Saturday, October 26, 2013

அக்டோபர் 27, 2013

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 35:12-14,16-18
   ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்: தீங்கிழைக் கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணி யார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார். ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில் களை எட்டும். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல் லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.
இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 4:6-8,16-18
   அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக் கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்று வார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் முதன்முறை வழக் காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை: எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலு வூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 18:1-8
   அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: "இருவர் இறைவனிடம் வேண் டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்." இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடை யவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, October 24, 2013

அக்டோபர் 27, 2013

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
செபிப்பவர்களே,
   பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் வேண்டுதல்களை சமர்ப்பிக்கும்போது நம் மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நம் பெருமையை நாடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நாம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவரைப் போற்றவும், அவரது இரக்கத்தை மன்றாடவும் இயேசு நம்மை அழைக்கிறார். கடவுளிடம் பிறரைப் பற்றி குறை கூறுவதையும் அவர் கண்டிக்கிறார். ஆண்டவர் முன்பு நம் தாழ்நிலையை உணர்ந்தவர்களாய், அவரது இரக்கத்தை அனுபவிக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், யாருடைய மன்றாட்டை ஆண்டவர் கேட்பார் என்று நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது. அனைவருக்கும் நடுவரான ஆண்டவர் ஒருதலைச் சார்பாய் நடந்துகொள்ள மாட்டார் என்பதை உணர அழைப்பு விடுக்கிறது. ஏழைகள், கைம்பெண் கள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவரின் வேண்டுதலுக்கும் அவர் பதில் அளிக்கிறார் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவோர் மற்றும் தங்களைத் தாழ்த்துவோரின் மன்றாட்டுகள் ஆண்டவரை எட்டும் என்ற உறுதி தரப்படுகிறது. நமது தாழ்ச்சியால் கடவுளின் அருளை நிறைவாகப் பெற வரம் வேண்டிஇவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தனது வாழ்வையே செபமாக மாற்றியது பற்றி எடுத்துரைக்கிறார். விசுவாசப் போராட்டத்தில் நம்மையே பலியாகப் படைக்க அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் வாழும்போது, நீதியுள்ள நடுவரான அவர் தரும் வெற்றி வாகையைப் பெற்றுக்கொள் ளலாம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கும் போது, அவர் அனைத்து வகையான தீங்கில் இருந்தும் விடுவிப்பார் என்று புனித பவுல் நமக்கு கற்பிக்கிறார். நமது தூய வாழ்வின் மூலம் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பவர் களாக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அருள் பொழிபவரே இறைவா, 
   இறைமக்களின் அருள் வாழ்வைப் புதுப்பித்து, திருச்சபையை சீரமைக்கும் அருளை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவர் மீதும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவரே இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெருமைகளை நாடாமல், இயற்கையின் வளங்களைப் பாதுகாத்து மக்களுக்கு வாழ்வளிக்க உதவ
வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆற்றல் அளிப்பவரே இறைவா,
 
எம் நாட்டு மக்களை உம்மை நோக்கியப் பாதையில் வழிநடத்தும் ஆற்றலை கிறிஸ்த வர்கள் அனைவருக்கும் அளித்து, செப வாழ்வில் உறுதிபடுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. உதவி செய்பவரே இறைவா,
  
ஏழைகள், கைம்பெண்கள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், வீடிழந்து நிற் போர், கடும் நோயால் தவிப்போர் அனைவருக்கும் உதவி வழங்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம் அருள்பவரே இறைவா,
   உம் முன்னிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ்ந்து, உமது இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வரத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் அருள வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, October 19, 2013

அக்டோபர் 20, 2013

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 17:8-13
   அந்நாள்களில் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, ``நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்த வாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்'' என்றார். அமலேக்கியரை எதிர்த்து போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ர யேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கி யர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல் லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கை களை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக் கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 3:14-4:2
   அன்பிற்குரியவரே, நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற் றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார். கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணை யிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட் டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

நற்செய்தி வாசகம்: லூக்கா 18:1-8
   அக்காலத்தில் சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண் டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம் பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப் பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.'' பின் ஆண்டவர் அவர்க ளிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங் காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, October 17, 2013

