புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவ ரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நமது ஆண்டவர் இயேசுவின் மீட்பு பணிக்காக உலக மக்களைத் தயாரித்த இறுதி இறைவாக்கினராக திருமுழுக்கு யோவான் இருந்தார். கிறிஸ்துவின் முன்னோடியாக இந்த உலகில் பிறந்த அவர், உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியை மக்களுக்கு சுட்டிக்காட்டினார். கபிரியேல் வானதூதரால் முன்னறி விக்கப்பட்ட அவரது பிறப்பின் நிகழ்வைத் திருச்சபை இன்று சிறப்பிக்கின்றது. யோவா னைப் பின்பற்றி, கிறிஸ்துவை உலகிற்கு சுட்டிக்காட்டுபவர்களாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
அன்பர்களே,
இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் ஒவ்வொருவரும் தாயின் கருப்பையில் இருக்கும்போதே இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது. கடவுளின் ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவாக்கினர்கள், ஆண்டவர் வழங்கும் மீட்பை மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டிகளாக திகழ்வதைப் பற்றியும் இது பேசுகிறது. யோவானைப் போன்று நாமும் மீட்பின் ஒளியாக ஒளிரும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம், தாவீதின் வழிமரபில் தோன்றிய மீட்பரின் வருகைக்கு யோவான் தயார் செய்ததைப் பற்றி பேசுகிறது. மக்கள் பலர் யோவானை மெசியாவாக வேளையில், அவர் தனது தாழ்நிலையை வெளிப்படுத்திய பாங்கை பவுல் எடுத்துரைப் பதைக் காண்கிறோம். யோவானைப் போன்று இறைவன் முன்னிலையில் தாழ்ச்சி உள்ள வர்களாக திகழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. தேர்ந்தெடுத்து வழிநடத்தும் இறைவா,
உமது பணியை உலகெங்கும் நிறைவேற்ற, நீர் தேர்ந்தெடுத்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நிறை உண்மையின் சாட்சிகளாகவும், கிறிஸ்துவை சுட்டிக்காட்டுபவர்களாகவும் திகழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. திருச்சபையை ஒளிர்விக்கும் இறைவா,
உலகெங்கும் வாழும் திருச்சபையின் மக்கள் அனைவரும், உம்மை அறியாத மக்கள் முன்னிலையில் உமக்கு சான்றுபகரவும், உமது வழியில் நடந்து உலகிற்கு ஒளியாக திகழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வழிகாட்டும் நல்லவராம் இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும், அருள் வாழ்விலும் பொருள் வாழ்விலும் செழித்தோங் குமாறு, உம்மைப் பற்றிய ஞானத்தில் வளரவும், நிறை வாழ்வின் உண்மைகளை நாடித் தேடவும் வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மீட்பளிக்கும் நாயகராம் இறைவா,
உலகில் தங்கள் உரிமைகளையும், உடைமைகளையும் இழந்து அகதிகளாக வாழும் மக்களுக்கும், பெற்றோராலும் பிள்ளைகளாலும் கைவிடப்பட்டு அனாதைகளாக வாழ் வோருக்கும் துன்பங்களிலிருந்து மீட்பளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிமையின் மன்னராம் இறைவா,
எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், புனித திருமுழுக்கு யோவானைப் போன்று உமது முன்னிலையில் தாழ்ச்சி உள்ளவர்களாகவும், மற்றவர்களுக்கு உம்மை சுட்டிக்காட்டுபவர்களாகவும் வாழத் தேவை யான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.