Thursday, September 19, 2013

செப்டம்பர் 22, 2013

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். நேரிய உள்ளத்துடன் ஆண்டவருக்கு பணிவிடை புரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்பவர்களாகவும், அதன் வழியாக நற்செய்தியைப் பறைசாற்றுபவர்களா கவும் திகழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கும் கிறிஸ்துவின் அரசை நிறுவும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமது தலைவர் இயேசுவின் விருப்பத்தை திருச் சபையிலும், சமூகத்திலும் நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து வாழ்வது நம் கடமை. ஆண்டவரின் திருவுளத்தை பொறுப்புடன் நிறைவேற்றும் நேர்மையுள்ள பணியாளர்க ளாக வாழும் அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ், நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்யும் வணிகர்களை ஆண்டவர் பெயரால் கண்டிக்கிறார். நாட்டில் மதிப் பின்றி வாழும் வறியோரை ஒடுக்குகிறவர்கள் கண்டிக்கப்படுகின்றனர். கள்ள எடை போடு பவர்களையும், கலப்படப் பொருள் விற்போரையும் இறைவாக்கினர் கண்டிகின்றார். அவர் கள் அனைவரும் ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டுமென்பதைச் சுட்டிக் காட்டு கிறார். நாமும் பிறரை ஏமாற்றாமல் நன்மை செய்பவர்களாய் வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்கு உகந்த வகையில் கண்ணியம் உள்ளவர்களாகவும் பிறருக்காக செபிப்பவர்களாகவும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். எல்லா மனிதரும் மீட்புப் பெற, கடவுளைப் பற்றிய உண்மையை அவர்கள் அறியச் செய்வது நம் கடமை என்பதை உணர்த்துகிறார். அன்புக்கு எதிரான அனைத்தை யும் விலக்கிவிட்டு, தூய உள்ளத்தோடு இறைவேண்டலில் ஈடுபட நாம் அழைக்கப்படுகி றோம். கிறிஸ்தவ அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், இயேசுவின் மீட்புப் பணியைத் தொடர வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வழிகாட்டும் தலைவரே இறைவா, 
  உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, உம் திருவுளப்படி உண்மையுடன் பணியாற்ற அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகாளும் அரசரே இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள், மக்களின் வாழ்க்கை நலனுக்கும் இயற் கைச் சூழலின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நீதியுடன் ஆட்சி நடத்த
உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வளிக்கும் மீட்பரே இறைவா,
 
நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும், மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் ஆர்வமுள்ள நல்ல தலைவர் களை எம் நாட்டில் உருவாக்கித் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் மருத்துவரே இறைவா,
   பசித் தீர்க்கும் பணியும்,
குணம் அளிக்கும் பணியும் வியாபாரமாக மாறிவிட்ட இந்த உலகில், அன்பும் நேர்மையும் பெருகவும், வெறுப்புணர்வும் அநீதியும் வன்முறைகளும் ஒழியவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. நிறைவாகும் நிம்மதியே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தங்கள் கிறிஸ்தவக் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றவும், உமது நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ்ந்து இறையரசைக் கட்டி எழுப்பவும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.