கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா
முதல் வாசகம்: எண்ணிக்கை 6:22-27
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: "நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்;
நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: 'ஆண்டவர் உனக்கு ஆசி
வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து
உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி
உனக்கு அமைதி அருள்வாராக!' இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே
நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்."
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 67:1-2.4.5,7
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனை வரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். (பல்லவி)
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங் களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (பல்லவி)
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. (பல்லவி)
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 4:4-7

சகோதர
சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம்
பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்த வராகவும்
திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய்
இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள்
அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா, தந்தையே,' எனக் கூப்பிடுகிறது.
ஆகையால் இனி நீங்கள் அடிமைக ளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கி றீர்கள். இது கடவுளின் செயலே.
வாழ்த்தொலி: எபிரெயர் 1:1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக் கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: லூக்கா 2:16-21