பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
எல்லாம் வல்ல இறைவன் கூறுவது: "சீயோன் குன்றின்மீது இன்பத்தில்
திளைத்திருப் போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள்
சிறந்த இனத் தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடிவருமளவுக்குப்
பெருமை வாய்ந்தவர் களே! உங்களுக்கு ஐயோ கேடு!
தீய நாளை இன்னும் தள்ளி வைப்பதாக நீங்கள் நினைக் கின்றீர்கள்; ஆனால்
வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத் தாலான கட்டிலில்
பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும்
ஆட் டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும்
உண்போருக்கும் ஐயோ கேடு!
அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய
இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம்
குடிக் கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள்.
ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக்
களிப்பும் இல்லா தொழியும்.''
இரண்டாம் வாசகம்: 1 திமொத்தேயு 6:11-16
கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு
என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே
அழைக்கப்பட்டி ருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில்
விசுவாசத்தை சிறப்பாக அறிக்கையிட்டாய்.
அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந் தியு
பிலாத்துவின் முன் விசுவாசத்தை சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின்
முன்னிலையிலும் உனக்கு கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
தோன் றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை
அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள்
அவரைத் தோன்றச் செய்வார்.
கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர்.
அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக்
கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும்
ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 16:19-31
சிந்தனை: வத்திக்கான் வானொலி