பொதுக்காலம் 11-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எசேக்கியேல் 17:22-24
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை
ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக்
கொப்புகளி லிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன்.
இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து,
சிறந்த கேதுரு மர மாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம்
உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும். ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச்
செய்துள்ளேன் என்றும், பசுமை யான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத்
தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்."
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 5:6-10
சகோதர சகோதரிகளே, நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும்
வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத்
தெரியும். நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின்
அடிப் படையிலேயே வாழ்கிறோம். நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை
விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். எனவே நாம் இவ்வுடலில்
குடியிருந்தா லும் அதிலிருந்து குடிபெயர்ந் தாலும் அவருக்கு உகந்தவராய்
இருப்பதே நம் நோக்கம். ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக
வேண் டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக்
கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 4:26-34