பொதுக்காலம் 31-ம் ஞாயிறு
ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசி போலவும்
நிலத் தின்மீது விழும் காலைப் பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம்
முழுவதும் உம் கண் முன் உள்ளது. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்
மீதும் இரங்குகின்றீர்; மனி தர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு
மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த் தும் பாராமல் இருக்கின்றீர்.
படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும்
வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப்
படைத் திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க
முடியும்? அல்லது, உம் மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான்
காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே, உயிர்கள் மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும்
வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன. உம்முடைய அழியா ஆவி
எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிதுசிறிதாய்த்
திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய் கிறார்களோ அவற்றை
நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து
விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.
இரண்டாம் வாசகம்: 2 தெசலோனிக்கர் 1:11-2:2
சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகி றோம்.
நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக!
உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு
செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம்
ஆண்டவரா கிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக! சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும்
அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது:
ஆண்டவரு டைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள்
எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே
மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 19:1-10
சிந்தனை: வத்திக்கான் வானொலி