டவரின் உதவி கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்தவர்கள் அனைவரும் பிளவுபடாமல் ஒத்த கருத்துடன் வாழ அழைப்பு விடுக்கிறார். நமது மீட்புக்காக சிலுவை யில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசுவின் மீதான நம்பிக்கையில் நாம் ஒரே மனத்து டன் உறுதியாக நிலைத்திருக்க திருத்தூதர் அறிவுறுத்துகிறார். ஒரே திருமுழுக்கில் பங்கு பெற்றுள்ள நாம் அனைவரும் இறையரசின் வளர்ச்சிக்காக ஒரே நோக்கத்துடன் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் நற்செய்திக்காக ஒருங்கிணைந்து செயலாற்ற ஆண்டவரின் அருள் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவரே இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், உம்மை அறியாத மக்களுக் கும் நற்செய்தி பணியாற்ற துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசுகளை அமைப்பவரே இறைவா, 
   எங்கள் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் உமது நற்செய்தி பரவலுக்கு துணை நிற்கவும், இந்திய மக்களிடையே நிலவும் ஆன்மிக இருளை நீக்கி உமது ஒளி யைக் காணச் செய்யவும் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்றிப்பை உருவாக்குபவரே இறைவா,
   உலகெங்கும் பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபடவும், உம்மை அறியாத
மக்களிடையே உமது மீட்பின் நற்செய்தியை ஒற்றுமை யுடன் கொண்டு சேர்க்கவும் அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா,
   பாவம், தீமை, நோய் ஆகியவற்றின் கட்டுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உமது அருள் நலன்களால் புதுவாழ்வு தந்து, உமது மீட்பின் மகிழ்ச்சியை
த் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நற்செய்தியே இறைவா,
   எம் பங்கு சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வரும், ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாக உமக்கு சான்று பகர்ந்து வாழ அருள் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.