அக்டோபர் 20, 2013

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
செபிப்பவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நேரிய உள்ளத்தோடு மன்றாடும் போது, அவர் நம் செபத்துக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையைப் பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் வேண்டுகோளுக்கு இவ்வுலக அதிகாரிகள் பதில் அளிப்பதைக் காட்டிலும், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்டவர் விரைந்து செயல்படுவார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். "தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்க ளுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்து வாரா?" என்ற இயேசுவின் கேள்வியை மனதில் இருத்துவோம். நம் வேண்டுதலுக்கு கட வுள் உரிய பதில் தருவார் என்ற நம்பிக்கையோடு நமது வேண்டுதல்களை ஆண்டவரிடம் சமர்ப்பித்து, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், அமலேக்கியரை எதிர்த்துப் போரிட்ட மோசேயின் செபத் தால் இஸ்ரயேலர் வெற்றியடைந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. 'மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்' என்று எழுதப்பட்டிருப் பதைக் காண்கிறோம். அவ்வாறே, கடவுளை நோக்கி நம் உள்ளத்தை உயர்த்தும் போதெல் லாம் நாம் வெற்றி அடைகிறோம், நாம் மனம் தளரும் போதெல்லாம் தோல்வியை சந் திக்கிறோம். கடவுள் மீது நம்பிக்கையிழந்து சோர்ந்து போகும் நேரத்தில் அவரது அருட் கரம் நம்மை வழிநடத்த வேண்டிஇவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
செபிப்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுள் மீதான நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருக்க அழைப்பு விடுக்கிறார். மறைநூலை வாசிக்கும் நாம் கற்பிப்ப தற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழ பயிற்றுவிப்பதற்கும் ஞானம் பெற அழைக்கப்படுகிறோம். வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இறைவார்த் தையை அறிவிப்பதில் கருத்தாயிருக்குமாறு புனித பவுல் நம்மை அழைக்கிறார். நாம் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் நிலைத்திருந்து செப வாழ்வில் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிலைத்திருப்பவரே இறைவா, 
  திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு செப வாழ்வில் நிலைத்திருக்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி வழங்குபவரே இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உண்மையிலும் நேர்மையிலும் நிலைத்தி ருந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் சீரிய முறையில் நீதி வழங்க உதவ
வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. உதவி செய்பவரே இறைவா,
 
எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் உம் வழியில் நடக்க உதவி செய்பவர்களாய் மாற உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   பல்வேறு பிரச்சனைகளாலும், நோய்களாலும், அடக்குமுறைகளாலும் துன்புறுவோ ருக்கு இரக்கம் காட்டும் மனதை மக்கள் அனைவருக்கும் வழங்கி உதவ வேண்டுமென
உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அருகில் வசிக்கும் மக்களுக்கு உமது அருளால் புதுவாழ்வு கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, October 12, 2013

அக்டோபர் 13, 2013

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 2 அரசர்கள் 5:14-17
   அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளை யின் உடலைப் போல் மாறினது. பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, "இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல் லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்ப ளிப்பை ஏற்றுக் கொள்ளும்" என்றார். அதற்கு எலிசா, "நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்" என்றார். நாமான் எவ்வளவோ வற்பு றுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது நாமான் அவரை நோக்கி, "சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்" என்றார்.
இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 2:8-13
   அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந் தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற் றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த் தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத் தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: 'நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய் வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவ ரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.

நற்செய்தி வாசகம்: லூக்கா 17:11-19
   அக்காலத்தில் இயேசு எருசலேமுக்கு போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "நீங் கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் புறப் பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப் பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தி னார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்க வில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம் மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார். பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, October 10, 2013

அக்டோபர் 13, 2013

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நன்றியுள்ளவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் உதவியை நம்பிக்கையோடு கேட்கவும், பெற்ற நன்மைகளுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்தவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் மட்டும் கட வுளைத் தேடுவது சரியல்ல என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவை களை நிறைவேற்றிக்கொள்ள அல்ல, இறைவனின் விருப்பத்தை முதன்மையாக நிறை வேற்ற இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். குணமடைந்த பத்து தொழுநோயாளர்களில் சமாரியரான ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற இயேசுவின் கேள்வி அவர் நன்றியை எதிர்ப்பார்ப்பவர் என் பதை நமக்குத் தெளிவாக்குகிறது. இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி மறக் காதவர்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
நன்றியுள்ளவர்களே,
   இன்றைய முதல் வாசகம், நாமானின் தொழுநோய் குணமானதைப் பற்றி எடுத்துரைக் கிறது. இறைவாக்கினர் சொல்லைக் கேட்டு யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழுந்ததால் நாமான் நலமடைந்ததைக் காண்கிறோம். தொழுநோயால் பொலிவிழந்து காணப்பட்ட அவரது உடல், குழந்தையின் உடலைப் போன்று மாறியதாக வாசகம் எடுத்துரைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாமானின் நன்றியுணர்வு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவர் எலிசாவுக்கு நன்றி கூறியதுடன், ஆண்டவருக்கு உண்மை உள்ளவராய் நடப்பதாக வாக்களிக்கிறார். நாமும் ஆண்டவருக்கு நன்றி உள்ளவர்களாய் வாழ வரம் வேண்டிஇவ் வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நன்றியுள்ளவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இயேசுவோடு நிலைத்திருப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி குறித்து எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் நற்செய்திக்காகவும், ஆண்ட வரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மீட்புக்காகவும் புனித பவுல் ஏற்றுக்கொண்ட துன்பம் இங்கே விளக்கப்படுகின்றது. கிறிஸ்துவோடு இறந்து அவரோடு வாழ்வதற்கும், கிறிஸ்து வோடு நிலைத்திருந்து அவரோடு மாட்சியுடன் ஆட்சி செலுத்தவும் நாம் அழைக்கப்படுகி றோம். கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுள்ள நாம், அவரையே நமது வாழ்வாக்க வரம் வேண்டி, வ்வாசகத்துக்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நன்மைகளின் நாயகரே இறைவா, 
  திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது பணியைச் செய்வதில் தளரா மனதுடன் செயலாற்றவும், நீர் வழங்கியுள்ள பொறுப்புகளை நன்றியுணர்வுடன் நிறைவேற்றவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் உறைவிடமே இறைவா,
  அமைதியற்ற இந்த உலகில் உமது அன்பை விதைக்கும் கருவிகளாக உலக நாடுகளின் தலைவர்களை உருவாக்கி, உமது படைப்புகளை நன்றியுணர்வுடன் பாதுகாக்கும் திறனை அவர்களுக்கு அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் இருப்பிடமே இறைவா,
 
