Thursday, September 5, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு இயேசுவை பின் தொடரும் நாம், அவருடைய சீடர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவுக்காக தம் உறவுகளையும், உடைமைகளையும், உயிரையும் இழக் கத் தயாராக இருப்பவரே அவருடைய சீடராக மாற முடியும். தம் சிலுவையைச் சுமக்கா மல் இயேசுவை பின்செல்பவர் எவரும் அவருக்குச் சீடராய் இருக்க முடியாது. பணத்துக் காகவும், புகழுக்காகவும் இயேசுவை பின்தொடர விரும்பும் எவரும் அவரது சீடராக முடி யாது என்பதே நாம் இன்று கற்க வேண்டியப் பாடம். அன்னை மரியாவைப் போன்று கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கும் மனநிலை நம்மில் உருவாக வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் திட்டத்துக்கு நம்மை தாழ்ச்சியோடு அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கற்பிக்கிறது. மண்ணுலகில் உள்ளவற்றையே முழுமை யாக உணர முடியாமல் இருக்கும் நாம், விண்ணுலகில் இருப்பவற்றை கண்டுபிடிக்க ஆசை கொள்வதால் எந்த பயனும் இல்லை என்பதை முழுமனதோடு ஏற்க அழைக்கப்படு கிறோம். ஆண்டவரின் ஆவியால் கிடைக்கும் ஞானத்தாலே நாம் கடவுளுக்கு உகந்த வற்றை கற்றுக் கொள்கிறோம். தூய ஆவியின் வழிநடத்துதல் நம்மை மீட்பின் பாதை யில் அழைத்துச் செல்ல வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பின்தொடர்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் பொருட்டு நன்மை செய்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். புனித பவுலை இயேசுவின் நற்செய்திக்காக துன்புறும் கைதியாக இங்கு நாம் காண்கிறோம். ஒனேசிம் என்ற அடிமையை உடன் சகோ தரனாக ஏற்றுக் கொள்ளுமாறு அவரது தலைவரான பிலமோனிடம் பவுல் பரிந்துரைப் பதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் பொருட்டு அனைவருக்கும் நன்மை செய்பவர்களாக வாழ்ந்து அவரது உண்மை சீடராக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நன்மைகளின் ஊற்றாம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவின் வழியில் அனைவருக்கும் நன்மை செய்பவர்களாகவும், நற்செய்திக்காக அனைத்தையும் இழக்கும் துணிவுள்ளவர்களாகவும் வாழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,
  உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் புகழையும், பணத்தையும் நாடிச் செல்லாமல், உலகின் நற்செய்தியாம் இயேசுவை தங்கள் வாழ்வால் பறைசாற்றும் சீடர்களாக வாழத் துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் ஊற்றாம் இறைவா,
 
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் உமது மேன்மையை அறிந்துகொள்ள உதவும் கருவிகளாக வாழும் ஞானத்தை இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழங்கி உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நலந்தரும் ஊற்றாம் இறைவா,
   போராலும், வன்முறையாலும் உலகை ஆள நினைப்பவர்கள் மனம் திரும்பவும், உமது அன்பின், அமைதியின், உண்மையின் அரசு உலகெங்கும் நிறுவப்படவும் அருள்புரியுமா
று உம்மை மன்றாடுகிறோம்.
5. அருளின் ஊற்றாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரிலும், கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழந்து, சிலுவையுடன் அவரைப் பின்தொடரும் சீடத்துவ மனநிலையை உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.