பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
இறைவார்த்தைக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை
அன்போடு வரவேற்கிறோம். இறைவனை நம் இல்லத்தில் வரவேற்று உபசரிக்கவும், அவரது வார்த் தையை பணிவுடன் கேட்கவும் நம்மை தயாரிக்குமாறு இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது. நற்கருணை வடிவில் நம்மைத் தேடி வரும் ஆண்டவரை நாம் எத்தகைய தயாரிப்போடு வரவேற்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நோயிலும், பசி யிலும் வாடுவோரில் தம்மைக் கண்டு, உபசரிக்க இறைவன் நம்மை அழைக்கிறார். அதே நேரத்தில், இறைவனின் வார்த்தைக்கு முழுமையாக செவிகொடுத்து, அவர் காட்டும் வழி யில் நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு விரும்பும் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
இறைவார்த்தைக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், வழிப்போக்கர் வடிவில் தோன்றிய ஆண்டவரை ஆபிரகாம் உணவு வழங்கி உபசரித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. திரித்துவ இறைவனின் அடையா ளமாக மூன்று ஆட்கள் இங்கு தோன்றுவதைக் காண்கிறோம். அவர்களுக்கு அப்பங்கள் சுட்டும், இளங்கன்று கறி சமைத்தும் ஆபிரகாம் விருந்து படைப்பதைக் காண்கிறோம். ஆபிரகாம் அளித்த விருந்தை உவப்போடு ஏற்ற ஆண்டவர், சாராவுக்கு ஈசாக்கின் பிறப் பினை வாக்களிக்கிறார். நாம் முழு மனதோடு கடவுளுக்கு பணி செய்து, அவரது கொடை களை தாராளமாய் பெற்று மகிழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவார்த்தைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், காலங்காலமாக மறைந்திருந்து கிறிஸ்து இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறைத் திட்டத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். மனிதராக பிறந்த வார்த்தையான இறைவன், நமக்காக அனுபவித்த வேதனையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் வழியாக கடவுளின் திட்டம் மாட்சியுடன் செயல்படுவதாக பவுல் கூறுகிறார். கிறிஸ்துவில் முதிர்ச்சி பெற்று, நிலை வாழ்வின் மாட்சியைப் பெற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவைப் பற்றிய ஞானத்தில் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், காலங்காலமாக மறைந்திருந்து கிறிஸ்து இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறைத் திட்டத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். மனிதராக பிறந்த வார்த்தையான இறைவன், நமக்காக அனுபவித்த வேதனையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் வழியாக கடவுளின் திட்டம் மாட்சியுடன் செயல்படுவதாக பவுல் கூறுகிறார். கிறிஸ்துவில் முதிர்ச்சி பெற்று, நிலை வாழ்வின் மாட்சியைப் பெற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவைப் பற்றிய ஞானத்தில் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. வாக்குறுதி தருபவராம் இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது வாக்குறுதிக்கு தகுதி உள்ளவர்களாக வாழவும், மக்கள் உம்மிடம் கொண்டு சேர்க்கவும் வரமருள வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. திட்டமிட்டு செயல்படுத்துபவராம் இறைவா,
உலகில் வாழும் நாட்களில் உம்மைப் பற்றிய உண்மையைத் தேடவும், உம் திருமக னில் நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தைப் புரிந்துகொள்ளவும் மக்கள் அனைவருக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நல்வழி காட்டுபவராம் இறைவா,
உமது இறைவார்த்தையை அறிவிக்கவும், கேட்கவும் தடையை ஏற்படுத்தும் அமைப்பு கள் உலகிலிருந்து மறையவும், நற்செய்தி பணிக்கு இடறலாக செயல்படும் மனிதர்கள் மனந்திரும்பவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதி அளிப்பவராம் இறைவா,
உலகில் போர்கள், கலவரங்கள், அடக்குமுறைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வாழும் மக்கள் அனைவரும் உமது உதவியை வேண்டி, ஆறுதலடையும் வர மருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உணவளித்து காப்பவராம் இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உம் திருமகனின் வார்த்தைகளைப் பின்பற்றி, உமது திருவுளத்தை எங்கள் வாழ்வாக்கிட வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.