பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க
யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு
பிள்ளை யின் உடலைப் போல் மாறினது.
பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி
வந்து, "இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல் லையென இப்போது
உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்ப ளிப்பை ஏற்றுக்
கொள்ளும்" என்றார்.
அதற்கு எலிசா, "நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்" என்றார்.
நாமான் எவ்வளவோ வற்பு றுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது நாமான்
அவரை நோக்கி, "சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு
கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு
அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு
தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்" என்றார்.
இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 2:8-13
அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று
எழுந் தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே
நான் குற் றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன்.
ஆனால் கடவுளின் வார்த் தையைச் சிறைப்படுத்த முடியாது.
தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள
மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத் தையும் பொறுத்துக்
கொள்கிறேன்.
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: 'நாம் அவரோடு இறந்தால், அவரோடு
வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய் வோம்; நாம் அவரை
மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவ ரெனினும் அவர்
நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ
அவர்களுக்கு நினைவுறுத்து.
நற்செய்தி வாசகம்: லூக்கா 17:11-19
சிந்தனை: வத்திக்கான் வானொலி