எம் நாட்டை ஆட்சி செய்து வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும் தன்னலம் துறந்து, மக்களிடையே நீதியை நிலைநாட்டும் வேட்கையுடனும் உமக்கு நன்றியுர்வுடனும் பணியாற்ற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலன்களின் ஊற்றே இறைவா,
   இவ்வுலகில் பல்வேறு நோய்களால் வருந்துவோர் நம்பிக்கையுடன் உம்மைத் தேடி வரவும், உமது குணமளிக்கும் வல்லமையால் நலம் பெற்று உமக்கு நன்றி செலுத்தவும் அருள வேண்டுமென்று 
உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கத்தின் நிறைவே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக வாழவும், உமது அருளால் அனைத்து விதமான நன்மைகளை யும் பெற்று உமக்கு நன்றி உள்ளவர்களாகத் திகழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, October 5, 2013

அக்டோபர் 6, 2013

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு

முதல் வாசகம்: அபக்கூக்கு 1:2-3,2:2-4
   ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற் காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக் காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத் திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே உள்ளத்திலே நேர் மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 1:6-8,13-14
   அன்பிற்குரியவரே, உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்து கிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பா டும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர் வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடை யத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத் தில் என்னுடன் பங்குகொள். கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என் னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடி கொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.


நற்செய்தி வாசகம்: லூக்கா 17:5-10
   அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந் தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கட லில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரி டம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்க லாம்' என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாள ருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற் றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய் தோம்' எனச் சொல்லுங்கள்."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, October 3, 2013

அக்டோபர் 6, 2013

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்யும் பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, துணிவுடன் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம். கடவுள் மீதும், நம் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் மீதான நம்பிக் கையை நமது வாழ்வாக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அபக்கூக் வழியாக பேசும் இறைவன், நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் என உறுதி அளிக்கிறார். வன் முறையின் அழிவுக்காக நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தால், அது நிறைவே றியே தீரும் என்ற வாக்குறுதி ஆண்டவரால் வழங்கப்படுகிறது. துணைவேண்டிக் கூக்குர லிடுவோரின் மன்றாட்டுக்கு ஆண்டவர் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையைப் பெற நாம் அழைக்கப்படுகிறோம். நமது நம்பிக்கையால் வாழ்வு பெற வரம் வேண்டி, இந்த வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமக்கு வழங்கப்பட்டுள்ள கட வுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறார். வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தை நமக்கு வழங்கியுள்ள ஆண்டவருக்கு சான்று பகர நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு, கடவுளின் வார்த்தையை வாழ்வாக்க புனித பவுல் நம்மை அழைக்கிறார். தூய ஆவியின் தூண்டுதலால் நம்பிக்கைக்குரிய வாழ்வு வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா, 
  திருச்சபையை வழிநடத்துவதற்காக நீர் தேர்ந்தெடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது பணியைச் செய்வதில் கடமை தவறாதவர் களாக திகழச் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கையின் உறைவிடமே இறைவா,
  அச்சமும் கலக்கமும் நம்பிக்கையின்மையும் காணப்படும் இவ்வுலகில், மக்களிடையே நம்பிக்கையை விதைத்து இறையரசை நிறுவும் தலைவர்கள் தோன்றத் துணைபுரிந்திட
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நம்பிக்கையின் நிறைவே இறைவா,
 
எதிர்காலத்தை உமக்குரியதாக மாற்றும் நல்ல தலைவர்கள் எம் நாட்டில் உருவாகவும், பிரிவினை, வன்முறை, தீவிரவாதம் போன்ற தீமைகள் நாட்டில் இருந்து மறையவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கை தருபவரே இறைவா,
   வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று 
உம்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கை நாயகரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது நம்பிக்கைக் குரிய மக்களாக வாழ்ந்து உமக்கு சான்று பகரத் தேவையான அருள் வரங்களைப் பொழிந் திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.