பொதுக்காலம் 32-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் முப்பதிரண்டாம் ஞாயிறு
திருப்பலியை
சிறப்பிக்க உங்கள்
அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாகிய நாம் அனைவ ரும் உயிர்த்தெழுதலின் மக்களாக வாழ இன்றைய
திருவழிபாடு நமக்கு
அழைப்பு விடுக் கிறது. இவ்வுலக வாழ்வில் அதிக ஆர்வம் காட்டாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இறைவன் தரும் நிலை வாழ்வை நமது சந்தேகங்களாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் இழந்துவிடாதவாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். நாம் உயிர்ப்பின் மக்களாய், வானதூதரைப் போன்று பேரின்ப வாழ்வில் பங்குபெறத் தயாராகுமாறு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, வாழ்வோரின் கடவுள் தரும் நிலைவாழ்வுக்கு நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம், கடவுளின் திருச்சட்டத்துக்காக தங்கள் உயிரைக் கையளிக் கத் துணிந்த ஏழு சகோதரர்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. இவ்வுலக வாழ்வு முடிந்தா லும், இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசராம் கடவுள் நம்மை உயிர்த்தெழச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்த சகோதரர்கள் பிரதிபலிக்கிறார்கள். புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையால், கடவுளுக்காக உயிரையும் இழக் கும் துணிவு இந்த சகோதரர்களிடம் காணப்படுவதை நம்மால் உணர முடிகிறது. கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்ற நம்பிக்கைக்கு மற்ற மனிதர் முன்னிலையில் சாட்சியாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
இறைமக்கள் மன்றாட்டு:
1. என்றும் வாழ்பவரே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும், நீர் அளிக்கும் உயிர்ப் பின் வாழ்வை இறைமக்கள் உரிமையாக்க உழைக்குமாறு உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. நிலைத்திருப்பவரே இறைவா,
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இவ்வுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையானவற்றை செய்ய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இவ்வுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையானவற்றை செய்ய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. உயிர் அளிப்பவரே இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும் அழிவுக்குரிய சிலை வழிபாட்டில் இருந்து விடுதலை பெற்று, உயிர்ப்பின் வாழ்வைப் பற்றி அறிந்து மனந்திரும்ப உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
எம் நாட்டு மக்கள் அனைவரும் அழிவுக்குரிய சிலை வழிபாட்டில் இருந்து விடுதலை பெற்று, உயிர்ப்பின் வாழ்வைப் பற்றி அறிந்து மனந்திரும்ப உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வு தருபவரே இறைவா,
இல்லாமை, இயலாமை, முதுமை, நோய் போன்றவற்றால் துன்பத்தில் தவிக்கும் மக்கள் அனைவரும், உமது அருளால் புதுவாழ்வைக் கண்டடைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
இல்லாமை, இயலாமை, முதுமை, நோய் போன்றவற்றால் துன்பத்தில் தவிக்கும் மக்கள் அனைவரும், உமது அருளால் புதுவாழ்வைக் கண்டடைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் ஊற்றே இறைவா,
எம்
பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் நேரிய வழியில் நடந்து, நீர் தரும் உயிர்ப்பின் வாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.