பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
அந்நாள்களில் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.
மோசே யோசுவாவை நோக்கி, ``நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை
நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில்
பிடித்த வாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்'' என்றார். அமலேக்கியரை எதிர்த்து போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே,
ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர். மோசே தம் கையை
உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ர யேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத்
தளர விட்டபோதெல்லாம் அமலேக்கி யர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள்
தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல் லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார்.
அவர் கை களை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர்.
இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா
அமலேக் கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 3:14-4:2
அன்பிற்குரியவரே, நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்;
யாரிடம் கற் றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல்
திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய்.
அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி
நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல்
பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும்
நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர்
தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு
அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை
முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணை யிட்டுக் கூறுவது:
இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட் டாலும் இதைச்
செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு;
மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
நற்செய்தி வாசகம்: லூக்கா 18:1-8
சிந்தனை: வத்திக்கான் வானொலி