கிறிஸ்து அரசர் பெருவிழா
அந்நாள்களில் இஸ்ரயேலின்அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம்
கூறியது: "நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி
செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். 'நீயே என்
மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்'
என்று உமக்கே ஆண்டவர் கூறினார்." இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர்
தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார்.
இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப் பொழிவு செய்தனர்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 1:12-20
சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர்
இறைமக் களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத்
தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை
விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான்
நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில்
விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகா தவை, அரியணையில்
அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும்
அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழி யாய் அவருக்காகப்
படைக்கப்பட்டன.
அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.
திருச்சபையாகிய உடலுக்கு தலையும் தொடக் கமும் அவரே. எல்லாவற்றுள்ளும்
முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு
நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு
சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை
அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புர வாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 23:35-43
சிந்தனை: வத்திக்கான் வானொலி