Thursday, October 3, 2013

அக்டோபர் 6, 2013

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்யும் பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, துணிவுடன் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம். கடவுள் மீதும், நம் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் மீதான நம்பிக் கையை நமது வாழ்வாக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அபக்கூக் வழியாக பேசும் இறைவன், நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் என உறுதி அளிக்கிறார். வன் முறையின் அழிவுக்காக நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தால், அது நிறைவே றியே தீரும் என்ற வாக்குறுதி ஆண்டவரால் வழங்கப்படுகிறது. துணைவேண்டிக் கூக்குர லிடுவோரின் மன்றாட்டுக்கு ஆண்டவர் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையைப் பெற நாம் அழைக்கப்படுகிறோம். நமது நம்பிக்கையால் வாழ்வு பெற வரம் வேண்டி, இந்த வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமக்கு வழங்கப்பட்டுள்ள கட வுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறார். வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தை நமக்கு வழங்கியுள்ள ஆண்டவருக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு, கடவுளின் வார்த்தையை வாழ்வாக்க புனித பவுல் நம்மை அழைக்கிறார். தூய ஆவியின் தூண்டுதலால் நம்பிக்கைக்குரிய வாழ்வு வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா, 
  திருச்சபையை வழிநடத்துவதற்காக நீர் தேர்ந்தெடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது பணியைச் செய்வதில் கடமை தவறாதவர் களாக திகழச் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் உறைவிடமே இறைவா,
  அச்சமும் கலக்கமும் நம்பிக்கையின்மையும் காணப்படும் இவ்வுலகில், மக்களிடையே நம்பிக்கையை விதைத்து இறையரசை நிறுவும் தலைவர்கள் தோன்றத் துணைபுரிந்திட
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நம்பிக்கையின் நிறைவே இறைவா,
 
எதிர்காலத்தை உமக்குரியதாக மாற்றும் நல்ல தலைவர்கள் எம் நாட்டில் உருவாகவும், பிரிவினை, வன்முறை, தீவிரவாதம் போன்ற தீமைகள் நாட்டில் இருந்து மறையவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கை தருபவரே இறைவா,
   வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று 
உம்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கை நாயகரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது நம்பிக்கைக் குரிய மக்களாக வாழ்ந்து உமக்கு சான்று பகரத் தேவையான அருள் வரங்களைப் பொழிந் திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.